சோலார் இஸ்திரி வண்டி கண்டுபிடித்து விருதுகளை அள்ளிய தமிழக மாணவி.!

|

இப்போது வரும் சில புதிய தொழில்நுட்பங்கள் பலருக்கும் உதவியாக இருக்கிறது, அதேசமயம் குறிப்பிட்ட சில வேலைகளை சுலபமாக முடிக்க உதவுகிறது. அதன்படி திருவண்ணமாலையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதால் வகுப்பு படிக்கும் மாணவி வினிஷா உமாசங்கர் என்பவர் சூரிய ஒளியனால் இயங்கும் சலவைப் பெட்டி வண்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான

மேலும் இந்த கண்டுபிடிப்பு ஸ்வீடன் நாட்டின் காற்று விருது பிரிவில் இந்த ஆண்டிற்கான மாணவர் பருவநிலை விருதினை வென்றுள்ளது. குறிப்பாக வண்டியில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் பேனல் மூலம், சூரிய ஒளி சக்தி, பேட்டரியில் சேமித்து, இஸ்திரிப் பெட்டியை பயன்படுத்த முடியும். இதன் மூலம், சலவை தொழிலார்கள் கரிக்காக, செலவிடும் ரூபாய் 700 முதல், 1,000 ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த வண்டியை எட்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளியை

பின்பு இதுகுறித்து மாணவி வினிஷா கூறுகையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலான சூரிய ஒளியை பயன்படுத்துவது இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம். இதனால் ஆயிரக்கணக்காக மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்படுகிறது.

Whatsapp-ல் இரண்டாவது மியூட் அம்சம் அறிமுகம்: எதற்கு, எப்போது தெரியுமா?

சலவை பெட்டி

குறிப்பாக எரிக்கப்பட்ட கரியை சுற்றுப்புறங்களில் கொட்டுவதால் நிலம், நீர், காற்று மாசுபடுவது தவிர்க்கப்படும். கரிக்காக மரங்கள் வெட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு மரம் தினமும் ஐந்து நபர்களுக்கு ஆக்சிஜன் தருகிறது. மரங்கள் வெட்டப்படுவதால் காற்றில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. இதை கருத்தில் கொண்டு சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு சலவை பெட்டி இயங்குவதை கண்டறந்தேன் என வினிஷா கூறியுள்ளார்.

 இந்த முறையினால்

சோலார் இஸ்திரி வண்டியை சுமார் 30 - 40 ஆயிரம் செலவில் உருவாக்கி கொள்ளலாம். கடந்த மூன்று வருடங்களாக முயன்று இந்த அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளேன். இந்தியாவில் பெரும்பாலும் கரியால் இயங்கும் சலவை பெட்டி முறை இந்த முறையினால் முழுவதும் கைவிடப்படும் எனத் தெரிவித்தார் வினிஷா.

 பாதுகாக்கம் விதமாக

அதேபோல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக இந்த கண்டுபிடிப்பு உள்ளதால் மாணவர் பருவநிலை விருது 2020 என்ற விருதினை ஸ்வீடன் அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து வினிஷாவுக்கு 8.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, சான்றிதழ்,பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பருவ நிலை மற்றும் எதிர்கால

குறிப்பாக பருவ நிலை மற்றும் எதிர்கால தலைமுறைக்காக சிறந்த நடவடிக்கை எடுத்த 12 முதல் 17 வயதுடைய மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மேலும் மத்திய அரசின் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் சக்தி புரஸ்கார் என்ற விருதும் வினிஷாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றுள்ள இந்த

ஸ்வீடன் நாட்டில் இவர் பெற்றுள்ள இந்த விருதிற்காக பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் மாணவி வினிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Thiruvannamalai Girl Won Sweden Award For Invents Solar Powered Ironing Box: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X