இந்திய சந்தையை கலக்குவிருக்கும் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: விரைவில் அறிமுகம்!

|

ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்ட புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் மாடல்கள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மி வி7 மற்றும் நுபியா ரெட் மேஜிக் 5 எஸ்

ரியல்மி வி7 மற்றும் நுபியா ரெட் மேஜிக் 5 எஸ்

ரியல்மி வி7 மற்றும் நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஆகியவை சீனாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம் 31, ஹானர் 9 ஏ மற்றும் ஹானர் 9 எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடுத்த சில தினங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. சாம்சங் கேலஸ்ஸி நோட் 20 சீரிஸ் மற்றும் சில ஸ்மார்ட்போன்கள் விரைவில் சந்தையில் வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ரியல்மி வி5 ஸ்மார்ட்போன்கள்

ரியல்மி வி5 ஸ்மார்ட்போன்கள்

ரியல்மி வி5 ஜூலை 27 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ரியல்மி தொலைபேசி பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு மற்றும் குவாட் ரியர் கேமரா ஆகியவையோடு வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரியோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ரியல்மி வி5 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜர் 5ஜி ஆதரவோடு வருகிறது.

2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் செயலி

2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் செயலி

ரியல்மி வி5 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எடையானது 194 கிராம் கொண்டுள்ளது. செல்பிகளுக்கு 16 மெகாபிக்சல் கேமரா, பின்புறத்தில் 48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா கொண்டுள்ளது. ரியல்மி வி 5 அடுத்த சில தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்31 எஸ்

சாம்சங் கேலக்ஸி எம்31 எஸ்

இந்தியாவில் ஜூலை 30 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஜூலை 30 ஆம் தேதி 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, பின்புறத்தில் நான்கு கேமராக்கள் கொண்டுள்ளது மற்றும் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பு இருக்கிறது.

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

குவாட் பின்புற கேமரா அமைப்பு 64 மெகாபிக்சல் முதன்மை சென்சாரோடு உள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும். இந்த ஸ்மார்ட்போன் அமேசான் லிஸ்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது FHD + AMOLED பேனலைக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் விலை மற்றும் விற்பனை ஜூலை 30 அன்று தெரியவரும்.

BSNL: தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு கிடைக்கும் சிறந்த 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள்!BSNL: தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு கிடைக்கும் சிறந்த 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள்!

ஹானர் 9 ஏ மற்றும் ஹானர் 9 எஸ் அறிமுகம்

ஹானர் 9 ஏ மற்றும் ஹானர் 9 எஸ் அறிமுகம்

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஹானர் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. ஹானர் 9 ஏ மற்றும் ஹானர் 9 எஸ் ஆகியவை ஜூலை 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். ஹானர் 9 ஏ 1600 x 720 பிக்சல் தீர்மானம், 6.3 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேம்பட்ட மீடியாடெக் ஹீலியோ பி 22 SoC 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி விரிவாக்கக்கூடிய சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது. இது 13 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது. இது 5,000 mAh பேட்டரி மற்றும் கைரேகை சென்சார் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ .11,350 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹானர் 9 எஸ் விலை

ஹானர் 9 எஸ் விலை

ஹானர் 9 எஸ் விலை சுமார் ரூ. 7,220 ஆக விற்கப்படும். இது 1440 x 720 பிக்சல்கள் எச்டி + ரெசல்யூஷனுடன் வருகிறது மற்றும் 5.45 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இது 5 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. இந்த தொலைபேசி மீடியாடெக் ஹீலியோ பி 22 சோசி உடன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. இரண்டு தொலைபேசிகளும் ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட மேஜிக் யுஐ 3.1 மென்பொருள் இயங்குதளத்தில் இயங்கும். இது 3,020 mAh பேட்டரி கொண்டுள்ளது.

நுபியா ரெட் மேஜிக் 5 எஸ்

நுபியா ரெட் மேஜிக் 5 எஸ்

நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் ஜூலை 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும். இது சமீபத்திய ஸ்னாப்டிராகன் 865+ SoC சிப்செட்டுடன் வருகிறது. இது 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவுடன் 240 ஹெர்ட்ஸ் டச் விகிதத்துடன் வருகிறது. இந்த கேமிங் ஸ்மார்ட்போனில் 320Hz டச் சென்சிடிவ் ஹோல்டர் பட்டன்களை கொண்டுள்ளது. நுபியா ரெட் மேஜிக் 5 எஸ் எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜுடன் வருகிறது. இது 16 ஜிபி ரேம் வரை வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது கேலக்ஸி ஃபோல்ட் 2, கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ராவோடு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4300 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 12 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் மூன்றாவது 64 மெகாபிக்சல் கேமராவோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
These are the upcoming smartphones launching soon in india

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X