Home
News

இந்தியாவில் Amazon தளத்தில் அதிக நேரத்தை செலவிடுவது எந்த நகர மக்கள் தெரியுமா?

தற்போது வீட்டில் இருந்தபடியே தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வதில் பெரும்பாலானோர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக நாட்டில் ஆன்லைன் ஆர்டர் என்ற பழக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்ட என்பது தான் உண்மை.

அதேபோல் வீட்டில் இருந்தபடியே உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவதன் மூலம் பயண நேரம், கடையில் காத்திருக்கும் நேரம் என பல வகைகளில் நேரம் மிச்சமாகும் என பலர் கருதுகின்றனர். அதோடு மட்டுமின்றி ஆன்லைன் நிறுவனங்களும் போட்டுப் போட்டு கொண்டு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

Amazon தளத்தில் அதிக நேரத்தை செலவிடுவது எந்த நகர மக்கள் தெரியுமா?

இந்நிலையில் மிகவும் பிரபல ஷாப்பிங் தளமாக இருக்கும் அமேசானில் (Amazon), எந்த நகரத்தைச் சேர்ந்த மக்கள் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்பதைப் பற்றிய புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது. டெல்லி அல்லது மும்பையைச் சேர்ந்த மக்கள் தான் இந்த தளத்தில் அதிக செலவிடுகிறார்கள் என்று நீங்கள் நினைப்பீர்கள்.

ஆனால் டெல்லி அல்லது மும்பையை சேர்ந்த மக்கள் இந்த அமேசான் தளத்தில் அதிக நேரம் பயன்படுத்தவில்லை. அதாவது அமேசானில் அதிக நேரம் செலவிடும் நகரங்களில் பட்டியலில் பெங்களூரு முதல் இடத்தில் இருப்பதாக ஆய்வு நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது. மேலும் இதுசார்ந்த விவரங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது CyberMedia Research (CMR) நடத்திய ஆய்வின்படி, கர்நாடகாவின் பெங்களூர் நகரத்தைச் சேர்ந்த மக்கள் அமேசானில் தளத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர். குறிப்பாக இந்த ஆய்வின்படி பெங்களூரு நகரமானது வாரத்திற்குச் சராசரியாக 4 மணிநேரம் அமேசானில் நேரம் செலவிடுகிறது.

Amazon தளத்தில் அதிக நேரத்தை செலவிடுவது எந்த நகர மக்கள் தெரியுமா?

குறிப்பாக Tier II மற்றும் Tier I நகரங்களில் வசிக்கும் மக்களின் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தை அறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பெங்களூரை சேர்ந்த மக்கள் வாரத்திற்குச் சராசரியாக 4 மணி நேரம் 2 நிமிடம் என்ற அளவில் மிகவும் பிரபலமான அமேசானில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அதேபோல் இந்தியாவின் மற்ற நகர மக்களை காட்டிலும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் தான் அமேசானில் ஷாப்பிங் செய்வதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவைத் தவிர கவுகாத்தி, கோயம்புத்தூர் மற்றும் லக்னோ போன்ற Tier II நகரங்களும் ஆன்லைன் ஷாப்பிங்கில் கணிசமான பங்கைக் கொண்டுள்ளன. குறிப்பாக இந்த முக்கிய நகரங்களில் உள்ள மக்கள் வாரத்திற்கு சராசரியாக சுமார் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை ஆன்லைன் ஷாப்பிங்கில் செலவிடுகிறார்கள் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

தற்போது ஆன்லைன் ஷாப்பிங் மார்க்கெட்டில் முன்னணியில் இருப்பது அமேசான், மீஷோ, டாடா, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தான். இந்த முக்கிய நிறுவனங்கள் தொடர்ந்து முன்னணியில் இருக்கக் கடுமையாக போட்டிப்போடுகின்றன. ஆனால் இவற்றில் அமேசான் லட்சக்கணக்கான இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் இந்நிறுவனம் வைத்திருக்கும் அதன் சிறந்த சர்விஸ் காரணமாக யூஸர்களின் விருப்பமான தேர்வாக அமேசான் உள்ளது என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

Amazon தளத்தில் அதிக நேரத்தை செலவிடுவது எந்த நகர மக்கள் தெரியுமா?

பொருட்களை கவர்ச்சிகரமான விலைகளில் வழங்குவது, ஈசியாக பொருட்களை ரிட்டர்ன் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்யும் ஆப்ஷன் மற்றும் நம்பமுடியாத சலுகைகள் போன்ற அனைத்து சிறப்புகளையும் கொண்டுள்ளது இந்த அமேசான் நிறுவனம். எனவே தான் அமேசான் தளத்தை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
These Indian city dwellers spend the most time on Amazon: Here's the full Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X