ஓபரா ரீபார்ன் பிரெளசரை பயன்படுத்துவதால் ஏற்படும் புதிய அனுபவங்கள்

By Siva
|

இண்டர்நெட் பயன்பாட்டாளர்கள் பொதுவாக கூகுள் குரோம், சஃபாரி, பயர்பாக்ஸ் ஆகிய பிரெளசர்களைத்தான் அதிகம் பயன்படுத்துவதுண்டு. அந்த வகையில் இண்டர்நெட் பயன்பாட்டாளர்களுக்கு நண்பனாக இருக்கும் நார்வே நாட்டை சேர்ந்த ஓபரா நிறுவனம் தற்போது ஓபரா ரீபார்ன் என்ற புதிய பிரெளசரை அறிமுகம் செய்துள்ளது.

ஓபரா ரீபார்ன் பிரெளசரை பயன்படுத்துவதால் ஏற்படும் புதிய அனுபவங்கள்

இந்த பிரெளசரில் விதவிதமான தீம்கள் இருப்பதால் இரவு நேரத்தில் அதிகம் பயன்படுத்தினாலும் கண்களை பாதுகாக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிரெளசரில் விளம்பர தொல்லைகளில் இருந்து விடுபடும் ஆட்பிளாக் வசதி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

புதிய டிசை மாற்றங்கள்:

புதிய டிசை மாற்றங்கள்:

இந்த பிரெளசரின் முழு டிசைன்கள் வல்லுனர்களால் மாற்றப்பட்டுள்ளதால் இந்த பிரெளசரை பயன்படுத்தும்போதே ஒரு புதிய புத்துணர்வு கிடைக்கின்றது. மேலும் டேப்கள் எளிமையாகவும், எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும் இருப்பது கூடுதல் சிறப்பு

புதிய சைட் பார் வசதி:

புதிய சைட் பார் வசதி:

இந்த ஓபரா ரீபார்ன் பிரெளசரின் சைட் பார் அசத்தும் வகையில் உள்ளது. நியானில் உள்ளது போன்று ஸ்பெஷல் டயல் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக விண்டோ மாடல் மெயின் பிரெளசரில் இருப்பதால் உபயோகிப்பது எளிதாக உள்ளது. புதிய பயனாளிகளுக்கு இந்த புதிய சைட் பார் வசதி டீபால்ட்டாகவும், ஏற்கனவே பயன்படுத்தி வருபவர்கள் ஸ்பீட் டயலை சுவிட்ச் ஆப் செய்தும் பெற்று கொள்ளலாம்

சைட் பாரில் ஃபேஸ்புக் மெசஞ்சர் வசதி

சைட் பாரில் ஃபேஸ்புக் மெசஞ்சர் வசதி

இந்த புதிய ஓபரா ரீபர்ன் பிரெளசரை நீங்கள் பயன்படுத்தும்போது சைட் பாரில் ஃபேஸ்புக் மெசஞ்சர் வசதியை தானாகவே பெற்றுவிடுவீர்கள். சைட் பாரில் உள்ள ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆப்-இன் ஐகானை நீங்கள் ஒரே ஒரு முறை க்ளிக் செய்தாலே போதும் மெசஞ்சருக்குள் சென்று உரையாடலாம்.

மேலும் இந்த பிரெளசரில் ஃபேஸ்புக் மெசஞ்சரை நீங்கள் இரண்டு விதங்களில் பயன்படுத்தலாம். ஒன்று சைட்பாரில் ஓப்பன் செய்து கொண்டு உங்கள் அன்றாட பணிகளை பார்த்து கொண்டே ஃபேஸ்புக் மெசஞ்சரையும் பார்த்து கொள்வது, இரண்டாவது முழு பிரெளசரிலும் இந்த ஃபேஸ்புக் மெசஞ்சரை உபயோகப்படுத்துவது ஆகும்,

விளம்பரங்களை கட்டுப்படுத்தும் தன்மை

விளம்பரங்களை கட்டுப்படுத்தும் தன்மை

ஓபரா பிரெளசர் விளம்பரங்களை கட்டுப்படுத்தும் தன்மையுடன் இருப்பதால் நமது பணியில் குறுக்கிடல் இருக்காது. விளம்பரங்கள் தோன்றுவது அல்லது பிளாக் செய்வது நமது கையில் இருப்பதால் நமக்கு தேவையான ஆப்சனை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் மேனேஜ் லிஸ்ட் என்ற ஆப்சனுக்கு சென்று விளம்பரங்கள் குறித்த உங்கள் முடிவை பதிவு செய்யலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
In an attempt to lure the users from Google Chrome, Safari, and Firefox, Norway-based browser brings Opera Reborn with some fresh coating and messaging capabilities.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X