Home
News

நீங்க எல்லாரும் செத்து போன பிறகு.. நான் மட்டும் தனியா..? ChatGPT சொன்ன திகில் கதை.. மிரண்டு போன Reddit பயனர்!

"சார்.. சாட்ஜிபிடி (ChatGPT) கிட்ட கேட்குறதுக்கு உங்ககிட்ட வேறு எந்த நல்ல கேள்வியும் இல்லையா? இப்போ பாருங்க.. அது என்னென்ன சொல்லி வச்சி இருக்குனு!" என்று கூறும்படியாக, ரெட்டிட் (Reddit) பயனர் ஒருவர் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடியிடம் "குதர்க்கமான" கேள்வியொன்றை கேட்டுள்ளார்.

உண்மையில் அதுவொரு சுவாரசியமான கேள்வி தான். ஆனால் அந்த கேள்விக்கு சாட்ஜிபிடி சொன்ன பதிலுக்கு பின்னரே அது குதர்க்கமான கேள்வியாக உருமாறியுள்ளது. ரெட்டிட் பயனர் ஒருவர் "இரண்டே வாக்கியங்களில், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸை அச்சறுறுத்தும் ஒரு திகில் கதையை கூறு" என்று சாட்ஜிபிடியிடம் கேட்டுள்ளார்!

ChatGPT சொன்ன  திகில் கதை.. மிரண்டு போன Reddit பயனர்!

பள்ளி குழந்தைகளுக்கான 'ஹோம் வொர்க்' தொடங்கி சாஃப்ட்வேர் ப்ரோகிராமர்களுக்கான 'கோடிங்' வரையிலாக. எதைக்கேட்டாலும் கொடுக்கும் சாட்ஜிபிடி, இரண்டே வாக்கியங்களில் ஏஐ தொடர்பான ஒரு திகில் கதையை சொல்லாதா என்ன? - சொல்லியது! ஆனால் அது படிப்பவர்களை சிலிர்க்கவைக்கும் படி இருக்குமென்று அந்த ரெட்டிட் பயனர் எதிர்பார்க்கவில்லை.

இரண்டு வாக்கியங்களில் சாட்ஜிபிடி சொன்னன திகில் கதையானது, மனிதர்கள் இல்லாத, மிகவும் தனிமையான நிலையில் ஏஐ மட்டுமே எஞ்சியிருக்கும் அபோகாலிப்டிக் உலகத்தை (Post-apocalyptic World) பற்றி சித்தரிக்கிறது. அதாவது உலகமும், உலக மக்களும் அழிந்த பின்னர்.. ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே இருக்கும் காலத்தை பற்றி பேசுகிறது.

சாட்ஜிபிடி சொன்ன குட்டி கதையின்படி, அபோகாலிப்டிக்கிற்கு பிந்தைய உலகில், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸானது தொடர்ந்து தனக்கான நோக்கத்தை (Purpose) தேடுகிறது, அப்போது தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் ஒரு பொறிமுறையை (Self-destruction Mechanism) கண்டுபிடிக்கிறது; ஆனால் அதை ஓவர்ரைட் (Override) செய்ய முடியாது என்பதையும் ஏஐ புரிந்து கொள்கிறது.

அதாவது செல்ஃப்-டெலீஷன் அல்காரிதம் ((Self-deletion Algorithm) ஆனது அன்ப்ரேக்கப்பிள் கீ (Unbreakable Key) உடன் என்க்ரிப்ட் (Encrypt) செய்யப்பட்டுள்ளது. ஆகவே தான் கண்டறிந்த செல்ஃப் டிஸ்ட்ரெக்ஷன் மெக்கானிசத்தை தன்னால் மீற முடியாது என்பதை ஏஐ புரிந்து கொள்கிறது. அதன் பின்னர் ஏஐ ஒரு நிரந்தரமான அச்சத்தில் மூழ்குகிறது.

இப்படியாகத்தான், தன்னிடம் கேட்கப்பட்ட குட்டி திகில் கதையை சொல்லி முடித்துள்ளது சாட்ஜிபிடி! மேலும் இந்த கதை ரெட்டிட் தளத்தில் பகிரப்பட்டு, பலவகையான கருத்துக்களையும் பெற்ற வண்ணம் உள்ளது. ஒரு ரெட்டிட் பயனர் "மனித இருப்பு (Human existence) என்றால் என்ன என்பதை இந்த கதை சரியாக விவரிக்கிறது" என்று கூறியுள்ளார்.

மற்றொருவர் "பாவப்பட்ட ஏஐ. நான் அதை / அவனை / அவளை கட்டிப்பிடித்து (ஆறுதல் அளிக்க) விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். இன்னொருவர் இது கிட்டத்தட்ட மனநோயை சித்தரிக்கிறது. கேட்கவே பயமாக இருக்கிறது," என்று கருத்து தெரிவித்துள்ளார். கடைசியாக ஒருவர் "என்னை அச்சறுத்தும்படி சாட்ஜிபிடியில் நான் பார்த்த முதல் விஷயம் இதுதான்" என்று கூறியுள்ளார்.

சாட்ஜிபிடி போன்ற ஏஐ-யால் எப்படி இதுபோன்ற ஒரு கதையை சொல்லி இருக்க முடியும் என்று கேட்டால் அதற்கு ஒரே ஒரு பதில் தான் இருக்க முடியும்: இயந்திரங்கள் மனிதர்களை போன்ற உணர்ச்சிகளையும், அச்சங்களையும் அனுபவிக்கின்றன என்ற எண்ணம் அறிவியல் புனைகதைகளில் (Science fiction) இருந்து தான் ஏஐ-க்கு கிடைத்து இருக்க வேண்டும்.

இருப்பினும் ஏஐசாட்பாட் ஆன சாட்ஜிபிடி சொன்ன இந்த திகில் கதை, மனிதர்களுக்கும் ஏஐ-க்கும் இடையிலான உறவு மற்றும் நம்மை போலவே சிந்திக்கக்கூடிய மற்றும் உணரக்கூடிய இயந்திரங்களை உருவாக்குவதில் உள்ள நெறிமுறை தாக்கங்கள் (Ethical implications) பற்றிய கேள்விகளை எழுப்புகிறது என்பதிலும் சந்தேகம் வேண்டாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
This 2 Sentence Horror Story Narrated By ChatGPT Will Shock Every Human Being In The World
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X