பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஜியோவின் சிறந்த திட்டங்கள் இதுதான்!
ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. இதில் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.400-க்கு கீழ் வழங்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஜியோ அறிமுகத்திற்கு பிறகு பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளவும் அதிகரிக்கவும் பல்வேறு சிக்கலை சந்தித்து வருகிறது. இதற்கு பிரதான காரணம் ஜியோ வழங்கும் திட்டங்களே.

ரூ.400-க்கு குறைவான திட்டங்கள்
ஜியோ மலிவு விலையில் அதிக சலுகைகளோடு பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. அதன்படி ஜியோ ரூ.400-க்கு குறைவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கவர்ச்சிகரமான சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

ஜியோ ரூ.149 திட்டம்
ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் செல்லுபடியாகும் நாட்கள் முழுவதும் ஒரு நாளுக்கு 1 ஜிபி வீதம் மொத்தம் 24 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. . ஜியோ டூ ஜியோ எண்களுக்கு வரம்பற்ற இலவச அழைப்புகள் மற்றும் 300 நிமிட FUP வரம்புடனான பிற நெட்வொர்க்குகளுக்கான அழைப்புகளை வழங்குகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ்களும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஜியோ ரூ.199 திட்டம்
ஜியோவின் ரூ 199 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் செல்லுபடியாகும் முழு நாட்களுக்கும் தினசரி 1.5 ஜிபி வீதம் 42 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ எண்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் 1000 நிமிட FUP வரம்புடன் பிற எண்களுக்கான குரல் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டத்திலும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.249 திட்டம்
ஜியோவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் தினசரி 2 ஜிபி வீதம் மொத்தம் 56 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ எண்களுக்கு இலவச அழைப்புகளையும் பிற நெட்வொர்க்குகளுக்கு 1000 நிமிட இலவச அழைப்புகளையும் வழங்குகிறது. அதோடு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

ஜியோ ரூ.349 திட்டம்
ஜியோவின் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் தினசரி 3 ஜிபி தரவை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ எண்களுக்கு இலவச அழைப்புகளையும் பிற நெட்வொர்க்குகளுக்கு 1000 நிமிட இலவச அழைப்புகளையும் வழங்குகிறது. அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.

ஜியோ ரூ.399 திட்டம்
ஜியோவின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் தினசரி 1.5 ஜிபி தரவை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ எண்களுக்கு வரம்பற்ற அழைப்புகளையும் பிற நெட்வொர்க்குகளுக்கு 2000 நிமிட அழைப்புகளையும் வழங்குகிறது. மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications