மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி : 'அறிந்ததும் அறியாததும்'..!

By Meganathan
|

இந்தியாவின் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டியை எம்என்பி (MNP) அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய அமைச்சகம் பிறப்பித்த உத்தரவினை அனைத்து நிறுவனங்களும் செயல்படுத்தி இருக்கும் நிலையில், இந்த மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி என்றால் என்ன என்பது குறித்த தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

எம்என்பி

எம்என்பி

எம்என்பி என்பது உங்களது போன் நம்பரை மாற்றாமல் மற்ற நெட்வர்க்களுக்கு மாறுவதாகும். ஒரு வேலை நீங்கள் ஏர்டெல் பயன்படுத்தி அதில் திருப்தியடையாமல் மற்ற நிறுவனங்களுக்கு மாறுவதாகும்.

எம்என்பி இந்தியா

எம்என்பி இந்தியா

இந்தியாவின் ஹர்யானா மாநிலத்தில் இந்த திட்டம் டிசம்பர் 25, 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, பின்னர் இந்த சேவை மற்ற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 3,17,000 பேர் இந்த சேவையில் முன்பதிவு செய்திருப்பதாக ட்ராய் தெரிவித்துள்ளது.

தேசிய எம்என்பி

தேசிய எம்என்பி

தேசிய எம்என்பி என்பது நீங்கள் வேறு மாநிலத்திற்கு பயணிக்கும் போதும் வேறு நிறுவனங்களுக்கு மாற முடியும்.

பயன்

பயன்

மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி மற்றும் தேசிய மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி அனைத்து சந்தாதாரர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செல்லுபடியாகும் இந்த திட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் மட்டும் செல்லுபடியாகாது.

விண்ணப்பம்

விண்ணப்பம்

எம்என்பி சேவைக்கு விண்ணப்பிக்க நீங்கள் மாற வேண்டிய ஆப்பரேட்டரை தொடர்பு கொள்ள வேண்டும். அங்கிருந்து உங்களுக்கு ‘CAF' எனும் எண் வழங்கப்படும். பின் நீங்கள் ஒரு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். குறுந்தகவலை அனுப்பும் போது யுனிக் போர்ரிடங் கோடு UPC (Unique Porting Code), எனும் எண் வழங்கப்படும். இந்த குறுந்தகவலில் "PORT <உங்களது மொபைல் நம்பர்> டைப் செய்து 1900 என்ற நம்பருக்கு அனுப்ப வேண்டும்.

காலம்

காலம்

மற்ற நிறுவனத்திற்கு மாற அதிகபட்சம் ஏழு நாட்களாகும், மேலும் இதற்கு ரூ.19 கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு முறை போர்ட் செய்தவுடன் மீண்டும் 90 நாட்களுக்கு உங்களால் போர்ட் செய்ய இயலாது.

Best Mobiles in India

Read more about:
English summary
Following are the things you need to know about mobile number portability. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X