Home
News

ஆன்லைனில் 'இதையெல்லாம்' செய்தால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்.!

நீங்கள் கைது செய்ய வாய்ப்புள்ள ஆன்லைன் நடவடிக்கைகள் என்னென்ன.?

By Staff

இணையம் - தனது பயனர்களுக்கு ஒரு கட்டுப்பாடற்ற சாம்ராஜ்யமாக திகழ்கிறது. அது எந்த எல்லைகளையும் கட்டுப்பாடுகளையும் வழங்காது செய்திகள், தகவல்கள், திரைப்படம், படங்கள், இசை என சகலத்தையும் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. இணையம் நமக்கு எவ்வளவு சுதந்திரம் வழங்குகிறது என்பதை மட்டுமே நாம் அறிவோம் ஆனால் அதே இணையம் எந்த அளவிலான கட்டுப்பாடுகளையும் கடினத்தன்மையும் கொண்டுள்ளது என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பு மிக குறைவு.

குறிப்பாக நீங்கள் இணையம் வழியாக பயன்பாடுகள் நிகழ்த்துகையில் நீங்கள் இருக்கும் நாடுகளில் உள்ள சில விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றயே ஆகவேண்டும் இல்லையெனில் நீங்கள் சிறை கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

அப்படியாக நீங்கள் உலகின் சில நாடுகளில் (இந்தியா உட்பட) கைது செய்ய வாய்ப்புள்ள ஆன்லைன் நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

ஓப்பன் வைஃபை

ஓப்பன் வைஃபை

பாஸ்வேர்ட் இல்லாத உங்களின் வெளிப்படையான திறந்தவெளி 'வைஃபை'யை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அவர்களுக்கு உதவிய சந்தேகத்தில் நீங்களும் கைதாகலாம். இந்த சட்டமானது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் உண்டு.!

சர்ச் ஹிஸ்ட்ரி

சர்ச் ஹிஸ்ட்ரி

ஹேக்கிங் போன்ற சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தங்களின் சர்ச் ஹிஸ்ட்ரியை (Search History) அடிக்கடி முற்றிலுமாக அழிப்பது சகஜம். ஆகையால் தேடுபொறி வரலாற்றை முற்றிலுமாக டெலிட் செய்வது என்பதும் ஒரு ஆன்லைன் குற்றமாகும். அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்களுக்கு கைது சட்டம் பயன்பாட்டில் உள்ளது.

இந்தியாவிலும்

இந்தியாவிலும்

கடைசி 3 மாத கால சர்ச் ஹிஸ்ட்ரியை அழிக்க கூடாது என்று இந்தியாவிலும் சட்டம் அமலாக்கப்பட்டு பின் பலத்த எதிர்ப்புக்கு பின் திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் :

வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் :

விஓஐபி எனப்படும் வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் (Voice over Internet Protocal - VOIP) என்பது இணையவழியாக ஒலி பரிமாற்றம் செய்யும் செயல்பாடாகும். இதுவும் ஒரு வகையிலான ஆன்லைன் குற்றமாகும் குறிப்பாக எத்தியோப்பியாவில் மட்டுமே குறிப்பிட்ட மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இந்த சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவில் நடனம்

வீடியோவில் நடனம்

ஆம், நீங்களா சரியாகத்தான் படித்துள்ளீர்கள். வீடியோவில் நடனம் ஆடினால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். இந்த சட்டம் ஈரானில் நடைமுறையில் உள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

ஒருமுறை ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போர் நினைவிடம் முன்பு நடனம் ஆடி, வீடியோ வெளியிட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இண்டர்நெட் கமெண்ட்

இண்டர்நெட் கமெண்ட்

ஆம் நீங்கள் இதை நம்பித்தான் ஆகா வேண்டும். இந்த சட்டப்படி பார்த்தல் இந்தியாவில் உள்ள அனைவருமே கைது செய்யப்பட வேண்டுமே என்ற உங்களது கேள்வி எங்களுக்கு கேட்கிறது. இந்த சட்டம் சிரியாவில் நடைமுறையில் உள்ளது. சிரியாவில் இண்டர்நெட்டில் கமெண்ட் பதிவு செய்வது கூட குற்றம் தான். அதற்காக நீங்கள் கைது செய்யப்படலாம்.

மொழிமாற்றம்

மொழிமாற்றம்

தடை செய்யப்பட்ட புத்தகத்தை மொழிமாற்றம் செய்தால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், குறிப்பாக இது போன்ற புத்தகங்கள் கடைகளில் கிடைக்காது ஆன்லைனில் தன கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தடை செய்யவப்படுவதின் நோக்கமே அந்த புத்தகம் பரவலாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் அப்படியிருக்க அதை உள்ளூர் மொழிகளுக்கு மொழிபெயர்ப்பது என்பதும் ஒரு குற்றமாகும். தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

சூதாட்டம்

சூதாட்டம்

ஆன்லைனில் சூதாட்டம் விளையாடுதல் என்பது உலகின் பல நாடுகளிலும் சட்டப்படி குற்றமாகும்.

கோப்புகள் பரிமாற்றம்

கோப்புகள் பரிமாற்றம்

ஃபைல் பரிமாற்றம் என்பது சர்ச்சைக்குரிய ஒரு பிரச்சனையாகும். சில நாடுகளில் பாடல்கள், புகைப்படங்கள், திரைப்படங்கள் என எதையும் பரிமாறிக்கொள்ளமுடியும், சில நாடுகளில் இது முடியாது. மேலும் அது நீங்கள் எதை பரிமாற்றம் செய்கிறீர்கள் என்பதையும் பொருத்துள்ளது உங்களுக்கான தண்டனையும் மன்னிப்பும்.!

பேஸ்புக்கில் பாடல் வரிகள்

பேஸ்புக்கில் பாடல் வரிகள்

அமெரிக்காவில் ஒருமுறை பேஸ்புக்கில் பாடல் வரிகளை போஸ்ட் செய்ததற்காகவும் கைது சம்பவம் நடந்துள்ளது. அதுவொரு சினிமா பாடல் வரிகளாக இருந்திருக்க வாய்ப்பில்லை மாறாக புரட்சிமிக்க வரிகளாக அல்லது மிகவும் தாழ்மையான விமர்சனங்களை கொண்ட வரிகளாகவும் இருந்திருக்கலாம்.

இந்தியர்களாகிய நம்மால்

இந்தியர்களாகிய நம்மால்

நமது இந்தியாவை பொறுத்தமட்டில் கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என பல வகையான சுதந்திரங்கள் மக்களுக்குள் உண்டு. ஆனால் அவைகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் குறை கூறுவதிலேயேதான் நாம் நமது இந்தியா நாட்களை கடந்து கொண்டுருக்கிறோம். பிற உலக நாடுகளின் கடுமையான சட்டங்களை சில மணிநேரம் கூட இந்தியர்களாகிய நம்மால் கடைப்பிடிக்கவோ அல்லது சகித்துக்கொள்ளவே முடியாது என்பதே நிதர்சனம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

மூன்றாம் தரப்பு ஆஃப்ஸ்களும் அதிலுள்ள சிக்கல்களும் தீர்வுகளும்.!

Best Mobiles in India

English summary
These Online Activities That Can Get You Arrested. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X