எகிற செய்யும் எதிர்பார்ப்பு- CES 2022 நிகழ்வில் இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் வெளியிடலாம்!

|

நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் ஷோ (CES) 2022 விரைவில் நடத்தப்பட இருக்கிறது. கொரோனா தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டு ஆன்லைனில் ஹோஸ்ட் செய்யப்பட்டு பின் இந்த நிகழ்ச்சி ஆஃப்லைனுக்கு வந்தது. சிஇஎஸ் 2022 விரைவில் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி மீது பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் போதிலும் பல நெருக்கடி சூழல் காரணமாக இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த தேதியை விட முன்னதாகவே முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பல நிறுவனங்கள் தங்கள் சலுகைகளை இந்த நிகழ்ச்சி தளத்தில் அறிவிக்கும் என கூறப்படுகிறது.

சிஇஎஸ் 2022

சிஇஎஸ் 2022

ஸ்மார்ட்போன்கள் குறித்து பேசுகையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்று சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ சாதனமாகும். இந்த ஸ்மார்ட்போன் சிஇஎஸ் 2022-ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒன்பிளஸ் 10 ஸ்மார்ட்போன் எனப்படும் அடுத்த ஜென் ஃபிளாக்ஷிப் மாடலும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பிற ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. சிஇஎஸ் 2022 நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

ரியல்மி ஜிடி 2 ப்ரோ: எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள்

  • 6.7 இன்ச் டிஸ்ப்ளே
  • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 சிப்செட் வசதி
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு
  • 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
  • ரியல்மி யுஐ 3.0 உடன் ஆண்ட்ராய்டு 12 ஆதரவு
  • இரட்டை சிம் (நானோ + நானோ)
  • 50 எம்பி + 50 எம்பி + 2 எம்பி பின்புற கேமரா
  • 32 எம்பி முன்புற செல்பி கேமரா
  • 5ஜி, இரட்டை 4ஜி வோல்ட்இ
  • 5,000 எம்ஏஎச் பேட்டரி
  • ஐக்யூ 9: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    ஐக்யூ 9: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

    • 6.78 இன்ச் டிஸ்ப்ளே
    • குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்
    • 8 ஜிபி ரேம்
    • 48 எம்பி + 13 எம்பி + 13 எம்பி பின்புற கேமரா
    • 16 எம்பி செல்பி முன்புற கேமரா
    • 4,400 எம்ஏஎச் பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

      சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

      • 6.4-இன்ச் முழு எச்டி ப்ளஸ் இன்பினிட்டி ஓ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே
      • ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5என்எம் மொபைல் இயங்குதளம்
      • 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்சேமிப்பு
      • 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி உள்சேமிப்பு
      • யூஐ 3.1 உடன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, இரட்டை சிம் ஸ்லாட் வசதி
      • 12 எம்பி+ 12எம்பி + 8எம்பி பின்புற கேமரா
      • 32 எம்பி முன்புற செல்பி கேமரா
      • 5ஜி, 4ஜி வோல்ட்இ
      • 4,500 எம்ஏஎச் பேட்டரி
      • ஒன்பிளஸ் 10 மற்றும் ஒன்பிளஸ் 10 ப்ரோ: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

        ஒன்பிளஸ் 10 மற்றும் ஒன்பிளஸ் 10 ப்ரோ: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

        • 6.7 இன்ச் டிஸ்ப்ளே
        • குவால்காம் ஸ்னாப்டிராகன்
        • 8 ஜிபி ரேம்
        • 128 ஜிபி உள்சேமிப்பு
        • 12 ஜிபி ரேம்
        • 256 ஜிபி உள்சேமிப்பு
        • ஆக்சிஜன் ஓஎஸ் 12 உடன்
        • ஆண்ட்ராய்டு 12 ஆதரவு
        • இரட்டை சிம் (நானோ + நானோ)
        • 48 எம்பி + 50 எம்பி + 8 எம்பி பின்புற கேமரா
        • 32 எம்பி முன்புற செல்பி கேமரா
        • 5,000 எம்ஏஎச் பேட்டரி
        • சாம்சங் கேலக்ஸி எஸ்22 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

          சாம்சங் கேலக்ஸி எஸ்22 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

          • 6.1 இன்ச் டிஸ்ப்ளே
          • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்
          • குவால்காம் ஸ்னாப்டிராகன் 898
          • 50 எம்பி பின்புற கேமரா
          • 128 ஜிபி உள்சேமிப்பு
          • 8 ஜிபி ரேம்
          • 256 ஜிபி உள்சேமிப்பு
          • 12 ஜிபி ரேம்
          • 256 ஜிபி உள்சேமிப்பு
          • 3,800 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
These are the Smartphones Expected to Launching in CES 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X