களத்தில் இஸ்ரோ : இனி பனிச்சரிவில் ஒரு இந்திய இராணுவ வீரனும் உயிரிழக்க கூடாது.!
சியாச்சின் சிகரத்தில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்திய ராணுவ வீர்களுக்கு உயிர்காக்கும் பல இருப்பினும் அவ்வப்போது ஏற்படும் பனிச்சரிவில் இருந்து எந்த விதமான அதிநவீன பாதுகாப்பும் இல்லை.!
எதிரிகளின் துப்பாக்கிகளில் இருந்து சீறிபாயும் புல்லட்களை விடவும் அவர்களின் ஆயுதங்களை விடவும் மிகவும் கொடுமையானது இந்திய ராணுவ வீரர்கள பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் சியாச்சின் சிகர பிரதேசம். அதற்கு அவ்வப்போது சியாச்சினில் நிகழும் பணிசரிவு விபத்துகளே சான்றாகும்..!
சியாச்சின் சிகரத்தில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்திய ராணுவ வீர்களுக்கு உயிர்காக்கும் பல இருப்பினும் அவ்வப்போது ஏற்படும் பனிச்சரிவில் இருந்து எந்த விதமான அதிநவீன பாதுகாப்பும் இல்லை என்பது தான் நிதர்சனம். அதை தீர்க்கும் நோக்கத்தோடு, 4 புத்திசாலிதனமான ஸ்பேஸ் டெக் திட்டத்தோடு களத்தில் குதித்துள்ளது இஸ்ரோ.!

இஸ்ரோ :
மிகவும் கடினமான வாழ்க்கை நிலைமைய கொண்ட பிரதேசமாகிய சியாச்சினில் உயிர் காப்பாற்றும் உதவும் பல அதிநவீன முயற்சிகளையும் முன்னேற்றங்களையும் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் திட்டமிட்டுள்ளது. அவைகளில் மிக முக்கியமான மற்றும் புத்திசாலித்தனமான 4 ஸ்பேஸ் டெக் வழிகளை முன்வைக்கிறார் ராக்கெட் சயின்ஸ் விஞ்ஞானியும் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனருமான கே சிவன்..!

டெக் #1 :
சிலிக்கா அரோஜெல் (Silica Aaerogel)

கடத்தாப்பொருள் :
சிலிக்கா அரோஜெல் என்பது மிகவும் எடை குறைவான (ultra-light weight) ஒரு கடத்தாப்பொருள் (insulator) ஆகும். 99% காற்றால் உருவான சிலிக்கா அரோஜெல் ஆனது ஒரு சிறப்பான வெப்ப காப்பானாக (thermal insulator) செயல்படுமாம். உடன் இந்த சிலிக்கா அரோஜெல்லை ராணுவ வீரர்களின் ஆடைகளின் இரண்டு அடுக்குளுக்கு நடுவே புகுத்திக் கொள்ள முடியும்.

உறுதி :
இதனால் பனிச்சரிவில் புதையுண்ட வீர்களின் உடல் வெப்பம் காப்பாற்றப்படும் வரையிலாக நீட்டித்து சேமிக்கப்படும் என்பது உறுதி..!

டெக் #2 :
ஹாண்ட்ஹெல்ட் சர்ச் மற்றும் மீட்பு ரேடியோ சிக்னல் எமிட்டர் (Handheld search and rescue radio signal emitter)

திறன் :
பொதுவாக செயற்கைகோள்கள் சிறிய அளவிலான சிக்னல்கள் மற்றும் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய கருவிகளில் இருந்து கிடைக்கும் சிக்னல்கள் ஆகியவைகளை எளிதில் கைப்பற்றும் திறன் கொண்டவைகள் ஆகும்.

துல்லியம் :
அவ்வாறான சிக்னல்களை வெளிக்கொணரும் கையடக்க சாதனங்களை அவசர நேரத்தில் பயன்படுத்தி தான் இருக்கும் இடத்தை துல்லியமாக ராணுவ வீரர்களால் காட்டிக் கொடுக்க முடியும்..!

ஜிபிஎஸ் :
எடுத்துகாட்டுக்கு ராணுவ வீரர் பனிச்சரிவில் புதையுண்டால், கையடக்க சாதனத்தின் பொத்தானை அழுத்தினால் போதும். அது ரேடியோ சிக்னல்களை உமிழ தொடங்கும். பின்பு செயற்கைக்கோள் உதவியுடன், ஜிபிஎஸ் பயன்படுத்தி சிக்னல் எங்கிருந்து பெறப்படுகிறது என்பதை மிகத்துல்லியமாக கண்டறிய முடியும்..!

மீனவர்களுக்காக :
விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது இதே போன்ற வேறொரு சாதனத்தையும் (சற்று பெரிய வடிவத்தில்) மீனவர்களுக்காக வடிவமைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

சிக்னல் துடிப்பு :
மீனவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள சாதனாமானது உப்பு நீரில் கலந்த பின்பு தானாக இயக்கம் கொள்ளும் படி உருவாக்கப் பட்டுள்ளது என்பதும், சுமார் 65 மணி நேரத்திற்கு சிக்னல் துடிப்பு கொண்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெக் #3 :
போர்டபில் ப்யூயல் செல் சிஸ்டம் (Portable fuel cell system)

மின்வேதியியல் செயல்முறை :
ஹைட்ரஜன் வாயு மற்றும் காற்று ஆகியவைகளை மட்டுமே பயன்படுத்தி மின்வேதியியல் செயல்முறையில் எரிபொருள் இருந்து நேரடியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை தான் போர்டபில் ப்யூயல் செல் சிஸ்டம் ஆகும். இம்முறையினை கொண்டு சுமார் 100 வாட் வரை சக்திதனை உருவாக்க முடியும்.

மின்சார உற்பத்தி :
தடையில்லா மின்சாரம் பெறும் வசிதிகள் இல்லாத இடத்தில் இம்முறையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்துக் கொள்ள முடியும். தற்போது இம்முறையானது டேராடூன் பகுதியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

டெக் #4 :
ஆட்டோமட்டிக் கேமிரா சர்வைலன்ஸ் (Automatic camera for surveillance)

மல்டிமீடியா தொடர்பு :
இஸ்ரோ ஜி -சாட்- 6 செயற்கைக்கோள் மல்டிமீடியா தொடர்பு வசதி கொண்ட செயற்கைகோள் ஒன்றையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது, அதாவது ஊடுருவியவர்கள் மீதான கண்காணிப்பு அமைப்புகள்.

தானியங்கி கேமிரா :
செயற்கைகோளில் இருக்கும் தானியங்கி கேமிராக்கள் கண்காணிப்பு புகைப்படங்களை எடுத்து ராணுவ வீர்களுக்கு அனுப்பும் படியான வசதி செய்யப் பட இருக்கிறது.

தடை இல்லை :
ப்யூயல் செல்கள் (Fuel Cell) மூலம் உருவாக்கப்படும் மின்சக்தி கொண்டு செயற்கைக்கோள் அனுப்பும் புகைப்படங்களை ராணுவ வீரர்கள் தடையில்லாமல் பெறமுடியும்.!


Click it and Unblock the Notifications