கிரிக்கெட்டை வேற லெவலுக்கு கொண்டு சென்ற 3 தொழில்நுட்பங்கள்!

|

நிகழ்ந்து கொண்டிருக்கும் 2019 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் மீது உலகமே கண் வைத்துள்ள இந்த தருணம் தான், "ஜென்டில் மேன் கேம்" எனப்படும் கிரிக்கெட் விளையாட்டின் போக்கையே முற்றிலும் மாற்றிய சில அதிநவீன தொழில்நுட்பங்களை பற்றி பேசுவதற்கான சரியான நேரம் என்று நினைக்கிறோம்.

அட்வான்ஸ்டு டெக்னாலஜி

அட்வான்ஸ்டு டெக்னாலஜி

கிரிக்கெட்டின் வரலாறு என்பது முன்னெப்போதும் நடுவர்களின் வாக்கையே தெய்வ வாக்காக நம்பியதொரு காலமாக இருந்தது போய், இப்போது அட்வான்ஸ்டு டெக்னாலஜி தான் எல்லாமே என்கிற "ரீவியூ" நிலைப்பாட்டிற்குள் நகர்ந்து வந்துள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துவதன் மூலம், போட்டி நடுவர்களின் முடிவுகள் சரியானவைகாளாக இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ள முடிகிறது.

சுமார் 30 கேமராக்களின் கண்களால் பதிவு செய்யப்பட்டு வருகிறது

சுமார் 30 கேமராக்களின் கண்களால் பதிவு செய்யப்பட்டு வருகிறது

தற்போது நடக்கும் உலக கோப்பையில் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் சுமார் 30 கேமராக்களின் கண்களால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஸ்பைடர் காம் என்று அழைக்கப்படும் வயர்களால் இணைக்கப்பெற்ற, மைதானம் முழுக்க எங்கு வேண்டுமானாலும் தாழ்ந்து, உயர பறக்க கூடிய கேமராவும் அடங்கும். அது தவிர்த்து பார்வையாளர்களுக்கு ஒரு உண்மையான உணர்வை வழங்கும் நோக்கத்தின் கீழ் கிரிக்கெட் ஸ்டெம்ப்களில் சிறிய கேமிராக்களும் நிறுவப்பட்டுள்ளன. இது தவிர்த்து கிரிக்கெட் விளையாட்டை வேற லெவலுக்கு கொண்டு செல்ல உதவும் மூன்று முக்கியமான தொழில்நுட்பங்களின் பட்டியல் இதோ.

ஹாட் ஸ்பாட்!

ஹாட் ஸ்பாட்!

கிரிக்கெட்டின் விளையாட்டிலேயே மிகவும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு (கேள்விகளுக்கு) ஆளான ஒரு சிக்கலை தீர்த்து வைக்கும் முனைப்பின் கீழ் உருவான ஒரு தொழில்நுட்பம் தான் - ஹாட் ஸ்பாட். இந்த ஹாட் ஸ்பாட் பார்வையின் கீழ், பேட்ஸ்மேனின் கால் (பேட்) அல்லது வேறு எந்த பாகமும் பந்தை தொடவில்லை என்பதை உறுதி செய்வதோடு சேர்த்து, அது பேட்டை உராய்ந்து சென்றதா இல்லையா என்பதையும் கண்டறிய முடியும்.

கடினமான காரியம்

கடினமான காரியம்

பொதுவாக வீசப்படும் ஒரு பந்து ஆனது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வரும், அந்த நிலையில், அது பேட்ஸ்மேனின் பேட்டில் படுவதை சுமார் இருபது மீட்டர் தொலைவில் இருந்து கண்டுபிடிப்பதும், கூடியிருக்கும் கூட்டத்தின் கோஷங்களுக்கு இடையே அந்த சத்தத்தை கேட்பதும், அதை கொண்டு முடிவுகளை நிகழ்த்துவதும், எவ்வளவுக்கு எவ்வளவு தந்திரமான செயலோ, அவ்வளவுக்கு அவ்வளவு கடினமான காரியமும் கூட.

 100% துல்லியமாக கண்டறியலாம்

100% துல்லியமாக கண்டறியலாம்

ஆனால் ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பமோ அதன் அகச்சிவப்பு கேமிராக்களின் உதவியுடன் இந்த சிக்கலை எளிமைப்படுத்தி உள்ளது. அதாவது பந்தானது பேட்டில் உரசி உள்ளதா மற்றும் பேட்டில் மட்டும் தான் உரசி உள்ளதா அல்லது பேடில் உரசி உள்ளதா என்பதை உராய்வின் வெப்பத்தின் மூலம் உருவாகும் திட்டுகளை ஹாட் ஸ்பாட் மூலம் 100% துல்லியமாக கண்டறியலாம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எத்தனை அணிகளின் வெற்றி தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை கிரிக்கெட் ஆர்வலர்கள் அறிவார்கள்.

