100 மணிநேரம் பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் 30 கிராம் எடையுள்ள நெக்பேண்ட் இயர்போன்ஸ்!

|

இயர்போன்ஸ் இல்லை என்றால் உங்களுக்கு உலகம் சுற்றாது என்றால், இயர்போன்ஸை மறந்து விட்ட ஒரு நாள் உங்களுக்கு ஒரு யுகம் போல நகரும் என்றால்.. கவலையை விடுங்கள்! இந்த "வகையின்" கீழ் நீங்கள் மட்டும் இல்லை, ஒரு கூட்டமே உள்ளது!

அதிலும் வழக்கமான ஹெட்செட்டுகள், நெக்பேண்ட் இயர்போன்களாக (Neckband Earphones) மாறினாலும் மாறியது சிலர் அதை 'கோல்ட் செயின்' கணக்காக கழுத்திலேயே தொங்க விட்டுக்கொண்டு அலைவதை, சாப்பிடுவதை, அவ்வளவு ஏன் தூங்குவதை கூட பார்க்க முடிகிறது.

சார்ஜ் செய்ய மட்டுமே கழட்டப்படுகிறது; இனி அதுவும் இல்லை!

சார்ஜ் செய்ய மட்டுமே கழட்டப்படுகிறது; இனி அதுவும் இல்லை!

பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பினை போல நம் பலரின் கழுத்தில் தொங்கும் நெக்பேண்ட் இயர்போன்ஸ் ஆனது 100 மணி நேரம் வரை பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் என்று கூறினால் என்ன நடக்கும்?

சும்மாவே ஒருத்தரும் அதை கழட்ட மாட்டேங்குறாங்க... 100 மணி நேரம் பேட்டரி தாங்கும் என்றால் சொல்லவே வேண்டாம் - சான்ஸே இல்ல!

இப்போது அதே நெக்பேண்ட் ஆனது எடையில் வெறும் 30 கிராம் தான் இருக்கும் என்று கூறினால் என்ன நடக்கும்?

சொல்றது பூரா... கம்பி கட்டுற கதையாவுல்ல இருக்கு!

சொல்றது பூரா... கம்பி கட்டுற கதையாவுல்ல இருக்கு!

அட உண்மைதாங்க! ப்ளாபங்க்ட் (Blaupunkt) நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள BE 100 என்கிற நெக்பேண்ட் இயர்போன்ஸின் எடை வெறும் 30 கிராம் மட்டுமே ஆகும் மற்றும் இது 100 மணி நேரம் வரை பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

போதாக்குறைக்கு, BE 100 இயர்போன்ஸ் ஆனது TurboVolt சார்ஜிங்குடன் வருகிறது. Blaupunkt நிறுவனத்தின் கூற்றுப்படி, இதை வெறுமனே 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் கூட 10 மணிநேரம் வரை பேட்டரி லைஃப் கிடைக்கும்.

OnePlus 10T விலை: தாறுமாறு.. அப்போ தாராளமா வெயிட் பண்ணலாம்!OnePlus 10T விலை: தாறுமாறு.. அப்போ தாராளமா வெயிட் பண்ணலாம்!

அதுமட்டும் இல்ல.. லிஸ்ட்டு பெருசா போய்கிட்டே இருக்கு!

அதுமட்டும் இல்ல.. லிஸ்ட்டு பெருசா போய்கிட்டே இருக்கு!

2 கலர் ஆப்ஷன்களின் கீழ் பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் (Amazon) வழியாக வாங்க கிடைக்கும் இந்த இயர்போன்ஸ் ஆனது எல்சிடி பேட்டரி இண்டிகேட்டர் மூலம் ரியல்டைம் மானிட்டரிங், கால் வைப்ரேஷன் அலெர்ட் மற்றும் இன்-லைன் கண்ட்ரோல்ஸ் போன்ற பல அம்சங்களை வழங்குகிறது. அவைகளை பற்றி விரிவாக காணும் முன், இந்த நெக்பேண்டின் விலையை பார்த்து விடலாம்.

Blaupunkt BE 100 விலை என்ன?

