மின்சாரம் தயாரிக்க டைனிங் டேபிள் போதும், அசத்தும் மாணவர்கள்.!!

Written By: Aruna Saravanan

நம் எல்லோருக்கும் காப்பி என்றால் மிகவும் பிடிக்கும். டீ மற்றும் காப்பி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இதன் மீது காதல் கொண்ட இரண்டு டென்மார்க் பல்கலைகழக மாணவர்கள் ஒரு ஸ்மார்ட் மேஜை ஒன்றை வடிவமைத்துள்ளனர். அந்த மேஜை மீது இருக்கும் வெப்பத்தை வைத்து போனை சார்ஜ் செய்ய முடியும்.

இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் IKEAவுடன் கூட்டணி அமைத்து இந்த மேஜையை கண்டுபிடித்து இருக்கின்றனர். இந்த மேஜை விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இதை பற்றி விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
காப்பியில் இருந்து வெப்பம்

காப்பி

காப்பி கோப்பையில் இருந்து வரும் வெப்பத்தை மின்சக்தியாக மாற்ற கூடிய வழிமுறையை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். காப்பி கோப்பை மட்டுமில்லாமல் சூடாக எதை வைத்தாலும் அதன் வெப்பத்தை மின்சக்தியாக மாற்றி சார்ஜ் செய்ய முடியும்.

வெப்பத்தை சாகுபடி செய்ய

சாகுபடி

இந்த டேபில்டாப்பில் சூடாக எதை வைத்தாலும் அவற்றின் வெப்பத்தை இழுத்து மின்சக்தியாக கொடுக்கும். பிறகு உங்கள் போனை X குறியீடு உள்ள இடத்திற்கு அருகில் வைத்தால் போதும் உங்கள் போனுக்கு சக்தி சென்று முழுமையாக சார்ஜ் செய்யப்படும். இதற்க்கு வையர் எதுவும் தேவையில்லை.

Ikea மற்றும் Space 10

Ikea மற்றும் Space 10

ஹீட் ஹார்வெஸ்ட் என்ற பெயரில் இந்த திட்டமானது ஸ்பேஸ் 10 லேப் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. IKEA அமைப்புடன் சேர்ந்து சாதாரண வாழ்க்கையை மேம்படுத்த தேவையான எண்ணற்ற உபகரணங்களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மின்சாரத்தை உருவாக்குகின்றது

மின்சாரத்தை உருவாக்குகின்றது

இந்த ஹீட் ஹார்வெஸ்ட் கருவியால் தனியாகவும் செயல்பட முடியும் அல்லது ஏதாவது வீட்டு உபயோகப் பொருட்களுடனும் சேர்ந்து செயல் பட முடியும். இதனால் உருவாக்கப்படும் இயற்கை மின்சாரத்தை கொண்டு வீட்டுக்கு பயன்படும் வகையில் பல விஷயங்களை எளிமையாக செயல் படுத்த முடியும்.

வையர்லெஸ் சார்ஜிங்கின் பயன்

வையர்லெஸ் சார்ஜிங்கின் பயன்

மின்சாரத்தை அதிக அளவில் வீணாக்கும் இந்த காலக்கட்டதில் இந்த வையர்லெஸ் சார்ஜிங்கின் மூலம் பல விஷயங்களை செய்ய முடியும் மின்சாரத்தையும் சேமிக்கவும் முடியும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Things to know about Smart Table that Charges Phone Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot