பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் உஷாரா இருங்க பாஸ்...
பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் விற்பனை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் சிறந்த போனினை வாங்கும் போது சற்று கவனமாக இருப்பது அவசியமாகும்.
கீழ் வரும் ஸ்லைடர்களில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில அம்சங்களின் பட்டியலை பாருங்கள்..

ஒப்பிடுதல்
பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனில் விலை உயர்ந்த சிறப்பம்சங்களை எதிர்பார்க்க கூடாது.

சிறப்பம்சம்
பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வழங்கும் போன் தயாரிப்பாளர்கள் சில சிறப்பம்சங்களை குறைத்தே வழங்குகின்றனர். இதனால் வாங்கும் போது சரியான சிறப்பம்சங்கள் இருக்கின்றதா என்பதை பார்க்க வேண்டும்.

ஹார்டுவேர்
பட்ஜெட் விலையில் போன் வாங்கும் போது சரியான பிராசஸர், ரேம் மற்றும் கூடுதல் மெமரி ஆப்ஷன் இருப்பது நல்லது.

ஓஎஸ்
ஆன்டிராய்டு, விண்டோஸ் மற்றும் ப்ளாக்பெரி என பல இயங்குதளங்களை கொண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகின்றன. ஒவ்வொரு இயங்குதளங்களும் அதற்கேற்ற அளவு பிராசஸர் மற்றும் ரேம்களை எதிர்பார்க்கின்றன. விண்டோஸ் போன் 8 குறைந்த பிராசஸர் மற்றும் ரேம் இருந்தால் சிறப்பாக இயங்குகின்றது.

சப்போர்ட்
அனைத்து ஸ்மார்ட்போன்களும் ஒரு ஆண்டு வரை இலவச வாரண்டி வழங்குகின்றன, இருந்தும் சர்வீஸ் சென்டர் அருகாமையில் இருக்காது.


Click it and Unblock the Notifications