Jio, Airtel.. தினமும் 2.5ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள்.. இனி இந்த ரீசார்ஜ் திட்டங்கள் தான் பெஸ்ட்.. விட்றாதீங்க!
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சமீபத்தில் தான் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தின. அதுவும் குறைந்த விலையில் அதிக நன்மைகளுடன் கிடைத்த திட்டங்கள் எல்லாம் தற்போது விலை உயர்வு பெற்றுள்ளதால் மக்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். சரி இப்போது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் வழங்கும் சிறந்த மாதாந்திர மற்றும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்க்கலாம்.
ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 349 prepaid recharge plan) நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

குறிப்பாக அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம். அதன்பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (jio rs 3599 prepaid recharge plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை.

வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.
ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 379 prepaid recharge plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் பல நன்மைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச ஹெலோட்யூன்கள், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் 64 Kbps ஆக குறையும்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 3599 prepaid recharge plan) ஆனது நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா வழங்கப்படும் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்திலும் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை.

வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அப்பல்லோ 24/7 சர்க்கிள், தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச ஹெலோட்யூன்கள், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் 64 Kbps ஆக குறையும்.
குறிப்பாக பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளை எதிர்பார்க்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்கள் இந்த மாதாந்திர மற்றும் வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications








