ஜியோ பயனர்களை பொறாமைப்பட செய்யும் ஏர்டெல் நிறுவனத்தின் பலே ப்ரீபெய்ட் திட்டங்கள்!

|

டெலிகாம் துறையில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தி அனைத்து முன்னணி நிறுவனங்களையும் பின்னுக்குத்தள்ளிய பெருமைக்கு சொந்தக்காரர் முகேஷ் அம்பானியை சேரும். முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த பல புதிய திட்டங்களால் டெலிகாம் துறையில் பெரிய மாற்றமே ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

 ஜியோ vs ஏர்டெல்

ஜியோ vs ஏர்டெல்

இருப்பினும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் நேருக்கு நேர் போட்டியில் களமிறங்கி, ஜியோவின் பல திட்டங்களுக்கு நிகரான சூப்பர் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது ஏர்டெல் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியா பயனர்களை வியக்க வைக்கும் பல புதிய திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் தனது கைவசம் வைத்துள்ளது.

வேறு நெட்வொர்க்கிற்கு மாறலாமா?

வேறு நெட்வொர்க்கிற்கு மாறலாமா?

இனிமேல் ஜியோவில் தனது பயனர்களுக்கு இலவச அழைப்புகள் கிடையாது என்கிற அறிவிப்பை அறிவித்து, ஜியோ பயனர்களின் நம்பிக்கையை அண்மையில் ஜியோ நிறுவனம் உடைத்துவிட்டது. கடுப்பில் இருக்கும் ஜியோ பயனர்கள் வேறு நெட்வொர்க்கிற்கு மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் பயனர்கள், ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களை ஒருமுறை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்.

உஷார்: இந்த 19 ஆப்களில் ஒன்று வைத்திருந்தாலும் ஆபத்து உறுதி- உடனடியாக செயலிழக்க செய்யுங்கள்உஷார்: இந்த 19 ஆப்களில் ஒன்று வைத்திருந்தாலும் ஆபத்து உறுதி- உடனடியாக செயலிழக்க செய்யுங்கள்

ஏர்டெல் ரூ.169 ப்ரீபெய்ட் VS ஜியா ரூ.149 திட்டம்

ஏர்டெல் ரூ.169 ப்ரீபெய்ட் VS ஜியா ரூ.149 திட்டம்

ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி டேட்டா, 300 நிமிட ஐ.யூ.சி அழைப்பு என 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஏர்டெல் ரூ.169 ப்ரீபெய்ட் திட்டம் சற்று விலை கூடுதலாகத் தெரிந்தாலும் ஜியோவை காட்டிலும் நன்மைகள் அதிகமாக உள்ளது. ஏர்டெல் ரூ.169 ப்ரீபெய்ட் திட்டம் 28 ஜிபி டேட்டா சேவையை 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுடன் வழங்குகிறது என்பது சிறப்பு.

ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் VS ஜியா ரூ.222 திட்டம்

ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் VS ஜியா ரூ.222 திட்டம்

ஜியோவின் ரூ.222 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா, 1000 நிமிட ஐ.யூ.சி அழைப்பு என 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் 2 ஜிபி டேட்டா சேவையை 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுடன் வழங்குகிறது. இத்துடன் ரூ.4 லட்சம் மதிப்பிலான எச்.டி.எஃப்.சி லைஃப் ஆயுள் காப்பீடு, ஷா-அகாடமியின் 4 வாரக்கால இலவச கோர்ஸ் எனக் கூடுதல் நன்மையையும் கிடைக்கிறது.

ஆன்லைன் ஆர்டர் மூலம் ரூ.800-க்கு பதிலாக ரூ.80,000 அபேஸ்! உஷார் மக்களே!ஆன்லைன் ஆர்டர் மூலம் ரூ.800-க்கு பதிலாக ரூ.80,000 அபேஸ்! உஷார் மக்களே!

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் VS ஜியா ரூ.333 திட்டம்

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் VS ஜியா ரூ.333 திட்டம்

ஜியோவின் ரூ.333 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்ட 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் 3 ஜிபி டேட்டா சேவையை 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுடன் வழங்குகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் மற்றும் ஷா-அகாடமி சேவை கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் VS ஜியா ரூ.444 திட்டம்

ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் VS ஜியா ரூ.444 திட்டம்

ஜியோவின் ரூ.444 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா, 1000 நிமிட ஐ.யூ.சி அழைப்பு என 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் 1.5 ஜிபி டேட்டா சேவையை 82 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுடன் வழங்குகிறது.

ரூ.100 முதல் திட்டங்கள்: ஏர்டெல்லின் பலே அறிவிப்பு..!ரூ.100 முதல் திட்டங்கள்: ஏர்டெல்லின் பலே அறிவிப்பு..!

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் VS ஜியா ரூ.555 திட்டம்

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் VS ஜியா ரூ.555 திட்டம்

ஜியோவின் ரூ.555 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா, 3000 நிமிட ஐ.யூ.சி அழைப்பு என 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் 2ஜிபி டேட்டா சேவையை 82 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுடன் வழங்குகிறது. இது ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தை விட ரூ.56 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
These Airtel Preapid Plans Are The Best Replaceable Plans For Reliance Jio Users : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X