மினிமம் ரீசார்ஜ்.. இனி Jio, Airtel, Vi-க்கு இதுதான் கடைசி.. இதுக்கு கம்மி இல்ல.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Jio) மற்றும் விஐ (Vi) கஸ்டமர்கள் இப்போது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் (Unlimited Voice Calls) மினிமம் விலைக்கு ரீசார்ஜ் (Minimum Recharge) செய்ய கிடைக்கும் திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இவையே ஆரம்ப விலை திட்டங்களாக இருக்கிறது.
வேலிடிட்டி கணக்கில்லை, டேட்டா கணக்கில்லை சிம் கார்டு இருக்கிறது, அதில் மினிமம் விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) சரியாக இருக்கின்றன. ஏர்டெல் மற்றும் ஜியோவில் ரூ.189 விலையில் கிடைக்கின்றன. வோடபோன் ஐடியாவில் ரூ.232 விலையில் கிடைக்கிறது.

ஜியோ ரூ.189 திட்டம்: இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஜியோவின் வேல்யூ பிரிவின் கீழ் இந்த திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த 28 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கொடுக்கப்படும். மொத்தமாக 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும்.
2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் ஜியோ ஆப்கள் கிடைக்கும். இதில் ஜியோ டிவி (Jio TV), ஜியோஏஐகிளவுட் (Jio AI Cloud) ஆகிய ஆப்கள் கிடைக்கின்றன. இதைவிட மலிவான விலைக்கு ஜியோவில் திட்டங்கள் கிடையாது. அப்படி கிடைத்தால், அது டேட்டா வவுச்சராக மட்டுமே இருக்கும்.
ஏர்டெல் ரூ.189 திட்டம்: ஜியோ நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் இந்த திட்டத்துக்கு வேலிடிட்டி கம்மியாக கிடைக்கிறது. அதாவது, ஜியோவில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில் 21 நாட்களுக்கு மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல டேட்டாவும் 1 ஜிபி மட்டுமே கிடைக்கிறது. இதற்கு பிறகு போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்படவில்லை.
ஆனால், வாய்ஸ் கால்களில் எந்த மாற்றமும் கிடையாது. 21 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை ஏர்டெல் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். மேலும், 300 எஸ்எம்எஸ்கள் இந்த திட்டத்துக்கும் கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் ஜியோ ஆப்கள் கூடுதலாக கிடைத்தன. இதில் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சந்தா கிடைக்கிறது.
இது 12 மாதங்களுக்கு கிடைக்கிறது. ஏர்டெல்லிலும் இந்த விலைக்கு கீழ் வாய்ஸ் கால்களை கொடுக்கும் திட்டங்கள் கிடையாது. வோடபோன் ஐடியாவில் ரூ.99 விலை முதல் வாய்ஸ் கால்கள் திட்டம் கிடைக்கிறது. ஆனால், அது டாக்டைம் திட்டமாக மட்டுமே இருக்கிறது, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்காது. ஆகவே, அதற்கு ரூ.232 விலைக்கு கிடைக்கிறது.
விஐ ரூ.232 திட்டம்: இந்த திட்டத்தின் விலை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களைவிட அதிகமாக இருப்பதால், அதற்கு ஏற்ப வேலிடிட்டி அதிகமாக கிடைக்கிறது. ஆகவே, 1 மாதத்துக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். இந்த ஒரு மாதம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 4 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.
இந்த டேட்டாவுக்கும் போஸ்ட் டேட்டா கிடைக்காது. அதேபோல இதில் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படவில்லை. ஆகவே, மினிமம் ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்களுக்கு இவை மட்டுமே இருக்கின்றன. தினசரி டேட்டா வேண்டுமானால், ரூ.299 முதல் ரீசார்ஜ் திட்டங்கள் தொடங்குகின்றன.
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ரூ.249 விலை கொண்ட திட்டங்களை நீக்கின. இதனால், பேசிக் ரீசார்ஜ் விலை அதிகரித்துவிட்டதாக கஸ்டமர்கள் நினைத்தனர். ஆனால், மினிமம் விலைக்கு கிடைக்கும் திட்டங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவை வழக்கம்போலவே கஸ்டமர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