Blaupunkt BE 100 விலை என்ன?

ஜெர்மன் நாட்டை சேர்ந்த இந்நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள அதன் லேட்டஸ்ட் இன்-இயர் நெக்பேண்ட் இயர்போன்ஸின் விலையை ரூ.1,299 என்று நிர்ணயம் செய்துள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இது பிளாக் மற்றும் ப்ளூ என்கிற 2 வண்ண விருப்பங்களின் கீழ் அமேசான் வழியாக வாங்க கிடைக்கிறது.

ஆன்லைனில் Free ஆக CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி? ஓ.. இப்படி ஒரு வழி இருக்கோ!ஆன்லைனில் Free ஆக CIBIL ஸ்கோர் பார்ப்பது எப்படி? ஓ.. இப்படி ஒரு வழி இருக்கோ!

நம்பி வாங்கலாமா?

நம்பி வாங்கலாமா?

வாங்க, இதுல வேற என்னென்ன இருக்குனு பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.

இன்-இயர் டிசைனை பெற்றுள்ள இந்த இயர்போன்ஸ் மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்கும் நோக்கத்தின் கீழ் 10mm ட்ரைவர்கள், ஹை டெஃபினிஷன் சவுண்ட் மற்றும் நாய்ஸ் ஐசோலேஷன் டெக்னாலஜி உடன் வருகிறது.

இதன் கால் வைப்ரேட் அலெர்ட் அம்சம், இயர்போன்ஸ் உங்கள் காதுக்குள் இல்லாதபோதும் அல்லது உங்கள் ஸ்மார்ட்போன் சைலன்ட்டில் இருந்தாலும் கூட, உங்களை அலெர்ட் செய்யும்.

இந்த நெக்பேண்ட் இயர்போன்ஸில் பல இன்-லைன் கண்ட்ரோல்கள் உள்ளன, அதாவது உள்வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க, பேசி முடிக்க அல்லது அதை நிராகரிப்பதற்க்கான பட்டன்கள் மற்றும் பாடல்களை மாற்றுவதற்கான விருப்பம் போன்ற கட்டுப்பாடுகளை வழங்கும்.

8 வாரம் ஸ்டேன்ட்-பை டைம்-ஐ வழங்கும் பேட்டரி!

8 வாரம் ஸ்டேன்ட்-பை டைம்-ஐ வழங்கும் பேட்டரி!

முன்னரே குறிப்பிட்டபடி, BE 100 ஆனது LCD பேட்டரி இண்டிகேட்டருடன் ரியல்டைம் மானிட்டரிங் அம்சத்தையும் கொண்டுள்ளது. இது நெக்பேண்டிலேயே பேட்டரி ஸ்டேட்டஸை பார்க்க வழிவகுக்கும்.

எட்டு வாரங்கள் என்கிற ஸ்டேன்ட்-பை டைம் மற்றும் 100 மணிநேரங்கள் என்கிற பிளேயிங் டைம்-ஐ வழங்குவதற்காக இந்த இயர்போன்ஸ், 600mAh பேட்டரியை பேக் செய்கிறது

தவிர USB Type-C சார்ஜிங் கேபிளுடன் கூடிய TurboVolt சார்ஜிங் தொழிநுட்பத்தையும் வழங்குகிறது. இதன் கீழ் 10 நிமிட சார்ஜிங் மூலம் 10 மணிநேரம் பிளேயிங் டைமை பெறலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த நெக்பேண்ட் இயர்போன்ஸ் எடையில் வெறும் 30 கிராம் மட்டுமே உள்ளது. இது ஸ்பிளாஷ்ப்ரூப் (Splash Proof) உடன் வருவதாகவும் கூறப்படுகிறது.

ரூ.1300 க்கு... இதுக்கு மேல வேற என்ன வேணும்! தாராளமாக இதை வாங்கலாம்!

Photo Courtesy: Blaupunkt Website, Amazon India

Most Read Articles
Best Mobiles in India

English summary
This 30 gram Weight Neckband Earphones offers 100 Hours of Battery Life under Rs 1500 Blaupunkt BE 100

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X