Home
News

ஜியோவை விட அதிக பயன் வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்.. இரவு முழுக்க இலவச டேட்டா.. ஆனால்?

டெலிகாம் துறையில் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய மூன்று தனியார் ஆபரேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் பயனர்களுக்குப் பரந்த அளவிலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு பலன்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அற்புதமான டேட்டா பலன்களையும் வழங்குகிறது. BSNL வழங்கும் மூன்று திட்டங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன, அவை டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளின் அடிப்படையில் பயனர்களுக்குச் சிறந்த சலுகையை வழங்குகின்றன.

ஜியோவை விட அதிக நன்மை வழங்கும் BSNL.. ஆனால்.?

ஜியோவை விட அதிக நன்மை வழங்கும் BSNL.. ஆனால்.?

இன்னும் உண்மையைச் சொல்லப் போனால், தற்போது டெலிகாம் துறையில் உள்ள எந்த நிறுவனமும் இவ்வளவு குறைந்த விலையில் இப்படி நன்மைகளை வழங்கக் கூடிய திட்டங்களை எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. BSNL வழங்கும் இந்த திட்டத்தின் நன்மைகள் ஒரு புறம் ஜியோ வழங்கும் நன்மைகளை விட சிறப்பாக இருக்கிறது. இருப்பினும், இதில் சில குறைபாடுகள் இருக்கிறது. BSNL வழங்கும் நன்மைகள் எல்லாம் 4ஜி வேகத்தில் இல்லாமல், 3ஜி சேவையில் இயங்குகிறது என்பது மட்டுமே ஒரு சிறிய குறைபாடாகப் பார்க்கப்படுகிறது.

BSNL வழங்கும் பெஸ்டான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள்

BSNL வழங்கும் பெஸ்டான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள்

BSNL நிறுவனத்தின் பட்டியலில் உள்ள முதல் ப்ரீபெய்ட் திட்டம் BSNL வழங்கும் STV_429 திட்டமாகும். இந்த ப்ரீபெய்ட் திட்டம் OTT இயங்குதளத்திற்கான அணுகலுடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், இந்த திட்டம் 81 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வெறும் ரூ 429 விலையில் வருகிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பை நன்மையை வழங்குவதோடு, அதன் பயனர்களுக்குத் தினமும் 1 ஜிபி டேட்டா வை வழங்குகிறது.

அன்லிமிடெட் அழைப்பு, 100 SMS மற்றும் OTT நன்மை

அன்லிமிடெட் அழைப்பு, 100 SMS மற்றும் OTT நன்மை

இத்துடன், இதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவும் கிடைக்கிறது. ஆனால், அன்லிமிடெட் இலவச டேட்டா உங்களுக்கு 40 கேபிபிஎஸ் என நிர்ணயிக்கப்பட்ட வேகத்துடன் கிடைக்கிறது. தினசரி வழங்கப்படும் வரம்பிற்குப் பிறகு இந்த அன்லிமிடெட் டேட்டாவை பயனர்கள் பயன்படுத்த முடியும். அதேபோல், இந்த திட்டத்துடன் அதன் பயனர்களுக்கு ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலுடன் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைக்கான அணுகலையும் BSNL வழங்குகிறது. BSNL இணையதளத்தில் 'வாய்ஸ் வவுச்சர்' என்ற பிரிவின் கீழ் இந்த திட்டத்தை வாங்கலாம்.

BSNL வழங்கும் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

BSNL வழங்கும் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

பட்டியலில் அடுத்து இருப்பது, டெல்கோ வழங்கும் டேட்டா சார்ந்த ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டம் ரூ.447 விலையில் வருகிறது. இந்த திட்டம் மொத்தம் 100ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட 100ஜிபி டேட்டாவைத் தாண்டிய பின்னர், பயனர்கள் 80 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை அணுக முடியும். இந்தத் திட்டம் 60 காலண்டர் நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது, மேலும் இது இணையதளத்தில் 'டேட்டா வவுச்சரின்' கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது ஒரு நாளைக்கு 100 SMS உடன் வரம்பற்ற குரல் அழைப்பையும் வழங்குகிறது. இத்துடன் BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான சந்தாவையும் பெறலாம்.

BSNL வழங்கும் STV_WFH_599 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL வழங்கும் STV_WFH_599 ப்ரீபெய்ட் திட்டம்

பட்டியலில் கடைசியாக இருப்பது, BSNL வழங்கும் நீண்ட கால மற்றும் அதிக டேட்டா ப்ரீபெய்ட் திட்டமாகும். BSNL வழங்கும் இந்த STV_WFH_599 என்ற ப்ரீபெய்ட் திட்டம் ரூ. 599 விலையில் வருகிறது. இத்திட்டம் ஒரு நாளைக்கு 5GB டேட்டாவை வழங்குகிறது. தினசரி டேட்டா வரம்பை உபயோகித்த பிறகு, பயனர்கள் 80 Kbps வேகத்தில் இணையத்தை அனுபவிக்க முடியும். மேலும், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்களாகும். மும்பை மற்றும் டெல்லியில் ரோமிங் செய்வது உட்பட ஹோம் எல்எஸ்ஏ மற்றும் தேசிய ரோமிங்கில் பயனர்கள் உண்மையிலேயே வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களைப் பெறுகிறார்கள்.

இரவு முழுக்க இலவச டேட்டா நன்மையையும் கிடைக்கிறதா?

இரவு முழுக்க இலவச டேட்டா நன்மையையும் கிடைக்கிறதா?

இந்தத் திட்டம் Zing ஸ்ட்ரீமிங் தளத்திற்கான சந்தாவையும் வழங்குகிறது. இது பயனர்களுக்கு ஆயிரக்கணக்கான பாடல்கள், திரைப்படங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை அணுக அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தில் உள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், பயனர்கள் 00:00 மணி முதல் 05:00 மணிநேரம் வரை வரம்பற்ற இலவச இரவுத் தரவைப் பெறுகிறார்கள். இந்த காலகட்டத்திற்குள் பயனர் பயன்படுத்தும் டேட்டா முற்றிலும் இலவசமானது என்பது குறிப்பிடத்தக்கது. கம்மி விலையில் அதிக பயனை விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த 3 திட்டங்களைக் கருத்தில் கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
These Three Prepaid Plans From BSNL Offer An Excellent Deal From Other Telecom Operators : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X