எந்தெந்த சியோமி ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் கிடைக்காது.?

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ன் சமீபத்திய அப்டேட் ஆன ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஓஎஸ் ஆனது எந்தெந்த சியோமி ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் என்கிற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

|

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-ன் சமீபத்திய அப்டேட் ஆன ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஓஎஸ் ஆனது எந்தெந்த சியோமி ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் என்கிற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான புதிய ஸ்மார்ட்போன்கள் ஆனது ஷிப்பிங் செய்யப்படும் போதே ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் வந்துசேருகின்றன. ஆனால், சில ஸ்மார்ட்போன்கள் இன்னும் ஓரியோ அப்டேட்டை பெறவில்லை, அந்த பட்டியலில் சியோமி ஸ்மார்ட்போன்களை அடங்கும்.

எதெற்க்கெல்லாம் கிடைத்துள்ளது.?

எதெற்க்கெல்லாம் கிடைத்துள்ளது.?

இதுவரை, கூகுள் நிறுவனத்தின் சொந்த பிக்சல் மற்றும் நெக்ஸஸ் ஸ்மார்ட்போன்களான நெக்சஸ் 6பி, நெக்ஸஸ் 5எக்ஸ், பிக்சல் 2, பிக்சல் 2 எக்ஸ்எல், பிக்சல் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் ஆகியவைகளுக்கு ஓரியோ அப்டேட் அணுக கிடைக்கிறது. அதன் பிறகு, ஆண்ட்ராய்டு ஓரியோ ஓஎஸ் ஆனது சோனி எக்ஸ்பீரியா XZ-க்கு அனுப்பப்பட்டது. புதிய பாதுகாப்பு அம்சங்கள், சிறந்த யூஐ மற்றும் பல மேம்பாடுகள் கொண்டுள்ள ஓரியோ அப்டேட் எந்தெந்த சியோமி பயனர்களுக்கு கிடைக்கும் என்பதை விரிவாக காண்போம்.

சியோமி மி தொடரில் எந்தெந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும்.?

சியோமி மி தொடரில் எந்தெந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும்.?

சீன உற்பத்தியாளர் ஆன, சியோமியின் மி தொடர் ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை மி மிக்ஸ் 2, மி மிக்ஸ், மி நோட் 3, மி ஏ1, மி மேக்ஸ் 2, மி 6, மி மாக்ஸ், மி 5சி (சர்ச்சைக்குரிய), மி 5எஸ், மி 5எஸ் ப்ளஸ், மி நோட் 2, மி 5எக்ஸ் போன்றவைகள் ஆண்ட்ராய்டு ஓரியோ புதுப்பிப்பைப் பெறுகின்றன.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
மி மேக்ஸ், மி மேக்ஸ் 2.!

மி மேக்ஸ், மி மேக்ஸ் 2.!

இந்த பட்டியலில் மி 5 ஆனது ஆண்ட்ராய்டு அப்டேட்டை பெறாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நிறுவனத்திடமிருந்து இது பற்றி எந்தவிதமான உறுதிமொழியும் இல்லை. மேலும் மி மேக்ஸ், மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன்களை கூட ஓரியோ அப்டேட் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மீ தொடரில் எந்தெந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும்.?

சியோமி ரெட்மீ தொடரில் எந்தெந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும்.?

ரெட்மீ நோட் 4, ரெட்மீ 4 (இந்தியாவிற்கு வெளியே ரெட்மீ 4எக்ஸ்), ரெட்மீ 4ஏ (சர்ச்சைக்குரிய), ரெட்மீ 5ஏ, ரெட்மீ நோட் 5ஏ, ரெட்மீ நோட் 5ஏ ப்ரைம், ரெட்மீ Y1, ரெட்மீ Y1 லைட் போன்ற ஸ்மார்ட்போன்களில் அப்டேட் கிடைக்கும். ஆனால் ரெட்மீ நோட் 3 ப்ரோ, ரெட்மீ நோட் 3, ரெட்மீ 3, ரெட்மீ 2 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் எதுவும் கிடைக்காது.

எந்தெந்த ஸ்மார்ட்போனுக்கு ஓரியோ அப்டேட் கிடைக்காது.?

எந்தெந்த ஸ்மார்ட்போனுக்கு ஓரியோ அப்டேட் கிடைக்காது.?

ஒருபுறம், பெரும்பாலான சியோமி ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்டை பெற, மறுபுறம் உள்ள சில சியோமி ஸ்மார்ட்போன்கள் ஓரியோ அப்பேட்டை பெறாது என்று வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் மி 5, மி 4ஐ, மி 4எஸ், மி பேட் மற்றும் மி பேட் 2 ஆகியவைகள் இடம் பெற்றுள்ளன.

Best Mobiles in India

English summary
These are the Xiaomi Smartphones Expected to Receive the Android Oreo Update. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X