சூரியனே இல்லா நகரம்: தொடர்ந்து 60 நாட்களுக்கு 24 மணிநேரமும் இரவு மட்டுமே- எங்கு தெரியுமா?

|

நவம்பர் 19 ஆம் தேதி அஸ்தமனமாகும் சூரியன் ஜனவரி 22 வரை அதாவது 60 நாட்களுக்கு பூமியின் ஒரு நகரில் உதிக்காது என்றால் நம்ப முடிகிறதா. இதோ முழு விவரங்களையும் பார்க்கலாம்.

60 நாட்கள் சூரியன் உதிக்காது

60 நாட்கள் சூரியன் உதிக்காது

நீ மறைய நான் வருகிறேன் நான் மறைய நீ வா என சூரியனும் நிலவும் உலகை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அதிகாலை உதிக்கும் சூரியன் உயிர்ஜீவிகளின் அன்றாட வாழ்க்கையை உயிர்பிக்கச் செய்கிறது. உலகின் ஒரு நகரத்தில் மட்டும் வருகிற 60 நாட்கள் சூரியன் உதிக்காது என்றால் நம்பமுடிகிறதா.

60 நாட்களுக்கு இரவு மட்டுமே

60 நாட்களுக்கு இரவு மட்டுமே

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தின் ஒரு நகரத்தில் நேற்றை முன்தினம் அஸ்தமனமாகும் சூரியன் 60 நாட்களுக்கு பிறகுதான் உதிக்குமாம். சூரிய ஒளி இல்லாமல் 60 நாட்களுக்கு இரவு மட்டுமே இருக்கும் என்றால் அந்த நகர மக்களின் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும்.

இயற்கை சூழலில் பல மாற்றங்கள்

இயற்கை சூழலில் பல மாற்றங்கள்

சூரிய வெப்பம் இல்லாதபட்சத்தில் இயற்கை சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி இருக்கும்பட்சத்தில் அலாஸ்காவின் பாரா என்று அழைக்கப்படும் உத்கியாக்விக் நகரில் 60 நாட்களுக்கு சூரியன் இல்லா நகரமாக இருக்க போகிறது. நவம்பர் 19 2020 முதல் ஜனவரி 22 வரை அந்த நகரில் சூரிய உதயமே இருக்காது.

24 மணிநேரமும் இரவு

24 மணிநேரமும் இரவு

பூமி அச்சின் சாய்வின் காரணமாக இந்த நிகழ்வு குளிர்காலத்தில் நடக்கிறது. இந்த நிகழ்வு துருவ இரவு அதாவது Polar Night என்று அழைக்கப்படுகிறது. பகலே இல்லாமல் 24 மணிநேரமும் இரவாக இருக்கும் இந்த நிகழ்வு வடக்கு மற்றும் தென் துருவ பகுதிகளில் நடக்கிறது. பூமியின் சாய்வானது சூரியனின் வட்டு எதுவும் அடிவானத்திற்கு மேல் தெரியாதபடி செய்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உலகிலேயே இதுதான் கடைசி: அரியவகை உயிரினத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை!

பாரோ நகரில் முழு இருள்

பாரோ நகரில் முழு இருள்

24 மணி நேரமும் இரவாக இருக்கும் இந்த நிகழ்வு பாரோ நகரம் மற்றும் ஆர்க்டிக் வட்டத்திற்குள் உள்ள பிற இடங்களில் நடக்கும் சாதாரண நிகழ்வாகும் என கூறப்படுகிறது. இந்தாண்டு பாரோ நகரில் முழு இருளுடன் துருவ இரவு நடக்க இருக்கிறது. பூமியின் வடக்கு, தென்துருவ பகுதிகளின் பல்வேறு இடங்களில் குளிர்காலத்தின்போது இந்த நிகழ்வு நடக்கிறது.

சூரியனே இல்லாத நகரம் எப்படி இருக்கும்

சூரியனே இல்லாத நகரம் எப்படி இருக்கும்

சூரியனே இல்லாத அந்த நகரம் எப்படி இருக்கும் என்ற கேள்வி வரலாம். சூரியன் காட்சியளிக்கவில்லை என்றாலும் இருள் மூழ்கிய நிலையில் இருக்காது. சூரியன் உதிப்பதற்கு முன்பும் அஸ்தமனத்திற்கு முன்பும் வானம் எப்படி இருக்குமோ அதே சூழலில் பகல் நேரத்தில் இருக்கும். மங்கலான வெளிச்சத்தோடு நகரம் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

நவம்பர் 20 முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை

நவம்பர் 20 முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை

நவம்பர் 20 முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை சூரியனை பாரோ நகர மக்கள் பார்க்க மாட்டார்கள். இந்த நிகழ்வு இந்த நகரில் மட்டும் இல்லை வேறு சில நகரங்களில் நடக்கும். இதில் முதன்மை பட்டியலில் பாரோ நகரம் இருக்கிறது. இந்த நிகழ்வு அந்த நகர வாசிகளின் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் என கூறப்படுகிறது.

source: cnn.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
These Town People Can't See the Sun For Next 60 Days: Do you Know the Reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X