இந்த அழகான பெண் ஒரு பெண்ணே இல்லை.. ஆனா மாசம் 9 லட்சம் வருமானம்.. இதுவொரு AI ரோபோனு சொன்னா நம்புவீர்களா?
ஆர்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் (Artificial Intelligence) மூலம் பல படைப்புகள் உருவாக்கப்பட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறது. சிலர் இதனை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர். அப்படி ஆர்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸை பயன்படுத்தி ஒருவர் மாதம் ரூ. 9 லட்சம் வரை சம்பாதிக்கிறார் என்றால் நம்புவீர்களா?
நாம் கற்பனையில் மட்டுமே பார்த்து வந்தவற்றை நிஜமாக்கும் ஆற்றல் ஆர்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸிற்கு உள்ளது. இந்த ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் மூலம் நன்மை தீமை என்று இரண்டுமே நிகழ்ந்து வருகிறது. இதனை சரியாக பயன்படுத்தினால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதற்கான ஒரு உதாரணம் தான் ஸ்பெயினை சேர்ந்த ரூபென் க்ரூஸ்.

க்ரூஸ் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு டிசைனர். இவர் தனது நிறுவனமான "தி க்லூலெஸ்" (The Clueless) உடன் இணைந்து உருவாக்கிய ஒரு ஏஐ மாடல் தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. க்ரூஸ் ஒரு பத்திரிக்கை சந்திப்பில் பேசியபோது, "டிசைன்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் கூட, இன்ஃப்லூயன்சர்கள் (Influencers) மற்றும் மாடல்களின் செயல்பாடுகளால் தொழிலில் பாதிப்புகள் ஏற்படுகின்றது".
"மனிதர்கள் பல விதமாக இருக்கின்றனர். சிலர் காசுக்காக மட்டுமே மாடலாக போஸ் கொடுக்க வருவார்கள், சிலருக்கு ஈகோ பிரச்சனைகள் இருக்கும், சிலர் எரிச்சலூட்டும் விதத்தில் நடந்து கொள்வார்கள். மனிதர்களை கையாள்வது கடினம் என்பதை நாங்கள் உணர்ந்த போது தான் இந்த யோசனை எங்களுக்கு தோன்றியது" என்று அவர் கூறினார்.
அது என்ன யோசனை? இவர் தனக்கு தேவையான மாடலை ஆர்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் கொண்டு உருவாக்கியுள்ளார். ஆர்டிஃபிசியல் இன்டெலிஜன்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஐடானா லோபஸ் (Aitana Lopez) என்ற இந்த 25 வயது ஸ்பானிஷ் மாடலுக்கு பிரபல சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராமில் (Instagram) சுமார் 1.5 லட்சம் ஃபாலோயர்கள் (Followers) உள்ளனராம்.
இதன் மூலம் மட்டுமே இந்த ஏஐ மாடல் மாதம் பத்தாயிரம் யூரோ, அதாவது இந்திய மதிப்பில் ரூ. 9 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறது. இந்த ஏஐ மாடலை உண்மையான மனிதர் என்பதை உணர்த்த அதற்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டுள்ளது. எனவே, முதலில் க்ரூஸ் ஐடானாவை ஒரு ஃபிட்னஸ் எந்தூசியாஸ்ட் (Fitness Enthusiast) என்று தான் உருவாக்கியுள்ளார்.
அவர்களது இணைதளத்தில் ஐடானாவை சுதந்திரமான உறுதியான பெண்மணி, மற்றவர்களுக்கு உதவிசெய்யும் மனப்பான்மை உள்ளவர் என்று குறிப்பிட்டுள்ளனர். ஐடானாவின் இன்ஸ்டாகிராம் பையோவில் பார்சிலோனா, கேமர், ஃபிட்னஸ், கோஸ்ப்ளே, லவ்வர் என்று அவரைப்பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
க்ரூஸின் இந்த விளக்கத்தை பார்த்து ஐடானா உண்மையான பெண் என்று நினைத்து பலர் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ்கள் அனுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார். சாதாரண மக்கள் முதல் புகழ்பெற்ற செலிப்ரிட்டி வரை ஐடானாவை வெளியே அழைத்து செல்ல விருப்பம் தெரிவித்து மெசேஜ்கள் வந்த வண்ணம் உள்ளதாம்.
சரி, இந்த ஏஐ மாடல் என்ன தான் செய்யும்? ஒவ்வொரு வாரமும் க்ரூஸ் தனது குழுவுடன் சேர்ந்து ஐடானாவின் அந்த வாரத்திற்கான செயல்பாடுகளை திட்டமிடுவார். இந்த ஐடானா ஒரு மாடல் என்ற அடையாளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், போட்டோ சூட்கள் நடத்தப்படும். ஆனால் இது ஒரு ஏஐ மாடல் என்பதால் ஏஐ டூல்கள் மற்றும் போட்டோஷாப் தான் இதன் சூட்டிங் ஸ்பாட்.
இன்றைய தேதிக்கு பல ப்ராண்டகள், குறிப்பாக விளம்பர நிறுவனங்கள் இந்த ஏஐ மாடலை தேடி வருவதாக க்ரூஸ் கூறுகிறார். ஐடானாவைப் போலவே மையா (Maia) என்ற ஒரு ஏஐ மாடலையும் இந்த க்லூலெஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








