இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!

|

உங்கள் கையில் இருக்கும் ஒரு ஸ்மார்ட்போனுக்கு, மிகப்பெரிய அப்டேட் ஒன்று கிடைக்காது என்று கூறினால்.. நீங்கள் பாவம் தானே!?

நீங்களொரு சியோமி, ரெட்மி அல்லது போக்கோ யூசராக இருந்தால், ஒருவேளை உங்களுக்கு நினைவில் இருக்கலாம் - கடந்த 2021 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தான், மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கான MIUI 13 சாப்ட்வேர் அப்டேட் வெளியானது.

அதன் "வாரிசு".. அதாவது MIUI 14 ஆனது "அதே" காலக்கட்டத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டில், எம்ஐயுஐ 14 ஓஎஸ் ஆனது எந்தெந்த (சியோமி, ரெட்மி, போக்கோ) மாடல்களுக்கு வரும் மற்றும் வராது என்கிற பட்டியல் வெளியாகி உள்ளது.

சில போன்களுக்கு மட்டுமே வராது!

சில போன்களுக்கு மட்டுமே வராது!

MIUI 14 அப்டேட் ஆனது, இந்த 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அல்லது நான்காம் காலாண்டில் 'பப்ளிக்' ஆக, அதாவது அனைவருக்கும் அணுக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இது Android 13 OS அடிப்படையாக கொண்டிருக்கும்.

எந்தெந்த போன்களுக்கு MIUI 14 அப்டேட் கிடைக்கும் என்கிற பட்டியல் மிகவும் நீளமானது. அந்த பட்டியலில் 100 க்கும் மேற்பட்ட சியோமி, ரெட்மி மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

மறுகையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு MIUI 14 அப்டேட் கிடைக்காது என்கிற பட்டியல் மிகவும் சிறியது. அதில் சில போன்கள் மட்டுமே உள்ளன. அதை பற்றி பார்க்கும் முன்பு, MIUI 14 அப்டேட்-ஐ பெறுவதற்கான தகுதியை கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்த்து விடலாம்.

இவ்ளோ கம்மி விலைக்கு 50MP கேமரா; 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி-ஆ!இவ்ளோ கம்மி விலைக்கு 50MP கேமரா; 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி-ஆ!

MIUI 14 அப்டேட்டை பெறவுள்ள சியோமி Mi சீரீஸ் போன்களின் பட்டியல்:

MIUI 14 அப்டேட்டை பெறவுள்ள சியோமி Mi சீரீஸ் போன்களின் பட்டியல்:

சியோமி Mi 11 லைட் 4G
சியோமி Mi 11 லைட் 5G
சியோமி 11 லைட் 5G NE
சியோமி Mi 11 LE
சியோமி Mi 11
சியோமி Mi 11i
சியோமி Mi 11 அல்ட்ரா
சியோமி Mi 11 ப்ரோ
சியோமி Mi 11X
சியோமி Mi 11X ப்ரோ
சியோமி Mi நோட் 10 லைட்
சியோமி Mi 10
சியோமி Mi 10i 5G
சியோமி Mi 10S
சியோமி Mi 10 ப்ரோ
சியோமி Mi 10 லைட்
சியோமி Mi 10 லைட் ஜூம்
சியோமி Mi 10 அல்ட்ரா
சியோமி Mi 10T
சியோமி Mi 10T ப்ரோ
சியோமி Mi 10T லைட்

மற்ற சியோமி போன்களின் பட்டியல்:

மற்ற சியோமி போன்களின் பட்டியல்:

சியோமி 13 ப்ரோ
சியோமி 13
சியோமி 12
சியோமி 12 ப்ரோ
சியோமி 12X
சியோமி 12 அல்ட்ரா
சியோமி 12S
சியோமி 12S ப்ரோ
சியோமி 12S ப்ரோ டைமன்சிட்டி எடிஷன்
சியோமி 12 லைட்
சியோமி 12T
சியோமி 12T ப்ரோ
சியோமி 11T
சியோமி 11T ப்ரோ
சியோமி 11i
சியோமி 11i ஹைப்பர்சார்ஜ்
சியோமி MIX 4
சியோமி MIX ஃபோல்ட்
சியோமி MIX ஃபோல்ட் 2
சியோமி Civi
சியோமி Civi 1S
சியோமி Pad 5
சியோமி Pad 5 ப்ரோ
சியோமி Pad 5 ப்ரோ 5G

பாவம் POCO ரசிகர்கள்.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஏமாறுவாங்களோ?!பாவம் POCO ரசிகர்கள்.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஏமாறுவாங்களோ?!

ரெட்மி நோட் சீரீஸ் போன்களின் முழு பட்டியல்:

ரெட்மி நோட் சீரீஸ் போன்களின் முழு பட்டியல்:

ரெட்மி நோட் 11
ரெட்மி நோட் 11 5G
ரெட்மி நோட் 11 SE
ரெட்மி நோட் 11 4G
ரெட்மி நோட் 11T 5G
ரெட்மி நோட் 11 ப்ரோ
ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5G
ரெட்மி நோட் 11S
ரெட்மி நோட் 11S 5G
ரெட்மி நோட் 11 ப்ரோ
ரெட்மி நோட் 11 ப்ரோ 5G
ரெட்மி நோட் 10 ப்ரோ
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்
ரெட்மி நோட் 10
ரெட்மி நோட் 10S
ரெட்மி நோட் 10 லைட்
ரெட்மி நோட் 10 5G
ரெட்மி நோட் 10T 5G
ரெட்மி நோட் 10 ப்ரோ 5G
ரெட்மி நோட் 9 4G
ரெட்மி நோட் 9 5G
ரெட்மி நோட் 9T 5G
ரெட்மி நோட் 9 ப்ரோ 5G

