Home
News

மூன்று வருடாந்திர பிளான்களை வெளியிட்ட BSNL.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. என்ன விலை?

சமீபத்தில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (VI) நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தி அதிரவிட்டது. நாடு முழுவதும் இந்த டெலிகாம் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு மக்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த தனியார் டெலிகாம் நிறுவனங்கள் குறைந்த விலையில் வழங்கிய சில ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனால் பிஎஸ்என்எல் (Bsnl) நிறுவனம் இதுவரை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தவில்லை.

அதாவது இப்போதும் கூட குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கிவருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். சமீபத்தில் கூட மலிவு விலையில் ப்ரீபெயட் திட்டத்தை அறிமுகம் செய்து அசத்தியது பிஎஸ்என்எல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். பிஎஸ்என்எல் நிறுவனம் பட்ஜெட் விலையில் 365 நாள் வேலிடிட்டி தரும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை வெளியிடுகிறது. இப்போது அந்த மூன்று திட்டங்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மூன்று வருடாந்திர பிளான்களை வெளியிட்ட BSNL.. தினமும் 3ஜிபி டேட்டா..

பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 prepaid recharge plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

மூன்று வருடாந்திர பிளான்களை வெளியிட்ட BSNL.. தினமும் 3ஜிபி டேட்டா..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 prepaid recharge plan)ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 395 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 790ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.

இதுதவிர ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற பல சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1999 prepaid recharge plan) ஆனது மொத்தமாக 600ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திடடத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் கிடைக்கிறது.

மூன்று வருடாந்திர பிளான்களை வெளியிட்ட BSNL.. தினமும் 3ஜிபி டேட்டா..

அதாவது ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற போன்ற சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம்.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் சில முக்கிய இடங்களில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது. ஆனால் அடுத்த மாதம் இந்தியா முழுவதும் இந்நிறுவனம் 4G சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
These three BSNL prepaid plans offer 365-day validity and unlimited offers: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X