36,000 ஆண்டு பழமையானது: கூகுள் மேப்ஸ் மூலம் தெரியவந்த அதிசயம்.! நீங்களே பாருங்க..

|

உலகமே டெக்னாலஜி துறையை திரும்பி பார்த்ததுக்கு கூகுள் மேப்ஸ் வசதியும் ஒரு காரணம் ஆகும். அதாவது ஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர், காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து கொண்டு செல்வோருக்கு
பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ்.

உலகம் முழுவதும் அதிக மக்கள் இந்த கூகுள்

குறிப்பாக உலகம் முழுவதும் அதிக மக்கள் இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் உலகின் ஒவ்வொருமூலையிலும் இருக்கும் இடங்களைவிரல் அசைவில் நம்மால் காணவும் இது வழிவகுக்கிறது. பின்பு சாலைகள் மட்டுமல்லாது தெருக்கள் மற்றும் வீடுகளையும் நம்மால் இந்த அதிநவீன தொழில்நுட்பம் மூலம் காண முடியும்.

இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..இந்தியாவில் NFT வாங்குவது எப்படி? NFTகளை வாங்குவது சிறப்பானது தானா? சந்தேகங்களுக்கான முழு விபரம்..

கூகுள் மேப்பில் ரகசிய குகை ஒன்று

அதேபோல் தொடர்ந்து கூகுள் மேப்ஸ் வசதியில் புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கூகுள் மேப்பில் ரகசிய குகை ஒன்று புலப்படும் வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் அதிக வைரலாகி வருகிறது.

அம்மாடியோவ்.! இது அது ல.! வரவிருக்கும் புதிய OnePlus Nord போன் Oppo A57 போனா? குழப்பம் வேண்டாம் இதான் விஷயம்..அம்மாடியோவ்.! இது அது ல.! வரவிருக்கும் புதிய OnePlus Nord போன் Oppo A57 போனா? குழப்பம் வேண்டாம் இதான் விஷயம்..

36000 ஆண்டுகள்

அதாவது கூகுள் மேப்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் 36000ஆண்டுகள் பழமையான குகைகள் இருக்கும் இடம் தெளிவாக ஜூம் செய்யப்பட்டு காண்பிக்கப்படுகிறது.

காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..காற்றிலிருந்து 13 லிட்டர் தண்ணீர் எடுக்கும் அதிசய முறை.. வறண்ட மக்களின் தாகம் தீர்க்கும் புதிய கண்டுபிடிப்பு..

தெற்கு பிரான்சில்

குறிப்பாக தெற்கு பிரான்சில் அமைந்துள்ள இந்த சாவெட் குகை ஆனது தனித்துவமான ஓவியங்களுக்கு மிகவும் பெயர்போனது. மேலும் இந்த குகையில் பழங்கால மனிதர்கள் வரைந்த ஏராளமான ஓவீயங்கள் காணக்கிடைக்கின்றன.

ஜூலை 6 அறிமுகமாகும் ஆசுஸ் ஆர்ஓஜி போன் 6 தொடர்: இந்த அம்சம் கொண்ட ஒரே கேமிங் ஸ்மார்ட்போன் இதுதான்?ஜூலை 6 அறிமுகமாகும் ஆசுஸ் ஆர்ஓஜி போன் 6 தொடர்: இந்த அம்சம் கொண்ட ஒரே கேமிங் ஸ்மார்ட்போன் இதுதான்?

மேலும் குகையின் பாறைகளில் இருக்கும் இந்த ஓவியங்கள் உலகின் முதல் கலை அருங்காட்சியமாக இருக்கலாம் என்று கூறுகிறது UNESCO அமைப்பு. குறிப்பாக பிரனான்ஸ் நாட்டின் ஆர்டெச் நதிப் படுகையில் அமைந்துள்ள இந்த குகைகள், 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. அதாவது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த குகை, ஓவியங்கள் கலை வரலாற்றில் முக்கிய அங்கமாக இருக்கிறது.

ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை: சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!ரிலையன்ஸ் டிஜிட்டல் மொபைல் தின விற்பனை: சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!

இந்த இடத்தை UNESCO அமைப்பு

அதேபோல் இந்த இடத்தை UNESCO அமைப்பு உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக கடந்த 2014-ம் ஆண்டு அங்கீகரித்தது. மேலும் இந்த குகைகளின் சுவற்றில் 13 வகையான உயிரினங்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்த வீடியோவை கூகுள் மேப்ஸ் நிறுவனம் வெளியிட இணையத்தில் அதிக வைரலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் கூகுள்மேப்ஸ் வசதியில் சுங்கக் கட்டணத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வசதி, கட்டணமில்லா பாதை, சிக்னல்களில் இருக்கும் விளக்குகள் போன்ற பல அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்தது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
This 36,000 year old ‘Art Gallery’ in France can be viewed through Google Maps: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X