Home
News

ஆண்ட்ராய்டு பயனர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய ஐபோன் 7 அம்சங்கள்.!

By Meganathan

ஐபோன் 7 விற்பனை இந்தியாவில் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றது. இதுவரை இல்லாதளவு அதிக சக்தி கொண்ட ஐபோன் கருவியினை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது என்றே கூற வேண்டும். புதிய ஐபோன்களின் விலையும் ஆப்பிள் வழக்கம் போல அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காசு இருப்பவர்களும், கையில் காசு இல்லாதவர்களும் புதிய கருவிகளை வாங்க ஆப்பிள் நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இதனால் இந்திய பயனர்கள் ரூ.1700 என்ற முன்பணத்தைச் செலுத்தியும் புதிய ஐபோன் 7 சீரிஸ் போன்களைப் பெற்று கொள்ள முடியும், மீதித் தொகையை தவனை முறையில் செலுத்த வேண்டும். இதோடு ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும் என்றும் கூறப்படுகின்றது. இத்தனை அலப்பறைகளுக்கு புதிய ஐபோன்கள் ஏற்றக் கருவி தானா, என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆண்ட்ராய்டு பிரியர்கள் புதிய ஐபோன் கருவியில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் சில இருக்கின்றது.

அதிக மெமரி

அதிக மெமரி

பொதுவாக ஐபோன்களில் இருந்த குற்றச்சாட்டு ஐபோன் 7 கருவிகளில் நீக்கப்பட்டுள்ளது. 16 ஜிபி என்ற மிகக் குறைந்த அளவு மெமரி கொண்ட கருவியின் விலை மிகவும் அதிகமாக இருக்கின்றது, மேலும் மெமரியை நீட்டிக்கும் வசதி இல்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது. அதன் படி குறைந்தபட்ச மெமரி அளவினை 16 ஜிபியில் இருந்து 32 ஜிபியாக உயர்த்தியுள்ளது.

புதிய மெமரி

புதிய மெமரி

இதைத் தொடர்ந்து ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகள் 32 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபிக்களில் கிடைக்கின்றது. இத்துடன் கருப்பு (Matte Black, Glossy Black) என இருவித புதிய நிறங்களிலும் கோல்டு, சில்வர் மற்றும் ரோஸ் கோல்டு போன்ற நிறங்களிலும் கிடைக்கின்றது.

கேமரா

கேமரா

ஐபோன் கேமரா நல்ல புகைப்படங்களை வழங்கும் என்ற கருத்து இருந்தாலும், ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட பிளாக்ஷிப் அதாவது பெரிய ஸ்மார்ட்போன் மாடல் கருவிகளில் ஐபோன் 6எஸ் பிளஸ் கேமராவை விடச் சிறப்பான புகைப்படம் எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐபோன் 7 கேமரா

ஐபோன் 7 கேமரா

ஐபோன் 7 கருவியில் 12 எம்பி பிரைமரி கேமராம ற்றும் 6 எலிமென்ட் லென்ஸ், 1.8 அப்ரேச்சர், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைஸர், 2 டோன் பிளாஶ், குவாட்-எல்இடி பிளாஷ் மற்றும் 7 எம்பி ஃபேஸ்டைம் எச்டி கேமரா போன்றவை அதிக துல்லியமான புகைப்படங்களை எடுக்க வழி செய்யும்.

ஹெட்போன் ஜாக்

ஹெட்போன் ஜாக்

பல்வேறு காரணங்களுக்கான ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் கருவிகளில் இருந்து ஹெட்போன் சாக்தனை நீக்கியுள்ளது. இதனால் பயனர்கள் வையர் இல்லா ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத்துடன் புதிய கருவிகளில் பயன்படுத்த வையர் இல்லா ஹெட்போன்களையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வாட்டர் ப்ரூஃப்

வாட்டர் ப்ரூஃப்

ஆண்ட்ராய்டு கருவிகளின் பிரத்தியேக அம்சமாக விளங்கிய வாட்டர் ப்ரூஃப் அம்சத்தினை ஆப்பிள் நிறுவனம் புதிய கருவிகளில் வழங்கியுள்ளது. இதனால் வாட்டர் ப்ரூஃப் அம்சம் குறித்து ஆண்ட்ராய்டு பயனர்கள் அதிகளவு பெருமை கொள்ள இயலாது. நீர் மற்றும் தூசிகளால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் அம்சத்தினை ஐபி67 சான்று பல்வேறு ஆண்ட்ராய்டு கருவிகளில் வழங்கப்பட்டுள்ளன.

சிப்செட்

சிப்செட்

ஆப்பிள் நிறுவனம் தங்களது புதிய கருவிகள் 64-பிட் குவாட்-கோர் பிராசஸர் மூலம் சக்தியூட்டப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த வகை சிப்செட்கள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் கருவிகளை விட வேகமானதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்

ஸ்டீரியோ ஸ்பீக்கர்

பிளாக்ஷிப் கருவிகளில் பெரிய விடயமாக இல்லை என்றாலும் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கருவிகளில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை வழங்கியுள்ளது. சில காலம் முன்னரே எச்டிசி நிறுவனம் பூம்சவுண்டு தொழில்நுட்பத்தினை தனது எச்டிசி ஒன் 7 கருவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Things Android users should know about the iPhone 7 Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X