பிரிக்கப்பட்ட கூகுள் - உண்மை பின்னணி..!!
திடீரென பிரிக்கப்பட்ட கூகுள் நிறுவனம், ஒரு பாதி தமிழர் கையில் மறு பாதி அதன் நிறுவனர்கள் கையில். கூகுளில் ஏன் இந்த பிரிவு, அடுத்து என்ன திட்டம் என விஷயம் அறிந்த ஒவ்வொருவர் மனதிலும் ஆயிரம் கேள்விகள் எழும்..
சிலிகான் வேலியின் இந்திய புலிகள்
உங்களது கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த தொகுப்பு அமையும் என்பதை கடைசி ஸ்லைடரின் முடிவில் புரிந்து கொள்வீர்கள்..

கூகுள்
அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம் 1998 ஆம் ஆண்டு லார்ரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோரால் துவங்கப்பட்டது.

ஆல்ஃபாபெட்
கூகுள் நிறுவனத்தை பிரித்து புதிய நிறுவனமாக ஆல்ஃபாபெட் உருவாக்கப்பட்டுள்ளது.

சுந்தர் பிச்சை
கூகுள் நிறுவனர்கள் புதிய நிறுவனத்திற்கு ஆல்ஃபாபெட் என்ற பெயரை சூட்டியிருப்பதோடு கூகுளின் முக்கிய வியாபாரத்தை கவனிக்க சென்னையை சேர்நத சுந்தர் பிச்சையை நியமித்திருக்கின்றனர்.

பணி
2004 ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சுந்தர் மூத்த துணை தலைவர் பொறுப்பை வகித்து வந்தார்.

ஆல்ஃபாபெட்
ஆல்ஃபாபெட் தலைமை பொறுப்பை லார்ரி பேஜ் ஏற்றிருப்பதோடு தலைவர் பொறுப்பினை ப்ரின் ஏற்றிருக்கின்றார்.

தேடல்
ஆல்ஃபாபெட் நிறுவனத்தில் கூகுள் தேடல், நெஸ்ட், கூகுள் எக்ஸ், ஃபைபர், கூகுள் வென்ச்சர்ஸ் மற்றும் கூகுள் கேப்பிட்டல் போன்ற திட்டங்களை கவனித்து கொள்கின்றது.

சுந்தர் பிச்சை
அனைத்து ஆல்ஃபாபெட் நிறுவனங்களும் தனிச்சையாக செயல்படும். இதோடு யூட்யூப் தலைமை நிர்வாக அதிகாரியும் சுந்தர் பிச்சையின் கீழ் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டர்நெட்
கூகுள் நிறுவனம் இண்டர்நெட் சார்ந்த சேவை, ஆண்ட்ராய்டு, யூட்யூப், சர்ச் மற்றும் ஆட்ஸ் உள்ளிட்டவைகளை கவனித்து கொள்ளும்.

ஆல்ஃபாபெட்
ஆல்ஃபாபெட் இயங்குதளம் abc.xyz என்ற இணைய முகவரியின் கீழ் இயங்கும்.

பெயர்
மனிதர்களின் முக்கிய கண்டுபிடிப்பாக இருக்கும் வார்த்தைகள் மொழியை குறிக்கின்றது, இதை சார்ந்தே கூகுள் சர்ச் இயங்குகின்றது.


Click it and Unblock the Notifications








