கூகுளின் இலவச வை-பை திட்டம், மறைக்கப்படும் உண்மைகள்.!!

By Meganathan
|

இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களில் கூகுள் நிறுவனம் இலவச வை-பை வழங்க இருக்கின்றது அனைவரும் அறிந்த ஒன்று தான். 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் துவங்கும் இந்த திட்டத்தின் மூலம் அதே ஆண்டின் இறுதிக்குள் சுமார் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இலவச வை-பை வழங்கப்பட இருக்கும் ரயில்வையர் திட்டம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. அவை யாவை என்பதை ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளுங்கள்.

மும்பை சென்ட்ரல்

மும்பை சென்ட்ரல்

இந்தியாவில் இலவச வை-பை திட்டத்தை துவங்க கூகுள் நிறுவனம் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தேர்வு செய்துள்ளது. 2016 ஜனவரி மாதத்தில் இந்த திட்டம் துவங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டலம்

மண்டலம்

இந்திய ரயில்வே கட்டுப்பாட்டில் சுமார் 16 மண்டலங்களிலும் ஆய்வு செய்து குறிப்பிட்ட ரயில் நிலைய அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து அதன் பின் ரயில்வையர் திட்டம் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் அமல்படுத்தப்பட இருக்கின்றது.

வேகம்

வேகம்

இந்தியாவில் தற்சமயம் இருப்பதை விட அதிக வேகம் கொண்ட இண்டர்நெட் சேவை வழங்கப்படும் என இந்த திட்டத்தின் தலைவர் குல்சர் ஆசாத் தெரிவித்தார்.

நேரம்

நேரம்

அளவில்லா இண்டர்நெட் இலவசமாக பயன்படுத்த முடியும் என்றாலும் முதல் ஒரு மணி நேரத்திற்கு பின் வேகம் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வேகம்

வேகம்

ரயில்வையர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இலவச இண்டர்நெட் அதிக வேகம் கொண்டிருக்கும் என்றாலும், இந்த வேகம் பயனர்களை பொருத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது இடம் என்பதால் அதிகம் பேர் பயன்படுத்தும் போது இண்டர்நெட் வேகம் குறையும் என்றும் கூறப்படுகின்றது.

ஃபைபர்

ஃபைபர்

கூகுளின் ரயில்வையர் திட்டத்தில் இளவச வை-பை வழங்க ஃபைபர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் இண்டர்நெட் வேகம் மற்ற பொது வை-பைகளை விட வேகமாகவே இருக்கும்.

கூகுள்

கூகுள்

கூகுளின் ரயில்வையர் திட்டத்தை கொண்ட தடையில்லா இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என்பதால் கூகுள் சேவைகளை தவிற அனைத்து வித சேவைகளையும் பயன்படுத்த முடியும்.

பதிவிறக்கம்

பதிவிறக்கம்

இலவச பிரவுசிங் மட்டுமின்றி பயனாளிகள் தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். தற்சமயம் வரை ஓடும் ரயிலில் இலவச வை-பை வழங்குவது பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

ப்ராஜக்ட் லூன்

ப்ராஜக்ட் லூன்

கூகுள் பரிந்துரைகளில் முதலிடத்தில் இருக்கும் ரயில்வையர் திட்டத்துடன் கூகுள் நிறுவனம் ப்ராஜக்ட் லூன் திட்டத்தையும் அறிமுகம் செய்ய இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Read here in Tamil Things you should know about Google's free WiFi project.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X