ஆயத்த பணிகளில் ரிலையன்ஸ் ஜியோ : ஐந்து அதிரடிகள் தயார்.!

By Meganathan
|

இலவச இண்டர்நெட், வாய்ஸ் கால் மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்த ரிலையன்ஸ் ஜியோ அடுத்த அதிரடியை அறிவிக்கத் தயாராகி வருகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டுகளை நம்மவர்கள் ஹாட்ஸ்பாட் போன்று பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனம் இலவச இண்டர்நெட் மட்டுமின்றி வேறு சில திட்டங்களையும் வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

4ஜி இண்டர்நெட் தவிர ரிலையன்ஸ் ஜியோ கால் பதிக்க இருக்கும் மற்ற சேவைகள் எவை..??

ஜியோ மனி

ஜியோ மனி

பேடிம், ஃப்ரீசார்ஜ் போன்று ஜியோ மனி சேவையை நாடு முழுக்க அனைவரும், எல்லாவற்றிற்கும் பயன்படுத்த கூடிய ஒன்றாக மாற்ற ரிலையன்ஸ் திட்டமிட்டு வருகின்றது. வரும் மாதங்களில் ஜியோ மனி சேவையை வழங்கும் ஆப் ஒன்றை வெளியிட்டு மக்களின் ரூ.500, ரூ.2000 நோட்டு தலைவலியை போக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் ஓவர் வைபை

வாய்ஸ் ஓவர் வைபை

வாட்ஸஆ போன்ற சேவையை வழங்கும் ஜியோ வாய்ஸ் ஆப் மூலம் அனைத்துப் பயனர்களும் 4ஜி வோல்ட்இ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் ஸ்கைப் போன்றே வாய்ஸ் ஓவர் வைபை சேவையை வழங்கத் திட்டமிடுகின்றது.

ஜியோவை பொருத்த வரை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போதும் ஜியோ பயனர்கள் எல்லா நெட்வர்க்களுக்கும் இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

ஜியோ வைபை

ஜியோ வைபை

ஜனவரி 1, 2017 முதல் ஜியோஃபை சேவைகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தற்சமயம் இல்லையென்றாலும் விரைவில் இந்தச் சேவையை வழங்க ஜியோ திட்டமிடுகின்றது.

ஜியோஃபை உங்களின் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் ஜியோ நெட்வர்க்களுடன் தானாகக் கனெக்ட் ஆகும். மற்ற நெட்வர்க் பயன்படுத்தும் போது ஒன் டைம் பாஸ்வேர்டு பதிவு செய்து இண்டர்நெட் வசதியினைப் பெற முடியும்.

ஜியோ ஹோம்

ஜியோ ஹோம்

ஸ்மார்ட் ஹோம் கருவிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அமேசான் எக்கோ, கூகுள் ஹோம் போன்ற சேவையான இது ஃபைபர் டூ ஹோம் (fiber to the home) மூலம் இயங்கும் என்றும் இதில் பயனர்களுக்கு அதிகபட்சம் 1 ஜிபி வரை இலவச இண்டர்நெட் வழங்கும் என்றும் கூறப்படுகின்றது.

ஜியோ ஸ்மார்ட் கார்

ஜியோ ஸ்மார்ட் கார்

ஜியோவின் ஸ்மார்ட் கார் என்பது எலான் மஸ்க் போன்ற கார்கள் கிடையாது, மாறாக ஜியோஃபை மூலம் காரினை OBD போர்ட் மூலம் இணைப்பது ஆகும். இவ்வாறு செய்வதால் காரினை ஜியோ கார் கனெக்ட் ஆப் மூலம் இணைத்து எவ்வித கார்களையும் ஸ்மார்ட் கார் போன்று இயக்க முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Things That Reliance Jio Could Announce Soon in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X