அல்ட்ரா எட்ஜ்!

இது கிரிக்கெட் விளையாட்டின் மற்றொரு பிரபலமான சிக்கலாகும். பந்து வீசப்படும், அதை பேட்ஸ்மேன் அடிக்க முயல்வார், ஆனால் அதை தவர் விட்டு விடுவார், அதை லாவகமாக பிடித்த விக்கெட் கீப்பாரோ "அவுட்! அவுட்!" என்று கூச்சல் போடுவார். ஆனால் பேட்ஸ்மேனோ பேட்டில் பந்து படவே படாத மாதிரி நிற்பார், சில சமயங்களில் பவுலர் கூட தலையை சொரிந்து கொண்டு நிற்பதை காண முடியும். விக்கெட் கீப்பர் கூச்சலிட்ட பின்னரே அவர் ரியாக்ட் செய்வதையும் நடுவரின் அப்ரோச் செய்வதையும் நாம் பார்த்துள்ளோம்.

இந்தியா: சோமேட்டோ ட்ரோன் டெலிவரி அனுமதி: அசத்தல் ஐடியா.!இந்தியா: சோமேட்டோ ட்ரோன் டெலிவரி அனுமதி: அசத்தல் ஐடியா.!

பந்து பேட்டில் பட்டதா இல்லையா?

பந்து பேட்டில் பட்டதா இல்லையா?

பந்து பேட்டில் பட்டதா இல்லையா? அதை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு தொழில்நுட்பம் தான் அல்ட்ரா எட்ஜ். ஹாட் ஸ்பாட்டை போல் இல்லாமல் இவைகள் அனைத்து ஸ்டம்புகளையும் அடிப்படையாக கொண்டு நிறுவப்பட்ட சிறிய மற்றும் யுனிடைரக்ஷ்னல் ஒலிவாங்கிகள் மூலம் ஆராயும் ஒரு தொழிநுட்பம் ஆகும். இந்த ஒலிவாங்கிகளின் வழியாக பந்து மற்றும் பேட்டிற்கு இடையே ஆன மிகவும் இலகுவான உராய்தலை கூட கண்டறிய முடியும்.

ரெட்பஸ் ஆப் பயன்படுத்துபவர்களா நீங்கள்: அசத்தலான சேவை அறிமுகம்: இன்றே பயன்படுத்துங்கள்.!ரெட்பஸ் ஆப் பயன்படுத்துபவர்களா நீங்கள்: அசத்தலான சேவை அறிமுகம்: இன்றே பயன்படுத்துங்கள்.!

ஹாவ்க்-ஐ!

ஹாவ்க்-ஐ!

ஹாக்-ஐ என்பது முழுக்க முழுக்க அல்காரிதம்களையும், ரியாலிட்டி கிராபிக்ஸையும் உள்ளடக்கிய ஒரு தொழில்நுட்பம் ஆகும். இந்த இரண்டையும் கொண்டு தான், பேட்ஸ்மேனின் பேடில் மோதிய வீசப்பட்ட பந்து ஆனது ஸ்டெம்பை தாக்கி இருக்குமா இல்லை தவறவிட்டு இருக்குமா எனும் கோணம் காட்சிப்படுத்தப்படும் பின் முடிவுகள் உறுதி செய்யப்படும். இந்த தொழில்நுடப் பயன்பாட்டின் போது, பந்து பேட்டை தொடுவதற்கு முன்னர் பேடில் பட்டு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க உதவும் ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும் என்பதும், அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொழில்நுட்பங்கள் ஆனது கிரிக்கெட் விளையாட்டை இன்னும் அழகாகவும், வேடிக்கையாகவம் மாற்றுகின்றன அல்லவா! நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?!

ஸ்மார்ட்போனிலேயே மூழ்கி கிடக்குறீங்களா?... அப்ப இந்த 20-20 ஆட்டத்தை பழகுங்க!!ஸ்மார்ட்போனிலேயே மூழ்கி கிடக்குறீங்களா?... அப்ப இந்த 20-20 ஆட்டத்தை பழகுங்க!!

Best Mobiles in India

English summary
These Latest Technologies Are Changing The Game Of Cricket : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X