Home
News

அட இது நல்லா இருக்கே.. Jio ஆபர்.. இந்த 2GB பிளானை ரீசார்ஜ் செஞ்சா ரூ.50 திருப்பி கிடைக்கும்.. எந்த பிளான்?

நீங்களொரு ஜியோ (Jio) கஸ்டமராக இருந்தால்.. ரூ.450 க்கு மேல் உள்ள விலை நிர்ணயம் கொண்ட 2ஜிபி பிளான்களின் பக்கமே நீங்கள் செல்ல மாட்டீர்கள் என்றால்.. நிச்சயமாக இந்த ஆபர் உங்களில் கண்களில் பட்டு இருக்காது. ஏனென்றால் இது ரூ.1028 ப்ரீபெய்ட் பிளானின் (Jio Rs 1028 Prepaid Plan) கீழ், நீண்ட காலமாக கிடைக்கும் ஒரு ஆபர் ஆகும்.

ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ரூ.1028 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.50 கேஷ்பேக் (Rs 50 Cashback) கிடைக்கும். சுவாரசியமாக இந்த ஒரே ஒரு ஜியோ திட்டத்தின் மீது மட்டுமே இந்த சலுகை அனுக கிடைக்கிறது. இந்த திட்டம் 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி (84 Days Service Validity) உடன் வருகிறது.

Jio ஆபர்.. இந்த 2GB பிளானை ரீசார்ஜ் செஞ்சா ரூ.50 திருப்பி கிடைக்கும்!

நன்மைகளை பொறுத்தவரை இது டெய்லி 2ஜிபி டேட்டா என மொத்தம் 168ஜிபி டேட்டாவை வழங்கும். மேலும் இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் வழங்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை (முன்னரே குறிப்பிட்டபடி), இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ரூ.50 கேஷ்பேக் கிடைக்கும்.

மேலும் 3 மாதங்களுக்கான ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவும் (Swiggy One Lite Subscription) முற்றிலும் இலவசமாக கிடைக்கும். ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவின் கீழ் 10 இலவச ஹோம் டெலிவரி உட்பட பல நன்மைகள் கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோவின் ரூ.1098 திட்டத்தின் கீழ் ஜியோ டிவி மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய ஜியோ ஆப்ஸ் நன்மைகளும் கிடைக்கும்.

கடைசியாக ரூ.1098 ஆனது 2ஜிபி டெய்லி டேட்டாவை வழங்குவதால், இது ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைக்கு தகுதி பெறுகிறது. அதாவது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் ஜியோ 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதியல் இருந்தால் மற்றும் அவர்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் - அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அனுபவிக்கலாம்.

சமீபத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.200 க்குள் ஒரு புதிய கிரிக்கெட் பிளானை (Jio New Cricket Plan) அறிமுகம் செய்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. பெயர் குறிப்பிடுவது போலவே ஜியோவின் இந்த புதிய கிரிக்கெட் பிளான் ஆனது வரவிருக்கும் ஐபிஎல் 2025 போட்டிகள் மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் டபுள்யூபிஎல் 2025 போட்டிகள் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் ஆகியவைகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உதவும் திடமாகவும் ஒரு டேட்டா-ஒன்லி ரீசார்ஜ் ஆகும்.

இதன்கீழ் உங்களுக்கு மூன்று மாத காலத்திற்கான (90 நாட்களுக்கான) ஜியோ ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக கிடைக்கும். இதோடு சேர்த்து 90 நாட்களுக்கு 15ஜிபி அளவிலான 4ஜி/5ஜி டேட்டாவும் கிடைக்கும். இதன்கீழ் கிடைக்கும் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவானது விளம்பர ஆதரவு உடன் வரும் மொபைல் சந்தா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

இந்த சாந்தாவின் கீழ் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் வழியாக ஒரு நேரத்தில் டிவைஸ் வழியாக 720பி என்கிற ரெசல்யூஷனின் கீழ் ஜியோ ஹாட்ஸ்டார் கன்டென்ட்களை ஸ்ட்ரீமிங் செய்யலாம். நினைவூட்டும் வண்ணம் ஜியோ ஹாட்ஸ்டார் சேவையின் கீழ் கிடைக்கும் 3 மாத கால மொபைல் சந்தாவின் விலை ரூ.149 ஆகும்

அதாவது ரூ.195 கிரிக்கெட் பிளான் ஆனது கூடுதலாக வெறும் ரூ.46 க்கு 15ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது என்று அர்த்தம். இந்த டேட்டா கிரிக்கெட் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக 4ஜி ஸ்மார்ட்போன் அல்லது அன்லிமிடெட் 5ஜி டேட்டா இல்லாத டேட்டா பேக்கை பயன்படுத்துபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
This 2GB Per Day Prepaid Plan From Jio Offers Rs 50 Cashback After Recharge Check Out Rs 1028 Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X