Home
News

யார்றா நீங்கலாம்.. Vodafone SIM ஆக்டிவ் பிளான்.. குறைஞ்சது ரூ.100 அதிகபட்சம் ரூ.250.. வாய்ஸ், டேட்டா, SMS!

வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது 2 புதிய வாய்ஸ் அண்ட் எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்களை (Voice and SMS Only Plans) அறிமுகம் செய்ததும், பின்னர் அவைகளின் விலைகள் குறைக்கப்பட்டு.. தற்போது ரூ.470 மற்றும் ரூ.1849 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைப்பதும் பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.

ஆனால் இன்னமும் கூட, இவ்விரு திட்டங்களும் பெரும்பாலான வோடபோன் ஐடியா சிம் கார்டு பயனர்களுக்கு விலை அதிகமான திட்டங்களாகவே தெரிகின்றன. ஒருவேளை இன்னும் மலிவான விலைக்கு அதாவது ரூ.100 - ரூ.250 க்குள் என்கிற செலவில், வோடபோன் ஐடியா சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைத்திருக்க விரும்பும் கஸ்டமர்களில் நீங்களும் ஒருவரா? ஆம் என்றால் கவலையை விடுங்க!

Vodafone SIM ஆக்டிவ் பிளான்.. குறைஞ்சது ரூ.100 அதிகபட்சம் ரூ.250!

ஏனென்றால் வோடபோன் ஐடியா சேவையின் கீழ் ரூ.160 - ரூ.250 க்குள்.. வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய 3 முக்கிய நன்மைகளையும் வழங்கும்.. 4 ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. கூடவே ஒரே ஒரு திட்டம் (எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லாமல்) ரூ.100 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. அதென்ன திட்டங்கள்? அவைகளின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

01. ரூ.95 வோடாபோன் ஐடியா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Vodafone Idea Rs 95 Plan Details): இதன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 200 எம்பி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் எந்த எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்காது. இந்த திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம் 14 நாட்கள் ஆகும்.

02. ரூ.155 வோடாபோன் ஐடியா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Vodafone Idea Rs 155 Plan Details): இதன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1 ஜிபி அளவிலான ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் 300 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம் 20 நாட்கள் ஆகும்.

03. ரூ.179 வோடாபோன் ஐடியா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Vodafone Idea Rs 179 Plan Details): இதன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1 ஜிபி அளவிலான ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் 300 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும்.

04. ரூ.189 வோடாபோன் ஐடியா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Vodafone Idea Rs 189 Plan Details): இதன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1 ஜிபி அளவிலான ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் 300 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம் 260 நாட்கள் ஆகும்.

05. ரூ.249 வோடாபோன் ஐடியா ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Vodafone Idea Rs 249 Plan Details): இதன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 1 ஜிபி அளவிலான ஹை ஸ்பீட் டேட்டா மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இந்த திட்டத்திற்கான செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும்.

வோடாபோன் ஐடியாவின் புதிய ரூ.470 வாய்ஸ் எஸ்எம்எஸ் ஒன்லி பிளானின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் (Vodafone Idea Rs 470 Voice and SMS Only Plan Details): இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

வோடாபோன் ஐடியாவின் புதிய ரூ.1849 வாய்ஸ் எஸ்எம்எஸ் ஒன்லி பிளானின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் (Vodafone Idea Rs 1849 Voice and SMS Only Plan Details): இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
These Vodafone Idea Plans Under Rs 250 Keep Your SIM Card Active and Also Give Data Benefit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X