மற்ற ரெட்மி போன்களின் பட்டியல்:

மற்ற ரெட்மி போன்களின் பட்டியல்:

ரெட்மி K50
ரெட்மி K50 ப்ரோ
ரெட்மி K50 கேமிங்
ரெட்மி K50i
ரெட்மி K50i ப்ரோ
ரெட்மி K50S
ரெட்மி K50S ப்ரோ
ரெட்மி K40S
ரெட்மி K40 ப்ரோ
ரெட்மி K40 ப்ரோ+
ரெட்மி K40
ரெட்மி K40 கேமிங்
ரெட்மி K30S அல்ட்ரா
ரெட்மி K30 அல்ட்ரா
ரெட்மி K30 4G
ரெட்மி K30 ப்ரோ
ரெட்மி நோட் 8 (2021)
ரெட்மி 10C
ரெட்மி 10A
ரெட்மி 10 பவர்
ரெட்மி 10
ரெட்மி 10 5G
ரெட்மி 10 பிரைம்+ 5G
ரெட்மி 10 (இந்தியா)
ரெட்மி 10 பிரைம்
ரெட்மி 10 பிரைம் 2022
ரெட்மி 10 2022
ரெட்மி 9T
ரெட்மி 9 பவர்
ரெட்மி நோட் 11E
ரெட்மி நோட் 11E ப்ரோ
ரெட்மி நோட் 11T ப்ரோ
ரெட்மி நோட் 11T ப்ரோ+

பொசுக்குனு Redmi K50i வாங்கிட்டா.. பொறுமையா உட்காந்து வருத்தப்படனுமா!?பொசுக்குனு Redmi K50i வாங்கிட்டா.. பொறுமையா உட்காந்து வருத்தப்படனுமா!?

MIUI 14 அப்டேட்டை பெறவுள்ள போக்கோ போன்களின் முழு பட்டியல்:

MIUI 14 அப்டேட்டை பெறவுள்ள போக்கோ போன்களின் முழு பட்டியல்:

போக்கோ M3
போக்கோ M4 ப்ரோ 4G
போக்கோ M4 5G
போக்கோ M5
போக்கோ M5s
போக்கோ X4 ப்ரோ 5G
போக்கோ M4 ப்ரோ 5G
போக்கோ M3 ப்ரோ 5G
போக்கோ X3 / NFC
போக்கோ X3 ப்ரோ
போக்கோ X3 ஜிடி
போக்கோ X4 ஜிடி
போக்கோ F4
போக்கோ F3
போக்கோ F3 GT
போக்கோ C40
போக்கோ C40+

எந்தெந்த போன்களுக்கு கிடைக்காது?

எந்தெந்த போன்களுக்கு கிடைக்காது?

முன்னரே குறிப்பிட்டபடி, MIUI 14 அப்டேட்டிற்கு தகுதியற்ற ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அவைகள் அனைத்துமே "அதிகபட்சமாக" ஆண்ட்ராய்டு 11 வெர்ஷனை கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால் உங்கள் ஸ்மார்ட்போன் Android 12 ஓஎஸ்-ஐ ஆதரிக்கவில்லை என்றால், அது MIUI 14 அப்டேட்டை பெறாது.

ஏனெனில் வரவிருக்கும் MIUI வெர்ஷன் ஆனது லேட்டஸ்ட் Android OS-ஐ சார்ந்ததாக இருக்கும். ஆக ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 14 வெளியாக வாய்ப்பே இல்லை. மாறாக இது ஆண்ட்ராய்டு 13 உடன் இணைந்து சில அம்சங்களை வழங்கும்.

இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!

இந்த லிஸ்ட்டில் உள்ள ரெட்மி, போக்கோ போன்களுக்கு MIUI 14 அப்டேட் கிடைக்காது!

இந்த லிஸ்ட்டில் உள்ள ரெட்மி, போக்கோ போன்களுக்கு MIUI 14 அப்டேட் கிடைக்காது!

MIUI 14 அப்பேட்டை பெறாத ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் - ரெட்மி நோட் 9 சீரிஸ், ரெட்மி நோட் 8 சீரிஸ் மற்றும் பிற பழைய நோட் சீரிஸ் போன்கள் உள்ளன.

உடன் ரெட்மி 9, போக்கோ எம்2 சீரிஸ், போக்கோ சி3, சி31 மற்றும் எம்ஐ 9 சீரிஸ் போன்ற பட்ஜெட் போன்களும் கூட MIUI 14 அப்டேட்டிற்கு "தகுதியற்றவை" என்று கூறப்படுகிறது.

மிகவும் பிரபலமான ரெட்மி கே20 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் கூட சியோமியின் இந்த அப்டேட் சைக்கிளில் இருந்து கைவிடப்படலாம் என்பது போல் தெரிகிறது.

MIUI 14 அப்டேட்டை பெறும் மற்றும் பெறாத ஸ்மார்ட்போன்கள் என்கிற இந்த பட்டியல் 100% அதிகாரப்பூர்வமானது அல்ல என்பதால், இந்த லிஸ்ட்-ஐ மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது.

Best Mobiles in India

English summary
These Xiaomi Redmi Poco Smartphones Which Not Getting MIUI 14 Update Check Eligible Devices List Too

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X