Home
News

ஜியோபோன் பயனரா நீங்கள்: இதோ சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்

ஜியோபோன் பயனர்களுக்கு நிறுவனம் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த ஆல் இன் ஒன் திட்டங்களை குறித்து பார்க்கலாம்.

ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல் மாற்றப்பட்டது

ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல் மாற்றப்பட்டது

ஜியோ கடந்தாண்டு டிசம்பரில் கட்டண விகிதங்களை மாற்றிய பிறகு ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல் மாற்றப்பட்டது. கட்டணங்கள் அதிகரித்த பிறகும் ஜியோபோன் பயனர்களுக்கு சிறந்த திட்டங்கள் வழங்கி வருகிறது.

போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகள்

போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகள்

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்தும் நேரத்தில் ஜியோபோன் பயனர்களுக்கு பிரத்யேகமாக சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது.

ரூ .75, ரூ .125, ரூ .155 மற்றும் ரூ .185

ரூ .75, ரூ .125, ரூ .155 மற்றும் ரூ .185

ஜியோ தங்களது ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு ஆல் இன் ஒன் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது ரூ .75, ரூ .125, ரூ .155 மற்றும் ரூ .185 ஆகும்.

குறைந்த விலையில் சிறந்த சலுகை

குறைந்த விலையில் சிறந்த சலுகை

ஜியோபோன் பயனர்களுக்கு பிற பயனர்களை விட குறைந்த விலையில் சிறந்த சலுகைகளை நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த திட்டங்களில் குரல்அழைப்பு, டேட்டா உள்ளிட்ட நன்மைகளை நிறுவனம் வழங்கி வருகிறது.

ஜியோபோன் ரூ.75 திட்டம்

ஜியோபோன் ரூ.75 திட்டம்

ஜியோபோன் வழங்கும் ரூ.75 திட்டமானது ஆல் இன் ஒன் திட்டமாகும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 0.1 ஜிபி வழங்கப்படுகிறது. அதேபோல் பிற நெட்வொர்க் அழைப்புகளுக்கு 500 நிமிட அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதோடு இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 50 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.

ரூ.125 ஜியோபோன் திட்டம்

ரூ.125 ஜியோபோன் திட்டம்

ரூ.125 திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 0.5 ஜிபி டேட்டா மற்றும் பிற நெட்வொர்க்குகளுக்கு 500 நிமிட இலவச அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் பயனர்கள் 300 எஸ்எம்எஸ்களை பெறுகிறார்கள்.

ரூ.155 ஜியோபோன் திட்டம்

ரூ.155 ஜியோபோன் திட்டம்

ஜியோபோன் வழங்கும் ரூ.155 திட்டத்தில் இரண்டு மடங்கு டேட்டா கிடைக்கிறது. இது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா வழங்குகிறது. அதோடு 100 எஸ்எம்எஸ்களையும் வரம்பற்ற அழைப்புகளையும், பிற நிறுவனங்களுக்கு 500 நிமிட இலவச அழைப்புகளையும் வழங்குகிறது.

ரூ.185 ஜியோபோன் திட்டம்

ரூ.185 ஜியோபோன் திட்டம்

ரூ.185 விலையில் கிடைக்கும் ஜியோபோன் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் 500 நிமிட இலவச அழைப்புகளை நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டம் செல்லுபடியாகும் முழு நாட்களுக்கும் 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
These are the Best recharge plans For Jiophone Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X