கும்பிடு ஜியோவுக்குதான்.. ரூ.599-க்கு முடிச்சாச்சு.. டி20 மட்டுமில்ல.. 800 டிவி சேனல்கள்.. அனிலிமிடெட் டேட்டா!
டி20 உலகக் கோப்பை (T20 World Cup) போட்டிகளை பார்க்க மலிவு விலை திட்டங்களை கிரிக்கெட் ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) மட்டுமல்லாமல், கூடவே 13 ஓடிடி ஆப்களின் சந்தா, 800 டிவி சேனல்கள் மற்றும் அன்லிமிடெட் டேட்டா சலுகை முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் கொடுக்கிறது. ஒட்டுமொத்த சலுகைகளைகளும் யாரும் கொடுக்க முடியாத விலைக்கு கிடைப்பதால், இந்த திட்டங்கள் டெலிகாம் மார்கெட்டில் அதிக கவனம் பெற்று வருகின்றன.
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதால், அந்த ஓடிடி மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் சென்றுள்ளது. ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற முக்கிய நிறுவனங்களின் ஹாட்ஸ்டார் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய தொடங்விட்டனர்.

இதில் ஜியோ வாடிக்கையாளர்களே அதிக குஷியில் இருக்கின்றனர். ஏனென்றால், மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் மிகவும் மலிவான விலைக்கு ஹாட்ஸ்டார் சந்தாவை (Hotstar Subscription) ஜியோ கொடுக்கிறது. ரூ.328 முதல் ஓடிடி மட்டுமல்லாமல், டேட்டா, அன்லிமிடெட்வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளுடன் ப்ரீபெய்ட் திட்டங்கள் தொடங்குகின்றன.
ஆனால், ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்களே அதிக கவனம் பெற்றுள்ளன. மற்ற திட்டங்களை போல் ஓடிடி, டேட்டா, வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், 800 டிவி சேனல்கள், ஃபைபர் டேட்டா சலுகைகளும் மிகவும் மலிவான விலைக்கு கிடைப்பதே அதற்கு காரணமாக இருக்கிறது. வெறும் ரூ.599 முதல் ஜியோ ஏர்ஃபைபர் திட்டங்கள் தொடங்குகின்றன.
அதேபோல ரூ.599, ரூ.899, ரூ.1199, ரூ.1499, ரூ.2499, ரூ.3999 ஆகிய ஏர்ஃபைபர் திட்டங்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா மட்டுமல்லாமல், கூடுதலாக 13 ஓடிடி ஆப்கள், ஃபைபர் டேட்டா, 800 டிவி சேனல்கள் சலுகைகள் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப திட்டங்களின் டேட்டா வேகம் மற்றும் ஓடிடி ஆப்களில் வேறுபாடு இருக்கிறது. முதல் திட்டத்தை பார்க்கலாம்.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 599 Plan Details): இதுவொரு ஆரம்ப ஏர்ஃபைபர் திட்டமாகும். இந்த திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கிடைக்கிறது. 30 நாட்களில் அதிகபட்சம் 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். 800+ டிவி சேனல் சலுகை கிடைக்கிறது. இதற்காக ஆண்ட்ராய்டு பாக்ஸ் கொடுக்கப்படும்.
ஓடிடி சலுகைகளை பார்க்கையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் கிடைக்கிறது. மேலும், சோனிலிவ், ஜீ5, சன்நெக்ஸ்ட், ஹோய்சோய், டிஸ்கவரி பிளஸ், ஜியோசினிமா, ஷீமாரூமி, ஆல்ட்பாலாஜி, ஈராஸ் நவ், ஈடிவி வின், லயன்ஸ்கேட் பிளே, எபிக்ஆன், மற்றும் ஓடிடி டாக்கு பே போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதே சலுகைகளுடன் ரூ.899 திட்டம் வருகிறது. ஆனால், 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல ரூ.1199 திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கும். மேலும், ரூ.1499, ரூ.2499 மற்றும் ரூ.3999 திட்டங்களில் மேற்கூறிய சலுகைகள் வருகின்றன.
ஆனால், முறையே 300 எம்பிபிஎஸ், 500 எம்பிபிஎஸ் மற்றும் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கிறது. அதேபோல டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் உள்பட 14 ஓடிடிகள் மற்றும் 800 டிவி சலுகைகள் வருகின்றன. இந்த திட்டங்களை பெற குறைந்தது 3 மாதங்களுக்கு வேலிடிட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








