டிரைவர் இல்லா கார் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை
அமெரிக்க வீதிகளில் அங்கும் இங்குமாக ஒடும் டிரைவர் இல்லா கார்கள் நடமாடுகின்றன. இவை சோதனையில் இருப்பதால் அனைத்து கார்களிலும் ஓட்டுனர் ஒருவர் அவசியம் இருக்க வேண்டும்.
இங்கு டிரைவர் இல்லாமல் இயங்கும் கார்கள் குறித்து உங்களுக்கு தெரிந்திராத அம்சங்களை பாருங்கள்..

விபத்து
செப்டம்பர் துவங்கி தற்சமயம் வரை ஏழு நிறுவனங்களுக்கு டிரைவர் இல்லா கார்களை பொது இடங்களில் சோதனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தனது கார்கள் 2009 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை அதிகபட்சமாக 11 முறை விபத்துகளை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள்
கூகுள் நிறுவனம் 23 லெக்சஸ் எஸ்யுவி, டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் 12 வாகனங்களையும், ஆடி, மெர்சிடீஸ் பென்ஸ் மற்றும் நிஸான் நிறுவனங்கள் முறையே மூன்று வாகனங்களையும் போஷ் மற்றும் டெல்ஃபீ முறையே இரு கார்களை வைத்திருக்கின்றன.

பயன்பாடு
இந்த கார்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்று கூகுள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகின்றது.

சோதனை
கூகுள் நிறுவனத்தின் டிரைவர் இல்லா கார்கள் அதிகபட்சமாக 140,000 மைல்களை கடந்திருப்பதாக கூகுள் தரப்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகனம்
நிவேடா, மிக்கிகன் மற்றும் ஃப்ளோரிடா போன்ற நகரங்களில் டிரைவர் இல்லா கார்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த கார்கள் எவ்வித விபத்துகளை ஏற்படுத்தியதாக எவ்வித தகவல்களும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








