எல்இடி டிவி வாங்க போகிறீர்களா? கவனமா இருக்க வேண்டிய 8 விஷயங்கள்!

By Meganathan
|

வீட்டில் பந்தாவாக பெரிய டிவி வாங்க யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் ஆசை இருக்கும் எல்லோராலும் சந்தையில் கிடைக்கும் பெரிய பிரான்டு டிவியினை அதிக விலை கொடுத்து வாங்க முடியாது. இதனால் தான் பல்வேறு டெக் நிறுவனங்களும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப பட்ஜெட் விலையில் எல்இடி டிவிக்களை வழங்கக் களத்தில் இறங்கியுள்ளனர்.

மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ், வியு மற்றும் பல்வேறு நிறுவனங்களும் சந்தையில் பிரபலமாக இருக்கும் சாம்சங், எல்ஜி மற்றும் சோனி போன்ற நிறுவனங்களுடன் போட்டி போடத் தயாராகி விட்டன. அவ்வாறு நீங்களும் புதிய எல்இடி டிவி வாங்க இருந்தீர்கள் எனில் டிவி வாங்கும் முன் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

தூரம்

தூரம்

அதிக விலையில் பெரிய திரை கொண்ட டிவியினை உங்களால் வாங்க முடியும் என்பதற்காக உடனே அதனை வாங்கக்கூடாது. டிவி வாங்கும் முன் உங்களது அறையின் அளவைக் கணக்கிட்டு அதற்கேற்ற அளவு கொண்ட டிவியினே தேர்வு செய்ய வேண்டும். 32 இன்ச் டிவி வாங்கும் பட்சத்தில் குறைந்த பட்சம் 4 அடி தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும். இது போல் 40-48 இன்ச் டிவி வாங்கும் போது குறைந்தபட்சம் 7 அடி தூரத்தில் இருந்து டிவி பார்க்க வேண்டும்.

எச்டி ரெடி

எச்டி ரெடி

ஓரளவு அதிக விலை கொடுத்து டிவி வாங்கத் திட்டமிட்டிருந்தால் 720p (HD Ready) எச்டி ரெடி டிவிக்களை தவிர்த்து ஃபுல் எச்டி 1080p டிவிக்களை வாங்குவது சிறப்பான தேர்வாக இருக்கும். சிறிய அறை கொண்ட வீடு எனில் 1080p எச்டி திரை கொண்ட டிவிக்களை வாங்குவதே சிறந்த தேர்வாகும். 720p திரை கொண்ட டிவிக்களை கேமிங் செய்யத் திறன் கொண்டவையாக இருக்கும்.

ஸ்மார்ட் அம்சங்கள்

ஸ்மார்ட் அம்சங்கள்

சிறிய அளவில் ஸ்மார்ட் டிவி வாங்குவதை விட அதே விலைக்குக் கிடைக்கும் பெரிய திரை கொண்ட டிவியினை வாங்குவதே நல்லது. ஸ்மார்ட் டிவி கேட்க நன்றாக இருந்தாலும், பெரிய திரை கொண்ட டிவிக்களில் கிடைக்கும் அனுபவத்தை வழங்காது.

பயன்பாடு

பயன்பாடு

செட்-டாப் பாக்ஸ் கொண்டு அதிகம் பயன்படுத்துவீர்கள் எனில் எவ்வித டிவிக்களையும் வாங்கலாம். மாறாகக் கணினி மற்றும் இதர அம்சங்களையும் பயன்படுத்துவீர்கள் எனில் உங்களது பயன்பாடுகளை வழங்கும் அம்சங்கள் கொண்ட டிவியினை விசாரித்து வாங்குவது நல்லது.

ஒலி

ஒலி

குறைந்த விலை கொண்ட டிவிக்களில் குறைந்த தரம் கொண்ட ஒலிபெருக்கி (ஸ்பீக்கர்) வழங்கப்படும், இதனால் சிறப்பான ஒலியனுபவம் பெற இயலாது. இதனால் பெரிய திரை கொண்ட அதே சமயம் 2.1 சேனல் ஒலிபெருக்கி கொண்ட டிவிக்களை வாங்குவது நல்லது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

செட்-டாப் பாக்ஸ் தவிர்த்து இதர அம்சங்களைப் பயன்படுத்தும் பட்சத்தில் எச்டிஎம்ஐ, யுஎஸ்பி போர்ட், 3.5 எம்எம் ஜாக் மற்றும் இதர ஏவி போர்ட்கள் வழங்கப்படுகின்றதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கூடுதலாக ப்ளூடூத் வழங்கப்பட்டால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

மலிவு விலை 4கே

மலிவு விலை 4கே

நமது நாட்டில் 4கே தரம் கொண்ட தரவுகள் குறைவு என்பதால் செட் டாப் பாக்ஸ் பயன்பாடுகளுக்கு 4கே டிவி வாங்குவது அதிக பலன் அளிக்காது. இதனால் ரூ.50,000 விலையில் கிடைக்கும் 4கே டிவிக்களை வாங்குவது ஏமாற்றத்தை வழங்கும்.

ஸ்மார்ட்

ஸ்மார்ட்

மலிவு விலையில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு டிவிக்களை வாங்குவதும் ஏமாற்றத்தையே தரும். குறைந்த விலையில் அதிக அம்சங்களை எதிர்பார்த்து ஏமாறுவதை விடச் சரியான விலையில் தகுந்த அம்சங்கள் கொண்ட டிவிக்களை வாங்குவது நல்லது.

Best Mobiles in India

English summary
Things to Note Before Buying an LED TV Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X