தரமான பவர் பேங்க் தேர்வு செய்யச் சில டிப்ஸ்..

Written By:

இன்று ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் பையில் கட்டாயம் இடம் பெறும் கருவியாகப் பவர் பேங்க்'கள் இருக்கின்றன. ஸ்மார்ட்போன்களில் சார்ஜ் தீரும் போது அவற்றிற்கு மீண்டும் சக்தியூட்ட பவர் பேங் கருவிகள் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

அப்படியா, இது என்னிடம் இல்லையே.. உடனே வாங்க வேண்டும் எனத் திட்டமிடுகின்றீர்களா??

புதிய பவர் பேங் கருவியினை வாங்கும் முன் கீழ் வருவனவற்றைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கொள்ளளவு

கொள்ளளவு

பவர் பேங்க் வாங்கும் போது நினைவில் கொள்ள வேண்டியதில் முதன்மையானதாக அதன் கொள்ளளவினை முடிவு செய்ய வேண்டும். பவர் பேங் கொள்ளளவு திறன் மில்லி ஆம்ப் ஹவர்களில் (Milliamp Hours -mAh) கணக்கிடப்படுகிறது. இதனால் அதிகக் கொள்ளளவு கொண்ட பவர் பேங்க்களைத் தேர்வு செய்வது நல்லது.

மேலும் அவுட்புட் வோல்டேஜ் அளவைப் பார்ப்பது அவசியம் ஆகும்.சார்ஜ் செய்ய வேண்டிய கருவியை விடக் குறைந்தளவு அவுட்புசட் வோல்டேஜ் இருக்கும் பவர் பேங்க் வேலை செய்யாமல் போகலாம்.

உதாரணத்திற்கு உங்களின் கருவி 1500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்பட்டால், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பவர் பேங்க் வாங்குவது நல்லது.

தரம் மற்றும் பாதுகாப்பு

தரம் மற்றும் பாதுகாப்பு

பவர் பேங் கருவியின் கட்டமைப்புத் தரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்து வாங்குவது நல்லது. ஒட்டு மொத்த தரம் கொண்ட பவர் பேங்க் நீண்ட நாள் உழைக்கும். குறைந்த தரம் கொண்ட பவர் பேங் கருவிகள் குறைந்த காலகட்டத்தில் பாழடைவதோடு கருவியையும் பாழாக்கலாம்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

ஃப்ளெக்ஸிபிலிட்டி பவர் பேங் கருவிகளின் முக்கிய அம்சம் ஆகும். சந்தையில் கிடைக்கும் பவர் பேங் கருவிகளில் சில மாடல்கள் ஒரே நேரத்தில் அதிகப்படியான கருவிகளைச் சார்ஜ் செய்யும் திறன் கொண்டிருக்கும். இவற்றைப் பயன்படுத்தி ஸ்மார்ட்போன், டேப்ளெட் மற்றும் கேமரா எனப் பல்வேறு கருவிகளைச் சார்ஜ் செய்ய முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எல்இடி இன்டிகேட்டர்

எல்இடி இன்டிகேட்டர்

பில்ட் இன் எல்இடி இன்டிகேட்டர் கொண்ட பவர் பேங் கருவிகளைக் கொண்டு கருவியின் பேட்டரி அளவு, சார்ஜிங் நிலை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். இதனால் பவர் பேங்க் வாங்கும் போது தெளிவான எல்இடி இன்டிகேட்டர் கொண்ட மாட்டல்களைத் தேர்வு செய்வது நல்லது.

பிரான்டு

பிரான்டு

பவர் பேங்க் வாங்கும் போது நன்கு அறிமுகமான பிரான்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும். இதனால் கருவியின் தரம் மற்றும் அதனுள் இருக்கும் பாகங்கள் உண்மையானதாக இருக்கும்.

குறைந்த விலைக்கு அதிகக் கொள்ளளவு கொண்ட பவர் பேங்க்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் இவை குறைந்த காலகட்டத்தில் பாழாகி விடுவதோடு கருவியையும் பாழாக்கி விடும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

நீண்ட நேரம் சார்ஜ் செய்வது எவ்வித மின்சாதன கருவிக்கும் நல்லது கிடையாது. இரவு முழுக்கக் கருவிகளைச் சார்ஜ் செய்யும் போது அதிகப்படியான வெப்பம் காரணமாக அவை வெடித்துச் சிதறும் அபாயம் அதிகமாகும்.

அம்பெயர் கவுண்ட்

அம்பெயர் கவுண்ட்

பவர் பேங் கருவிகளில் அம்பெயர் கவுண்ட் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சார்ஜ் செய்யப்பட வேண்டிய கருவிக்கு 2.1 amps தேவையெனில் நீங்கள் வாங்கும் பவர் பேங் கருவி குறைந்த பட்சம் 2.1 amps அல்லது அதற்கும் அதிகமான அளவு மின்சாரத்தை வழங்க வேண்டும்.

ஒருவேலை இந்த அளவு குறையும் போது சார்ஜ் செய்யப்பட வேண்டிய கருவிக்குச் சீரான மின்சாரம் வழங்க முடியாமலோ அல்லது மிகவும் குறைந்த வேகத்தில் மின்சாரம் பரிமாற்றம் செய்யப்படும். சில சமயங்களில் மின்சாரப் பரிமாற்றம் இல்லாதது போன்றும் இருக்கலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
things to consider while buying a power bank
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot