உங்க ஐபோன் இதையும் செய்யும், நம்புங்க பாஸ்
இது ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கானது, உங்க ஐபோன் என்னென்ன செய்யும் என்று உங்களுக்கு தெரியுமா, உடனே ஆமாம் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு தெரிந்திராத பல விஷயங்களை ஐபோன் செய்யும்.
அவ்வாறு ஐபோன் மூலம் செய்யக்கூடிய சில விஷயங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். இவை உங்களுக்கு உண்மையில் தெரியுமா என்பதை ஸ்லைடர்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

அன்டூ
மெசேஜ் டைப் செய்யும் போது தவறு ஏற்பட்டால், ஐபோனினை அசைத்தால் தானாக அது அழிந்து விடும், பின் நீங்கள் மீண்டும் சரியாக டைப் செய்யலாம்.

சார்ஜ்
பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும், ஆனால் போதிய நேரம் இல்லையா, அப்படியானால் ஐபோனை ஏர் ப்ளேன் மோடில் வைத்து சார்ஜ் செய்தால் இரு மடங்கு வேகமாக சார்ஜ் ஆகும்.

சிரி
உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை சிரி பயன்படுத்தி கேட்க முடியும். சிரி உங்களது மின்னஞ்சல்களை படிக்கும்.

விமானம்
உங்கள் அருகில் பறக்கும் விமானங்கள் எவை என்றும் அவை எவ்வளவு தூரத்தில் பறக்கின்றது என்பதை உங்கள் ஐபோன் சொல்லும்.

பாடம்
சிரி மென்பொருளுக்கு வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று சொல்லி தர முடியும்.

மியுசிக்
டைமர் மூலம் மியுசிக் ப்ளேயரை தானாக ஆஃப் செய்ய முடியும்

வீடியோ
வீடியோ அல்லது பாடல்களை ஃபார்வேர்டு செய்யும் போது ஐபோனில் இருக்கும் டீபால்ட் ஆப்ஷன் வேகமாக ஃபார்வேர்டு செய்யும், இதற்கு வீடியோ ஸ்கிரீனின் மேல் பக்கம் இருக்கும் ஸ்க்ரோல் பாரை க்ளிக் செய்து ட்ராக் செய்ய வேண்டும்.

வால்யூம் பட்டன்
ஐபோன் கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் போது வால்யூம் பட்டன்களையும் பயன்படுத்தலாம்.

புகைப்படம்
ஒரே நேரத்தில் பல புகைப்படங்களை எடுக்க கேப்ச்சர் பட்டனை அழுத்தி பிடிக்க வேண்டும்.

டைம் ஸ்டாம்ப்
குறுந்தகவல்களின் நேரத்தை அறிந்து கொள்ள, குறிப்பிட்ட குறுந்தகவலை இடது புறமாக இழுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications