Home
News

இன்றைய ஸ்மார்ட்போன்களில் இல்லாத 'அந்த கால' சிறப்பம்சங்கள்

By Meganathan

இன்று புழக்கத்தில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் சிறிய ரக கணினியையே நமது கைகளில் வழங்கி விடுகின்றது. ஆக்டா கோர் பிராசஸர், குவாட் ஹெச்டி ஸ்கிரீன், ஜிபிகளில் வழங்கப்படும் ரேம் என அன்றாட வாழ்க்கையில் தேவையானவற்றை ஸ்மார்ட்போன் மூலம் நிறைவேற்றி கொள்ளும் வசதி கிடைத்து விட்டது.

வளைந்த டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள் - அப்படி இதுல என்ன தான் இருக்கு?

இன்றைய ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையை எளிமையாக மாற்றினாலும் அன்று நாம் பயன்படுத்திய போன்களில் நாம் பயன்படுத்திய சில சிறப்பம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

அந்த காலத்து போன்கள் பல வடிவில், பல விதங்களில் கிடைத்தன, ஃப்ளிப், ஸ்லைடு, ஸ்வைவல், பார், க்ளாம்ஷெல் என பட்டியல் நீள்கின்றது. இன்று நாம் பயன்படுத்தும் போன்கள் பெரும்பாலும் தட்டையாகவே இருக்கின்றது.

உறுதி

உறுதி

அன்று பயன்படுத்திய போன்கள் எத்தனை முறை கீழே விழுகின்றது என்று எண்ணி கொண்டிருந்தோம், இன்று புழக்கத்தில் இருக்கும் போன்கள் ஒரு முறை கீழே விழுந்தாலும் அதன் நிலை கவலை கிடமாகிவிடுகின்றது.

கேஸ்

கேஸ்

போனை பாதுகாப்பாது என்றால் எக்கச்சக்க கவர்கள் மற்றும் லான்யார்டு என்ற கயறுகளில் போனை தொங்கவிட்டிருந்தோம், இன்று இவை புழக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஃப்எம் டிரான்ஸ்மிட்டர்

எஃப்எம் டிரான்ஸ்மிட்டர்

போனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பாடல்களை கேட்க எஃப்எம் டிரான்ஸ்மிட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இவை பெரும்பாலும் நோக்கியா என்82, என்79 போன்ற மாடல்களில் பிரபலமாக இருந்தன.

பேட்டரி

பேட்டரி

அன்று யாரும் கையில் பவர் பேங்க் வைத்திருக்கவில்லை. அன்று பயன்படுத்தப்பட்ட பீச்சர் போன்கள் பல நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கின, இன்று ஒரு நாள் முழுவதும் பேக்கப் பெறுவதே குதிரை கொம்பாகிவிட்டது.

கேம்ஸ்

கேம்ஸ்

ஸ்மார்ட்போன்களில் ஹெச்டி தொழில்நுட்பத்தில் பல ஆக்ஷன் கேம்களை இன்று விளையாடினாலும் அன்று நாம் பெரும்பாலும் விளையாடிய கேம் இதுவாக தான் இருக்க முடியும்.

Best Mobiles in India

English summary
check out here the Things we miss on latest smartphones. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X