உங்க ஸ்மார்ட் வாட்ச் இதெல்லாம் செய்யனும் பாஸ், உங்க வாட்ச் செய்யுமா
ஆப்பிள் வாட்ச் குறித்த செய்திகள் விம்ரசனங்கள் பரபரப்பாக வெளியாகி வருகின்றது. சிலர் புதிதாக ஸ்மார்ட் வாட்ச் வாங்கவும் முடிவெடுத்திருப்பீர்கள். இங்கு ஸ்மார்ட்வாட்ச் பயன்பாடுகள் யாவை என்பதை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.
கீழ் வரும் ஸ்லைடர்களில் உங்களது ஸ்மார்ட் வாட்ச் என்ன செய்ய முடியும் என்பதை பாருங்கள்..

ஃபைன்டு மை போன்
அடிக்கடி ஸ்மார்ட்போனை தவற விடுபவரா நீங்கள், ஸ்மார்ட் வாட்ச் இருந்தால் அதனை ஸ்வைப் செய்து போன் இருக்கும் இடத்தை கண்டறிந்து விடலாம்.

ஸ்மார்ட் காம்பஸ்
இந்த அம்சமானது புது இடங்களுக்கு பயனிக்கும் போது தெரியாத முகவரிகளை துள்ளியமாக காட்டும்.

இசை
சில சமயங்களில் இசையை சில இடங்களில் அனுபவிக்க முடியாது, குறிப்பாக நீச்சல் குளங்களில் இதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு தான், ஆனால் வாட்டர் ஃப்ரூப் ஸ்மார்ட் வாட்ச் இருந்தால் தண்ணீரிலும் இசையை அனுபவிக்க முடியும்.

ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல்
இதன் மூலம் வீட்டில் இருக்கும் கருவிகளை சுலபமான சைகைகளின் மூலம் இயக்க முடியும்.

வெர்பல் கமான்டு
ஸ்மார்ட் வாட்ச்களில் இருக்கும் இந்த அம்சமானது குரல் கொடுத்தால் மின்னஞ்சல், குறுந்தகவல் போன்றவைகளை அனுப்ப வழி வகுக்கின்றது.

ட்ராக்
ஜிபிஎஸ் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்களின் மூலம் குழந்தைகளை கண்கானிக்க முடியும்.

ட்ராக்
ஞாபக மறதி இருப்பவர்களை கண்கானிக்கவும் ஸ்மார்ட் வாட்ச்களை பயன்படுத்த முடியும். இதன் மூலம் உடல் நலம் பாதித்தவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பயனம்
பொது வழிதடங்களில் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் ரியல் டைம் அப்டேட்களை துள்ளியமாக அறிந்து கொள்ள ஸ்மார்ட் வாட்ச் வழி வகுக்கின்றது.

உணவகங்கள்
புதிய இடங்களுக்கு பயனம் செய்யும் போது தெரியாத உணவகங்களில் உணவு உட்கொள்வதை தவிர்க்க ஸ்மார்ட் வாட்ச்கள் உதவுகின்றது. இவை பயனாளிகளின் மதிப்பீட்டிற்கு ஏற்ப சிறந்த உணவகங்களை பட்டியலிடுகின்றது.

சின்க்
கனெக்ஷன் பை ப்ராக்ஸிமிட்டி எனும் தொழில்நுட்பத்தை கொண்டு ஸ்மார்ட் வாட்ச் மற்ற ஸ்மார்ட் வாட்சினை டிடெக்ட் செய்ய முடிவதோடு பல அம்சங்களை பகிர்ந்து கொள்ளவும் உதவுகின்றது.


Click it and Unblock the Notifications








