Home
News

ரூ.200 போதும்.. 4 சூப்பரான ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளை அள்ளிவீசும் BSNL.! இதோ முழு விவரம்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.200-க்கு கீழ் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 4 சூப்பரான ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளை அள்ளிவீசும் BSNL.!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Lystn Podcast சேவைக்கான இலவச அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40Kbps ஆக மாற்றப்படும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40Kbps ஆக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டம் கூட 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினிசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கும். இதுதவிர BSNL ட்யூன்களுக்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் இந்த திட்டத்தில் கூட தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40Kbps ஆக மாற்றப்படும்.

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 42ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

குறிப்பாக ரூ.200-க்கு கீழ் கிடைக்கும் இந்த நான்கு பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களும் அதிக நன்மைகளை வழங்குகிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்த நான்கு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் தற்போது நாடு முழுவதும் 4ஜி சிம் கார்டுகள் வழங்கும் பணிகள், 4ஜி டவர்களை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

 4 சூப்பரான ப்ரீபெய்ட் திட்டங்களில் சலுகைகளை அள்ளிவீசும் BSNL.!

4ஜி மென்பொருள் உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைய வரும் டிசம்பர் மாதம் வரையில் அவகாசம் தேவைப்படும் என்றும், 4ஜி டவர்கள் சோதனை மற்றும் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகளுக்குக் குறைந்தது 6 மாதங்கள் ஆகும் என்று பிஎஸ்என்எல் நிறுவன உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எனவே அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜி சேவையைக் கூட அறிமுகம் செய்ய வில்லை. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இந்நிறுவனத்திடம் 4ஜி சேவை இல்லை என்பதுதான் மிகப் பெரிய குறை.

More from GizBot

Best Mobiles in India

English summary
These BSNL Prepaid plans under Rs 200 are quite helpful when you are on a budget : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X