ஜியோ வாடிக்கையாளர்களே: ரூ.600-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த திட்டங்கள் இதோ!
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் முதன்மையாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் ரூ.600-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக இருக்கிறது. ஜியோ குறைந்த விலையில் அதிக தரவு உள்ளிட்ட நன்மைகளை வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஜியோ ரூ.600-க்கு கீழ் வழங்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம். ஜியோ ரூ.600-க்கு கீழ் வழங்கும் திட்டங்கள் குறித்து பார்க்கையில், ரூ.349, ரூ.399, ரூ.444, ரூ.555 மற்றும் ரூ.599 என்ற விலையில் வழங்குகிறது.

ஜியோ ரூ.349 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 திட்டத்தில்
தினசரி 3 ஜிபி தரவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் ஜியோ எண்களுக்கு வரம்பற்ற அழைப்புகளையும் பிற நெட்வொர்க்குகளுக்கு 1000 நிமிட இலவச அழைப்புகளையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.

ஜியோவின் ரூ.399 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.399 திட்டம்
56 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி தரவு என செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 84 ஜிபி தரவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஜியோ எண்களுக்கு வரம்பற்ற அழைப்புகளையும் பிற நெட்வொர்க்குகளுக்கு 2000 நிமிட அழைப்புகளையும் வழங்குகிறது. இந்த திட்டத்திலும் 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.444 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ ரூ.444 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ எண்களுக்கு வரம்பற்ற அழைப்புகளையும் பிற நெட்வொர்க்குகளுக்கு 2000 நிமிட அழைப்புகளையும் வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் முழு செல்லுபடியாகும் காலத்திற்கு 112 ஜிபி தரவை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.599 திட்டம்
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் தினசரி 2 ஜிபி தரவை வழங்குகிறது. இந்த திட்டம் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கு 168 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஜியோ டூ ஜியோ எண்களுக்கு வரம்பற்ற அழைப்புகளையும் பிற நெட்வொர்க்குகளுக்கு 3000 நிமிட அழைப்புகளையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications