Home
News

பீதியை கிளப்பும் புதிய பாஸ்வேர்ட் திருட்டு வழிகள், அனைவரும் உஷார்.!

பாஸ்வேர்ட், பின் நம்பர், பிங்கர் ட்ரான் பேட்டர்ன் லாக் - எல்லா பாதுகாப்பு முறைகளும் இப்போது சிக்கலுக்குள்.!

By Muthuraj

நாம் நமது ஸ்மார்ட்போனை தொலைக்கும் போது ஒரு வகையான மரண பயத்தை உணர்வோம் என்கிறது ஒரு ஆராய்ச்சி - அது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்பதை அனுபவித்த ஒவ்வொருவரும் அறிவோம்.

பீதியை கிளப்பும் புதிய பாஸ்வேர்ட் திருட்டு வழிகள், அனைவரும் உஷார்.!

அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்களோடு நாம் பிண்ணிப்பிணைந்துள்ளோம் - என் ஸ்மார்ட்போன்கள் எனது கைகளுக்குள் இருக்கும் வரை, எனக்கு மட்டுமே அறியப்பட்ட என் கருவியின் பாஸ்வேர்ட் அல்லது பின் (PIN) போன்ற பாதுகாப்புகள் இருக்கும் வரை நான் ஏன் அச்சம் கொள்ள வேண்டும் என்பது உங்கள் நினைப்பென்றால் அதை இன்றோடு மறந்து விடுங்கள்.

இந்த நொடி முதல் உங்களின் ஸ்மார்ட்போன் சார்ந்த பாதுகாப்பில் அண்டமே புகும் அளவு ஒரு பெரிய ஓட்டை விழுந்து விட்டதென்று எண்ணிக் கொள்ளுங்கள். ஆம் ஸ்மார்ட்போன் திருடர்கள் உங்கள் ஸ்மார்ட்போனின்பாஸ் வேர்ட் மற்றும் பின் ஆகிய குறியீடுகளை நொடிகளில் கண்டுபிடிக்க ஒரு புதிய வழி கண்டறிந்துவிட்டனர்.

பெருமளவில் பாதிக்கப்பட போவது

பெருமளவில் பாதிக்கப்பட போவது

இந்த புதிய திருட்டு வழிமுறையில் பெருமளவில் பாதிக்கப்பட போவது ஆண்ட்ராய்டு பயனர்கள் தான் என்பது வெளிப்படை. அதாவது இந்த புதிய பாஸ்வேர்ட்/பின் திருட்டு முறையில் தெர்மல் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

வெப்பநிலை

வெப்பநிலை

தெர்மல் எனர்ஜி என்றால் ஒரு அமைப்பில் அதன் வெப்பநிலைக்கு ஏற்ப அதிகரிக்கும் ஆற்றல் வெப்ப ஆற்றல் எனப்படும். ஒரு அமைப்பை அல்லது பொருளைச் சூடுபடுத்தும்போதோ குளிர்விக்கும்போதோ அதன் வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும் ஆற்றலை இது குறிக்கும்.

விரல்களின் அச்சு

விரல்களின் அச்சு

அதாவது நீங்கள் உங்கள் கருவியில் பாஸ்வேர்ட் சார்ந்த இலக்கங்கள் தட்டிய பிறகு, தீங்குவிளைப்பவர்கள் திரையில் ஒட்டியுள்ள உங்கள் விரல்களின் அச்சுகளை வெப்பத்தின் மூலம் தெர்மல் கேமராக்கள் பயன்படுத்தி குறிப்பிட்டு கொள்வர்.

வெப்பப்புள்ளி

வெப்பப்புள்ளி

இந்த வெப்பப்புள்ளிகள் சிறிது எல்லாம் கழித்து மங்கலான ஒரு நிலையை அடைந்து விடும் ஆக ஸ்வைப் மாதிரியான வரையப்பட்ட பாஸ்வேர்ட் (finger-drawn pattern) கொண்ட பயனர்கள் தான் இந்த புதிய திருட்டு முறையில் அதிகம் பாதிக்கப்படுவர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

தனிப்பட்ட புகைப்படங்கள், அழைப்பு பதிவுகள், வங்கி கணக்குகள், மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற தனிப்பட்ட மொபைல் தரவுகளின் தொகையை பொறுத்து தீங்கிழைக்கும் தாக்குதல்களில் பல்வேறு வகையான முறைகளில் நாம் எதிர்கொள்ள நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மையப்படுத்திய விசாரணைகள்

மையப்படுத்திய விசாரணைகள்

முதலில் பாதுகாப்பு சமூகத்தினர் சமீபத்தில் போன்ற ஷோல்டர்சர்பிங், அதாவது நெரிசலான பகுதிகளில் உங்களின் முதுகிற்கு பின்பக்கமாய் நின்று உங்களில் பாஸ்வேர்ட்களை திருடும் முறை மற்றும் அழுக்கு தடம் கொண்டு பாஸ்வேர்ட்களை திருடுதல் போன்ற தாக்குதல்களை மையப்படுத்திய விசாரணைகள் தான் கவனத்தில் கொள்ளப்பட்டு வந்தது.

டச் திரை

டச் திரை

தற்போது சமீபத்தில் தான் ஒரு புதிய அச்சுறுத்தல் மீது அதாவது, மொபைல் சாதனங்களின் டச் திரைகளில் மீதுள்ள வெப்ப தாக்குதல்கள் சார்ந்த திருட்டின் மீது பாதுகாப்பு ஆராய்ச்சி சமூகத்தினர் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

விரைவில்

விரைவில்

இதர திருட்டு வழிமுறைகளில் இருந்து பாதுகாப்பு அம்சங்கள் வலிமைப்படுத்தப்பட்டது போல இதிலிருந்தும் தப்பிக்க வழிமுறைகள் விரைவில் கண்டறியப்படும் வரை பயனர்கள் இன்னும் அதிக கவனத்தோடு செயல்பட பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

முன்னெச்சரிக்கை : இதுதான் உங்கள் பாஸ்வேர்ட் என்றால் உடனே மாற்றி விடவும்..!

புகைப்படங்கள் : ஸ்டட்கர்ட் பல்கலைக்கழகம்

Best Mobiles in India

English summary
Thieves can steal your smartphone PIN code in SECONDS. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X