அடுத்த 1 வருஷத்துக்கு நோ ரீசார்ஜ்.. Vodafone-ன் அடேங்கப்பா பிளான்.. ஒரே ரீசார்ஜ்ல ஓஹோன்னு வாழ்க்கை!
ஒரே ஒரு ரீசார்ஜ்ல அடுத்த ஒரு வருஷத்துக்கு.. ஓஹோன்னு நன்மைகள் கிடைக்குமென்றால்.. அந்த பிளானை ரீசார்ஜ் செய்துவிட்டு.. அடுத்த 1 வருஷத்துக்கு எந்த ரீசார்ஜ்ஜூம் செய்யாமல் நிம்மதியா இருக்கலாமே! என்கிற எண்ணம் மற்றும் அதற்கான பட்ஜெட் உங்களிடம் இருந்தால்.. வோடாபோனின் இந்த திட்டம் 100% உங்களுக்கானது தான்!
அதென்ன திட்டம்? நாம் இங்கே விரிவாக பார்க்கப்போவது, 1 வருட காலத்திற்கு அமேசான் ப்ரைம் வீடியோ சந்தாவை முற்றிலும் இலவசமாக வழங்குமொரு வோடபோன் ஐடியா (Vodafone Idea) திட்டத்தை பற்றித்தான். அது ரூ.3199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் (Rs.3199 Prepaid Recharge Plan) ஆகும். இந்த திட்டத்தை பற்றி விரிவாக பேசுவதற்கு முன், இதிலுள்ள ஒரு குறையை பற்றி முன்பே சொல்லிவிடுகிறோம்.

வோடாபோன் ஐடியா நிறுவனம் இன்னும் தனது 5ஜி சேவையை (5G Service) அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஐ 5ஜி நெட்வொர்க் (Vi 5G Network) அறிமுகமாக இன்னும் 6-7 மாதங்கள் ஆகும் என்பது போல் தெரிகிறது. மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனங்கள் ஆனது ரூ.239 அல்லது அதற்கு மேற்பட்ட விலையிலான திட்டங்களுடன் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவில்லாமல் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) வழங்குகின்றன.
இதற்கிடையில் ரூ.3000 க்கும் மேலான விலையுள்ள ஒரு திட்டத்தில் 5ஜி டேட்டா கிடைக்காது, 5ஜி ஸ்பீட் கிடைக்காது என்பது நிச்சயம் ஒரு பெரிய குறையே. ஆனால் அந்த குறையை தவுடு பொடியாக்கும் வண்ணம் வோடாபோன் ஐடியாவின் ரூ.3199 திட்டத்தில் "எக்கச்சக்கமான நன்மைகள்" உள்ளன.

அப்படி என்ன நன்மைகள்? ரூ.3199 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு அமேசான் ப்ரைம் வீடியோவின் இலவச சந்தா கிடைக்கும். ஆனால் இது வழக்கமான பிரைம் வீடியோ சந்தா அல்ல. இது அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் சந்தாவாகும் (Amazon Prime Video Mobile Subscription). இது இலவச சந்தா ஒரு வருடம் முழுவதும் செல்லுபடியாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டியும் கூட ஒரு வருடமாகும்.
அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் சந்தாவை தவிர, கூடுதல் கட்டணமின்றி விஐ மூவீஸ் & டிவி சந்தாவும் (Vi Movies & TV Subscription) இலவசமாக கிடைக்கும். மேலும் பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீகென்ட் டேட்டா ரோல் ஓவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) உள்ளிட்ட விஐ ஹீரோ அன்லிமிடெட் நன்மைகளும் (Vi Hero Unlimited benefits) கிடைக்கும்.

வழக்கமான நன்மைகளை பொறுத்தவரை, 1 வருடத்திற்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டெய்லி 2 ஜிபி டேட்டா (Daily 2GB Data) மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் (100 Free SMS) போன்ற வழக்கமான நன்மைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றிய இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் - இது தான் தற்போது வோடாபோன் ஐடியாவின்கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் விலையுயர்ந்த ப்ரீபெய்ட் திட்டமாகும்.
ஒருவேளை நீங்கள் ப்ரைம் வீடியோ மொபைல் சந்தாவிற்கு பதிலாக, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் (Disney Plus Hotstar) ஓடிடி நன்மையை விரும்பினால், நீங்கள் ரூ.3099 திட்டத்தை தேர்வுஸ் செய்யலாம். இது ரூ.3199 திட்டத்தில் உள்ள அனைத்து நன்மைகளுடன் ஒற்றுப்போகும். ஆனால் ப்ரைம் வீடியோ மொபைல் சந்தாவிற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை இலவசமாக கொடுக்கும்.


Click it and Unblock the Notifications