மோசமான நிலையில் இருந்து வடிகால் நீரில் இருந்து மின்சாரம்: அசத்திய பள்ளி சிறுமிகள்.!

முதலில் அவர்களின் ஆசிரியர்களிடம் வேகமாக ஓடும் தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டனர்.

|

வேகமாக ஓடும் தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் போது, ​​ஏன் வேகமாக ஓடும் வடிகால் நீரில் இருந்து மின்சாரம் எடுக்க முடியாத? இதோ புதுச்சேரி, கலிதீர்தால்குப்பம் சேர்ந்த பள்ளி மாணவிகள் வேகமாக ஓடும் வடிகால் நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஒரு சிறந்த வழியை காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிகால் நீரில் இருந்து மின்சாரம்: அசத்திய பள்ளி சிறுமிகள்.!

நம் மூக்குகளை சோர்வடையச் செய்யும் வடிகால் நீரில் இருந்து மாணவிகள் ஒரு சிறந்த வழியைக் சில மாதங்களுக்கு முன்பு கண்டுபடித்துள்ளனர், அதாவது வடிகுழாய் நீரில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய மைக்ரோ பவர் உற்பத்தி ஜெனரேட்டரை உருவாக்கியுள்ளனர். இது வடிகால் நீரில் இருந்து மின்சாரத்தை எடுக்க மிகவும் உதவியாக இருக்கும் என்று மாணவிகள் தெரிவித்துள்ளர்.

மாணவிகள்:

மாணவிகள்:

புதுச்சேரி, கலிதீர்தால்குப்பம் சேர்ந்த அரசு பள்ளி 5-ம் வகுப்பு டி.மித்ரா மற்றும் பிரியா என்ற மாணவிகள், முதலில் அவர்களின்
ஆசிரியர்களிடம் வேகமாக ஓடும் தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டனர். பின்பு அவர்கள்
கற்றுக்கொண்ட படத்தை செயல்படுத்த ஒரு நேரம் வந்தது.

 மோசமான நிலையில் இருந்த வடிகால்

மோசமான நிலையில் இருந்த வடிகால்

அதன்படி மித்ரா மற்றும் பிரியா வேகமாக ஓடும் வடிகால் நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஒரு திட்டத்தை செயல்படுத்தினர் அது என்னவென்றால். முகமூடி மற்றும் கை கையுறைகள் அணிந்து மோசமான நிலையில் இருந்த வடிகால் வடிகால் அகலத்தையும் ஆழத்தையும் அளந்தனர் மற்றும் தண்ணீர் ஓட்டத்தின் வேகத்தைக் குறிப்பிட்டனர்.

100ஆர்பிஎம் கியர் மோட்டார்

100ஆர்பிஎம் கியர் மோட்டார்

அந்த வடிகால் சுமார் 23 செ.மீ அகலமும் 9 செ.மீ ஆழமும் இருந்தது, குறிப்பாக தண்ணீரில் ஒரு துண்டு காகிதத்தை எறிந்து ஓடும் தண்ணீரின் வேகத்தை அவர்கள் கணக்கிட்டனர். தண்ணீர் சராசரி வேகம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 30 கிமீ என்று கண்டறியப்பட்டது. பின்பு 3-இன்ச் ரேடியன் டர்பைன் மற்றும் 100ஆர்பிஎம் கியர் மோட்டார் இணைத்து ஒரு சாதனத்தை உருவாக்கினர். அந்த சாதனம் ஒரு முறை சுழலும் போது, ​​மோட்டார் உள்ளே செம்பு சுருள் 100 மடங்கு சுழன்று மின்சாரம் உற்பத்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்பு அந்த சாதனம் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டது.

 8v முதல் 9v வரை

8v முதல் 9v வரை

மாணவிகள் உருவாக்கிய அந்த சாதனத்தை கொண்டு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சமமான இடைவெளியில் கணக்கிடப்பட்டது, அது சராசரியாக 8v முதல் 9v வரை வடிகால் நீர் மூலம் அந்த மின்சாரம் பெறமுடியும் என்று அவர்கள் பதிவு செய்தனர்.

வடிகால் நீர்

வடிகால் நீர்

மாணவிகள் உருவாக்கிய வடிகால் நீர் மின்சக்தியைப் பயன்படுத்தி,நமது செல்போன்கள், பிரகாசமான எல்இடி விளக்குகள் மற்றும் வானொலியை இயக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தை மேம்படுத்தி பல்வேறு வழிகளில் மக்களுக்கு உதவ முடியும் என்று மித்ரா மற்றும் பிரியா மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
These Government Schoolgirls in Puducherry Are Generating Electricity From Drainage Water: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X