சாம்சங் கேலக்ஸி எஸ்6 வாங்கிட்டீங்களா, அப்ப இதை படிங்க பாஸ்..
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் 6 விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில் நீங்களும் சாம்சங் கேலக்ஸி எஸ்6 வாங்கி இருக்கின்றீர்களா, கீழ் வரும் ஸ்லைடர்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்6 குறித்து உங்களுக்கு தெரிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்...

வடிவமைப்பு
சாம்சங் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனில் வித்தியாசமான வடிவமைப்பை வழங்கியுள்ளது.

பிராசஸர்
எக்சைனோஸ் 7 ஆக்டா கோர் பிராசஸர், 2.1 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் கொண்டிருப்பதோடு 3ஜிபி ராம் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா
ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் கொண்ட 16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா இருப்பதோடு பல அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

ஆன்டிராய்டு 5.0 லாலிபாப்
அப்டேட் செய்யப்பட்ட ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம் கேலக்ஸி எஸ்6 இயங்குகின்றது.

மெமரி
இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் மெமரி ஸ்லாட்கள் வழங்கப்படவில்லை, மாறாக 32 ஜிபி இன்டர்னல் மெமரி மட்டும் தான் இருக்கின்றது.

சார்ஜிங்
புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.

வாட்டர் ப்ரூப்
சாம்சங் கருவிகளில் வாட்டர் ப்ரூப் வசதி இருப்பது அனைவரும் அறிந்ததே.


Click it and Unblock the Notifications