வளைந்த டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள் - அப்படி இதுல என்ன தான் இருக்கு?
சாதாரண போன்கள் சலித்து விட்டதா, சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களில் லம்போர்கினியாக இருக்கும் படி இரு மாடல்களை வழங்குகின்றன.
சாம்சங் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் ஏற்கனவே பல தலை சிறந்த போன்களை கொடுத்திருக்கின்றது. இங்கு இந்நிறுவனங்கள் வழங்கும் தனித்துவம் வாய்ந்த சிறப்பம்சங்களை பாருங்கள்.
தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட போன்களில் இருக்கும் தனித்துவம் வாய்ந்த சிறப்பம்சங்களை பாருங்கள்..

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்
கேலக்ஸி எஸ்6 எட்ஜ் வெர்ஷன் இரு புறங்களிலும் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதனால் போன் பார்க்கவும் பயன்படுத்தவும் அழகாக இருக்கின்றது.

எட்ஜ் ஸ்கிரீன்
விவாதங்களில் பங்கேற்கும் போது போனினை கீழ் பக்கமாக வைத்து விட்டால், அழைப்புகள் வரும் போது எட்ஜ் டிஸ்ப்ளேவில் விளக்கு எரியும், மேலும் அதிகபட்சமாக ஐந்து நிறங்கள் வரை செட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் யார் அழைக்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

ஹார்ட்-ரேட் சென்சார்
முக்கியமான அழைப்புகள் ஏதும் வரும் போது ஹார்ட்-ரேட் சென்சாரை க்ளிக் செய்தால் உங்களது போனில் இருந்து நீங்கள் முக்கியமான வேலையில் இருப்பதாக குறுந்தகவல் அனுப்பட்டு விடும்.

டிஸ்ப்ளே
எட்ஜ் ஸ்கிரீன்களில் தலையங்கம் மற்றும் சில தகவல்களை பார்க்க முடியும், ஆனால் இவை யாஹூ மற்றும் டுவிட்டர் தளங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பேட்டரி
கேலக்ஸி எஸ்6 உடன் ஒப்பிடும் போது கேலக்ஸி எட்ஜ் பேட்டரி அதிகளவில் பேக்கப் வழங்குகின்றது. இதற்கு அதிக விலை என்றாலும் இந்த விலை வித்தியாச வடிவமைப்பிற்காக வழங்கலாம்.

எல்ஜி ஜி ஃப்ளெக்ஸ்2
ஜி ஃப்ளெக்ஸ்2-வும் வளைந்த போன் தான், இதன் இரு புறங்களிலும் நோட்டிபிகேஷன் விளக்குகள் மற்றும் தகவல்களை செட் செய்து கொள்ளலாம்.

செல்ஃப்-ஹீலிங்
ஃப்ளெக்ஸ்2 வின் பின்புறம் இருக்கும் தொழில்நுட்பமானது பின்புறம் ஏதேனும் ஸ்க்ராட்ச் ஏற்பட்டால் அதிகபட்சம் பத்து நொடிகளில் அதனை சரி செய்து விடும். சிறிய அளவில் ஸ்க்ராடச் ஏற்பட்டால் நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை.

ஸ்கிரீன்
மற்ற மாடல்களை போன்று இந்த கருவியை பெரிய கேஸ் மூலம் பாதுகாக்க தேவையில்லை, ஏனெனில் இதில் இருக்கும் டிஸ்ப்ளே அதிக உறுதியானதாகும். இதற்காக விசேஷ மூல பொருள் டிஸ்ப்ளேவில் பயன்படுத்தப்படுகின்றது.

அப்டேட்
எல்ஜியின் அடுத்த மாடலாக ஜி4 விரைவில் வெளியாக இருக்கின்றது. இதில் செல்ஃப்-ஹீலிங் தொழில்நுட்பம் இல்லை என்றாலும் இந்த கருவி லெதர், மெட்டல் அல்லது செராமிக் கொண்டு வடிவமைக்கப்படும் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








