ஒரு ஸ்மார்ட்போனின் பட்ஜெட்டை விட குறைந்த 3டி பட்ஜெட் வீடுகள்.!

3டி பிரிண்ட் வீடுகள் ஒரு குடிசை போன்று அதே நேரத்தில் அதிநவீன வகையில் வடிவமைக்கப்படுகிறது

|

காலப்போக்கில் நாம் முன்னோக்கி நகர்ந்து செல்லும்போது நாம் குடியிருக்கும் வீடுகள் சிறப்பாகவும் விலை உயர்ந்ததாகவும் இருக்கும். விரைவில் 3டி பிரிண்டிங் நிறுவனமான WASP என்ற நிறுவனம் புதிய டெக்னாலஜி மூலம் வீடுகளை விரைவாக கட்டி முடிக்கவுள்ளன.

3டி பிரிண்ட் வீடுகள் ஒரு குடிசை போன்று அதே நேரத்தில் அதிநவீன வகையில் வடிவமைக்கப்படுகிறது. கான்கிரீட் மற்றும் களிமண் கலந்த ஒரு கலவையில் இந்த 3டி பிரிண்டட் வீடுகள் கட்டப்படுகிறது. இந்த வீடுகளை கட்ட வெறும் $1000 மட்டுமே செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு ஸ்மார்ட்போனின் பட்ஜெட்டை விட குறைந்த 3டி பட்ஜெட் வீடுகள்.!

இந்த வீடுகளை கட்ட களிமண், நெல் உமி, போன்றவைகள் பயன்படுத்தப்படுவதாக WASP நிறுவனத்தின் சி.இ.ஓ மாஸ்ஸிமோ மொரெட்டி தெரிவித்துள்ளார். இந்த கலவைகளை கலப்பதற்காக இயற்கையான ஃபைபர்கள் கொஞ்சம் மிக்ஸ் செய்யப்படுவதாகவும், இந்த கலவை அதிக வலுவான சுவர்களை அமைக்கும் என்றும் மொரட்டி கூறுகின்றார். இந்த கலவை ஒரு வலுவான சுவரை மட்டுமின்றி இதன் பிளாஸ்டிக் தன்மை நல்ல வடிவத்தையும் சுற்றுச்சூழலையும் கொடுக்கின்றது

மேலும் இந்த கான்க்ரீட் கலவை அடித்தளத்திற்கும் அதன் பின்னர் ரூஃப் வரும்போது டிம்பர் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிகிறது. மேலும் 215 சதுர அடி கொண்ட ஒரு வீட்டை கட்டி முடிக்க இந்த டெக்னாலஜிக்கு வெறும் பத்து நாட்கள் போதுமானது. அதன்பின்னர் வீட்டை அழகுபடுத்த வேண்டுமானால் கூடுதல் காலம் ஆகலாம். மேலும் இந்த டெக்னாலஜி மூலம் வீடு கட்டுவதால் வீட்டின் பெரும் பட்ஜெட்டான லேபர் செலவு முழுக்க மிச்சமாகிறது. வெறும் $1000 டாலர் செலவில் கிரேன்களே இந்த வீட்டை கட்டி முடித்துவிடுகின்றன

ஒரு ஸ்மார்ட்போனின் பட்ஜெட்டை விட குறைந்த 3டி பட்ஜெட் வீடுகள்.!

இந்த வீடுகள் குறித்து மொராட்டி மேலும் கூறியபோது, 'விலை குறைந்த வீடுகளை கட்ட இது ஒரு நல்ல உதாரணம் என்றும், மற்ற டெக்னாலஜிகளுடன் ஒப்பிடும்போது இதன் பட்ஜெட் மிகவும் குறைந்தது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த வீட்டிற்கு ஹீட்டர் அல்லது ஏர் கண்டிஷனர் தேவையில்லை என்றும் வீட்டின் உள்ளே எப்போதும் ஒருவித சமநிலை வெப்பம் இருக்கும் என்றும் மொரட்டி கூறியுள்ளார். எனவே எந்த பருவம் வந்தாலும் அந்தந்த பருவத்திற்கேற்ப வீட்டின் சுவரின் தன்மை மாறி வெப்பத்தை சமன்படுத்துகிறது.

மேலும் இந்த டெக்னாலஜி மூலம் கட்டப்படும் வீடுகளை மேலும் மேம்படுத்துவது எப்படி, அதிநவீனமாக்குவது எப்படி என்பது குறித்து WASP ஆய்வு செய்து வருவதாகவும், வரும் காலத்தில் இதைவிட அதிக டெக்னாலஜி பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்த துறையில் பணிபுரியும் ஒரே குழு WASP அல்ல என்றும், எஸ்டோனியாவின் எஸ்டோனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் எஸ்தோனியா பல்கலைக்கழக விஞ்ஞானம் தங்களுக்கு மேலும் டெக்னாலஜி அறிவுரைகளை தந்து கொண்டிருப்பதால் ஒரு அழகிய 3டி கட்டிடத்தை உருவாக்க முடிகிறது. இந்த வீடுகள் ஆயில் கலந்த சாம்பல், சிலிக்கான் பொருட்களாலும் கட்டப்படுகிறது. எனவேதான் நார்மலாக கட்டப்படும் வீடுகளின் மதிப்பைவிட இது பத்து மடங்கு குறைவான பட்ஜெட்டில் முடிகிறது.

ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய கலப்பு பொருட்கள் அதிக வெப்ப கடத்துத்திறன் உடையது மட்டுமின்றி மிகுந்த வலுவானதாகவும் உள்ளது. எரிபொருளாக கரி பயன்படுத்தப்படுவது போதிலும், எந்த வகையிலும் வலுவில்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் ஒரே நாளில் இடைவெளிகளில் உள்ள காற்றை வெளியேறி சுவரை மேலும் வலுவானதாக மாற்றும் டெக்னாலஜி இதில் உள்ளது.

Best Mobiles in India

English summary
This 3D-printed house is cheaper than your smartphone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X