உடலின் மின்சார உறுப்பு ஒரு நாள் விடுப்பெடுத்தால் என்னவாகும்??

By Meganathan
|

பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்துவதில் துவங்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு, மனிதனின் வாழ்வில் தவிர்க்க முடியாத கருவியாகவே உருவெடுத்து விட்டது. அழைப்புகளை மேற்கொள்ளத் துவங்கிய உறவு இன்று பல எல்லைகளைக் கடந்து விட்டது. மேலும் உலகெங்கும் ஸ்மார்ட்போன் சந்தையின் வியாபாரம் பரந்து விரிந்திருக்கின்றது.

பொது மக்களை தனக்கு அடிமைகளாக்கி விட்ட ஸ்மார்ட்போன் கருவிகள் மனிதர்களிடம் ஒரு நாள் இல்லையென்றால் என்னவாகும்..

அலாரம்

அலாரம்

வழக்கமாக நம்மை எழுப்பும் ஸ்மார்ட்போன் அலாரம் அடிக்காது, போன் இல்லாமல் நாள் வழக்கத்தை விட தாமதமாக துவங்கும். இத்துடன் நடு இரவில் நோட்டிஃபிகேஷன் தொந்தரவில்லாமல் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.

கை கடிகாரம்

கை கடிகாரம்

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல நேரம் பார்க்க முடியாமல் எல்லா பணிகளும் தாமதமாகும். எந்நேரமும் மணிக்கட்டில் இருந்தும் நீங்கள் பார்க்காத கை கடிகாரத்தை நாள் முழுக்க பார்க்கத் தூண்டும்.

நோட்டிஃபிகேஷன்

நோட்டிஃபிகேஷன்

காலையில் இருந்து வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் பார்க்காதது ஞாபகத்திற்கு வரும். பின் யார் யார் என்னென்ன மெசேஜ் அனுப்பியிருப்பார்கள் என யோசிக்கத் தோன்றும்.

தலைவலி

தலைவலி

நாள் துவங்கியதில் இருந்து ஏற்பட்ட அனைத்துத் தடங்கல்களுக்கும் இலவச பரிசாக தலைவலியும் ஏற்படும். காலை முதல் ஸ்மார்ட்போன் மூலம் யாருடனும் பேசாமல் மனம் ஒரு வித குழப்பம் கலந்த அமைதியை அடைந்திருக்கும்.

செல்பீ

செல்பீ

செல்பீ எடுக்காததால் முகம் மற்றும் தலைமுடியை கவனிப்பது சிரமமானதாக இருக்கும். பின் நீண்ட இடைவெளிக்குப் பின் அடிக்கடி முகக் கண்ணாடியை மனம் தேட ஆரம்பிக்கும்.

ஸ்டேட்டஸ்

ஸ்டேட்டஸ்

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அப்டேட் செய்யாதது, மனதில் ஒருவித படபடப்பை ஏற்படுத்தும். மேலும் இன்றைய ட்ரெண்ட் என்னவென்று தெரியாமல், அடிக்கடி சிரிக்க வைத்த மீம்ஸ் பார்க்க முடியாதது வருத்தத்தை ஏற்படுத்தும்.

இசை

இசை

பாடல் மற்றும் காணொளி இல்லாததால் அருகில் இருப்பவர்களைக் கவனிக்க முடியும். இந்த அனுபவம் ஸ்மார்ட்போன்களுக்கு முந்தைய காலகட்டத்தை நினைவூட்டும்.

ரிமைன்டர்

ரிமைன்டர்

நாள் முழுக்கச் செய்ய வேண்டிய பணிகளை நினைவூட்ட ரிமைன்டர் இல்லாததால் எல்லாப் பணிகளும் மறந்து போகும். யாரை எங்கு எப்போது சந்திக்க வேண்டும் போன்ற தகவல்கள் உட்பட வீட்டில் இருப்போர் மொபைல் எண் நினைவில் இல்லாதது சங்கடத்தை ஏற்படுத்தும்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

எவ்வித ஆப்ஸ்களையும் பயன்படுத்த முடியாமல், எல்லாவற்றிற்கும் அசௌகரியமாக இருக்கும். புது இடங்களுக்குச் செல்வதில் துவங்கி புதிய உணவகத்தைத் தேர்வு செய்வது வரை எல்லாமே ஒரு வித பயத்துடன் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

இறுதியில் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருந்தது (அவதிப் பட்டது) போதும் என மனதைத் தேற்றி கொண்டு மீண்டும் ஸ்மார்ட்போன் கருவியை மனம் தேடும். ஸ்மார்ட்போன் எனும் மின்சார உறுப்பு மீண்டும் உடலில் இணைந்ததும் மனம் மகிழ்ச்சியடையும்.

இயந்திரம்

இயந்திரம்

ஸ்மார்ட்போன் மீண்டும் கிடைத்ததும் மனம் நிறைய மகிழ்ச்சியோடு இயந்திர வாழ்க்கை மீண்டும் இனிதே துவங்கும். உள்ளங்கை அளவு கொண்ட இயந்திரம் மீண்டும் உங்களை இயந்திரமாக்கியிருக்கும்.

பயன்பாடு

பயன்பாடு

எவ்வித உயர் தொழில்நுட்பமானாலும், அது நம் வாழ்க்கையை எந்தளவு எளிமையாக்கினாலும், அதன் பயன்பாடுகளை அளவோடு வைத்திருத்தல் அனைவருக்கும் நன்மை பயக்கும்.

Best Mobiles in India

English summary
Things Happen Without Smartphone in A single day Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X