யூடியூப் மூலம் கற்று ரூ13,000ஐ 55லட்சமாக மாற்றிய 16 வயது சிறுவன்...

எட்வர்ட் ரிச்சர்ட்ஸ் கிழக்கு லண்டனில் உள்ள மற்ற எல்லா 16 வயது சிறுவர்களை போலதான் இருக்கிறார்.

|

பெரும்பாலான மக்கள் சில காலம் சேமித்தோ அல்லது லோன் வாங்கியோ கார் வாங்குவார்கள். அதிலும் குறிப்பாக ஒரு ஆடம்பரமான கார் வாங்குவர். எனவே இங்கிலாந்தைச் சேர்ந்த 16வயது சிறுவன் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ- கிளாஸ் கார் வாங்குவதற்கு போதுமான பணத்துடன், இன்னும் அதிகமாக செலவளிக்க தேவையான பணத்தை வைத்திருக்கிறான் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

யூடியூப் மூலம் கற்று ரூ13,000ஐ 55லட்சமாக மாற்றிய 16 வயது சிறுவன்...

எட்வர்ட் ரிச்சர்ட்ஸ் கிழக்கு லண்டனில் உள்ள மற்ற எல்லா 16 வயது சிறுவர்களை போலதான் இருக்கிறார். பள்ளிக்கு செல்லும்போதே தனக்கு தேவையான பாக்கெட் மணியை ஒரு பகுதி நேர வேலை மூலம் சம்பாதித்து வருகிறார்.ஆனால் இதில் வித்தியாசம் என்னவென்றால் அவர் அந்த சிறிய தொகையை கொண்டு என்னசெய்தார் என்பதுதான்.

எட்வர்ட்

எட்வர்ட்

சில மாதங்களுக்கு கோடைகால வேலையை செய்து பணத்தை சேமித்த பின்னர், எட்வர்ட் தனது கையில் சுமார் 150 பவுண்டுகள் வைத்திருந்தார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ13,500. ஆனால் இந்த பணத்தை கேம் கன்சோல் வாங்குவதற்கோ அல்லது ஆடம்பரமான ஆடைகளை வாங்குவதற்கோ அல்லது வங்கி சேமித்து வைக்கவோ முயற்சிக்காமல், அதை பணபரிமாற்ற சந்தையில் முதலீடு செய்து விளையாட முடிவெடுத்தார்.

எப்படி இலாபம் சம்பாதிப்பது என்பதை எட்வர்ட் கற்றார்

எப்படி இலாபம் சம்பாதிப்பது என்பதை எட்வர்ட் கற்றார்

இதில் பிரச்சினை என்னவெனில் எட்வர்ட்டுக்கு அந்நிய செலாவணி சந்தை பற்றி நிறைய தெரியாமல் இருந்தது. எனவே அவர் அதைப்பற்றி யூடியூப் மூலம் படிக்க முடிவெடுத்தார்.

வீழ்ச்சியில் இருக்கும் போது நாணயங்களை வாங்கி அதன் மதிப்பு உயரும் போது அவற்றை விற்று எப்படி இலாபம் சம்பாதிப்பது என்பதை எட்வர்ட் கற்றார். வர்த்தகத்தை நன்றாக புரிந்துகொள்ள சிலசமயங்களில் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரத்திற்கு மேலாக யூடியூப் வீடியோக்களை பார்த்துள்ளதாக அவர் கூறுகிறார்.

 ஆலோசனை

ஆலோசனை

தனது முயற்சியில் வெற்றியும் பெற்ற எட்வர்ட், ஒரே வருடத்தில் தன்னிடம் இருந்த ரூ13,500ஐ சுமார் 55.24 லட்சம் ரூபாயாக மாற்றினார்.


இன்ஸ்டாகிராமில் தான் கண்டுபிடித்த ஒரு அந்நிய செலாவணி வர்த்தகரிடம் இருந்து ஆலோசனையை பெற முயன்ற எட்வர்ட், அந்நபர் பளபளப்பான ஆடைகள் மற்றும் கார்களின் படங்களை வைத்து எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதைப் பற்றி எப்போதும் தற்பெருமை பேசினார் என கூறுகிறார். மேலும் அந்த வர்த்தகர் முறையான பயிற்சி இல்லாமல் எதுவும் செய்யமுடியாது என்று கூறினார். எனவே இந்த 16வயது சிறுவன் அவரது கூற்று தவறானது என நிரூபிக்க விரும்பினான்.

பிரிக்ஸிட்

பிரிக்ஸிட்

எட்வர்ட் தனது வழிமுறையில் மிகவும் ஸ்மார்ட்டாக இருந்துள்ளார். தனது சமீபத்திய இலாபத்தில் பிரிக்ஸிட்(Brexit) மிகப்பெரிய உதவியாக இருந்துள்ளது என்று அவர் கூறுகிறார். பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தொடர்பான செய்திகளை தொடர்ந்து பின்தொடர்ந்த எட்வர்ட், அதன்மூலம் ஒவ்வொரு நாணயமும் எவ்வாறு உயரும் அல்லது வீழ்ச்சியடையும் என்பதை கணித்தார்.

100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளார்

100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளார்

தற்போது மிகவும் வெற்றிகரமான உள்ள எட்வர்ட், தன்னிடம் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளார். அவர்கள் அனைவரும் முதலீடு செய்வதற்கான டிப்ஸ்களை கேட்பதற்காக, இவர் முதன்முதலில் முதலீடு செய்த தொகையை காட்டிலும் அதிகமாக கொடுக்க தயாராக உள்ளனர். இவையனைத்தையும் விட மேலாக எட்வர்ட் இன்னும் பட்டம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
This 16-Year-Old Grew Rs 13000 To Rs 55 Lakh In A Year By Learning To Invest On YouTube :Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X