Home
News

'எலக்ட்ரிக் ஸ்கூட்டர்'களும், இந்திய 'மூட நம்பிக்கை'களும்..!!

By Muthuraj

சாதாரணமாக ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் பற்றி ஏதாவது ஒரு சந்தேகம் என்றால் அதை தீர்த்து வைக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கும், அந்த அளவு நம்மவர்களுக்கு ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் மீது ஆர்வமும், அறிவும் உண்டு. அதே சமயம் எலெகட்ரிக் ஸ்கூட்டர் பற்றி ஒரு சந்தேகம் என்றால், அதை தீர்க்க யாருமே முன்வர மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம்..!

'எலக்ட்ரிக் ஸ்கூட்டர்'களும், இந்திய 'மூட நம்பிக்கை'களும்..!!

இந்தியாவில் பில்லி, ஏவல், சூனியத்திற்கு நிகராக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றியும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் உண்டு. அப்படியான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

ஆற்றல் :

ஆற்றல் :

இந்தியா - உலகின் ஆற்றல் அதிகம் நுகரும் நாடுகளில் ஒன்றாகும். அதாவது சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகியவைகளுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

மாசு :

மாசு :

இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்கள் அதிகப்படியான மாசு மூலம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

நடைமுறை :

நடைமுறை :

ஆகையால் இந்திய அரசாங்கம் மாசு இல்லாத போக்குவரத்து முறையான மின்சார வாகனங்கள் மீது தனி கவனத்தையும் ஆர்வத்தையும் கொண்டுவர நினைத்து நடைமுறைப்படுத்தியதே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும்.

விலை :

விலை :

பெரும்பாலானோர்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், மிகவும் அதிகமான விலை கொண்டிருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவெனில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகவும் விலை குறைவானவைகள் தான். (ரூ.30,000 தொடங்கி 50,000/-க்குள்)

பேட்டரி :

பேட்டரி :

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிகள் அதிக காலம் நீடிக்காது என்று நம்பப்படுகிறது ஆனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் லீட் ஆசிட் வகை பேட்டரிகள் (lead acid batteries) சுமார் 12 - 15 மாதம் வரை நீடிக்கும் என்பது தான் உண்மை.

வேகம் :

வேகம் :

அதிகப்பட்ச வேகம் 25 கிமீ தான் என்பதால் இதற்கு லைசன்ஸ் மற்றும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன வசதி :

அதிநவீன வசதி :

அடுத்தகட்ட இ- ஸ்கூட்டர்கள் ஸ்மார்ட்போன் மூலம் இணைக்கபடும் வசதி, நேவிகேஷன் வசதி (Navigation), வேறுபட்ட இயக்க முறைகள் என அதிநவீனமாய் தயாராகி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இ-எனர்ஜி :

இ-எனர்ஜி :

ஃபேம் இந்தியா (FAME India) திட்டம் இ-எனர்ஜி சார்ந்த இந்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும்.

ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனங்கள் :

ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனங்கள் :

ஃபேம் (FAME) எனப்படுவது ஹைப்ரிட் அண்ட் எலக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக மேற்கொள்ளுதல் மற்றும் தயாரிப்பு (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric vehicles) என்று பொருள்படும்.

எலக்ட்ரிக் கார்கள் :

எலக்ட்ரிக் கார்கள் :

இந்த திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் பைக்குகள் ரூ.29,000 வரையிலாக மற்றும் எலக்ட்ரிக் கார்கள் ரூ.1.38 லட்சம் வரையிலாகவும் தயாரிக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பயன்பாடு மற்றும் தயாரிப்பு ஊக்கம் :

பயன்பாடு மற்றும் தயாரிப்பு ஊக்கம் :

நேஷனல் எலக்ட்ரிக் மொபைலிட்டி மிஷன் திட்டம் (The National Electric Mobility Mission Plan) - இது மின்சார வாகன பயன்பாடு மற்றும் தயாரிப்பு ஊக்கம் ஆகியவைகளை வழங்கும் இந்திய அரசின் திட்டமாகும்.

ஒட்டுமொத்த விற்பனை :

ஒட்டுமொத்த விற்பனை :

இந்த திட்டம், 2020-ஆம் ஆண்டுக்குள் 15-16 மில்லியன் அளவு ஒட்டுமொத்த விற்பனை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

சாதா டிவி'யை ஸ்மார்ட் டிவியாக மாற்றுவது எப்படி??
தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X