Home
News

இவ்ளோ கம்மி விலையில் ஓடிடி, எஸ்எம்எஸ், டெய்லி 2GB டேட்டா கிடைக்குதா? அசத்தும் 7 BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்..

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை இன்னும் வழங்கவில்லை என்றாலும் கூட கம்மி விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதேபோல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் அசத்தலான நன்மைகள் வழங்கும் பரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டெய்லி 2GB டேட்டா..அசத்தும் 7 BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும். மேலும் Arena மொபைல் கேமிங் சேவையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளன. இதுதவிர Arena மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்ஸ், EROS now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகல், ஹார்டி மொபைல் சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். அதேபோல் இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறைகிறது. இதுதவிர EROS NOW பொழுதுபோக்கு சேவைக்கான இலவச அணுகலை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் உள்ளன. அதேபோல் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். அதேபோல் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர BSNL ட்யூன்ஸ் மற்றும் லோக்துன் கன்டென்ட் (Lokdhun Content)ஆகிய கூடுதல் சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

டெய்லி 2GB டேட்டா..அசத்தும் 7 BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர BSNL ட்யூன்ஸ் மற்றும் மற்றும் சில கேமிங் சேவைகளை வழங்குகிறது இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையைத் தருகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை 40கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்கும் இந்த திட்டம். பின்பு ஸிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) மற்றும் கேம்ஆன் (GameOn) போன்ற சேவைகளையும் இலவசமாக வழங்குகிறது இந்த திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
These 7 BSNL Budget Price Prepaid Plans offer more benefits: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X